Monday 25th November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Category archives for: ஆன்மிகம்

சொல்லிலும் செயலிலும் விவேகம் நிறைந்த சுவாமி விவேகானந்தர்.!

நிரஞ்சனா சுவாமி விவேகானந்தர். பெயருக்கு ஏற்றபடி பேச்சியிலும் விவேகத்துடன் திகழ்ந்தவர். காந்தம் இரும்பை ஈர்ப்பது போல, ஆன்மிக நெறியில் உலகத்தையே தன் பக்கம் ஈர்த்தவர்.   எதிராளிகள் இவரை சீண்டினாலும், அவர்களுக்கான பதிலை அவர்கள் மனம் புண்படாதபடி சொல்லும் ஆற்றல் சுவாமியிடம் இருந்தது. 1891 ராஜஸ்தான் ஆல்வார் சமஸ்தானத்துக்குச் சென்றார் சுவாமி விவேகானந்தர். அங்கு மன்னர் மங்கள்சிங், விவேகானந்தரிடம், “விக்ரக  வழிபாட்டில் தமக்கு உடன்பாடியில்லை” என்று கூறினார். இதுவே வேறு ஒருவரிடம் இதுபோல் யாராவது சொன்னால் அங்கே […]

குடும்ப ஒற்றுமைக்கு அருளும் அருள்மிகு இருதயாலீஸ்வரர்.!

நிரஞ்சனா திருவள்ளுர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ளது இந்த திருக்கோயில். அரக்கோணம் செல்லும் ரயில் மூலமாக திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, ஒன்றரை கி.மீட்டர் தூரம் சென்றால் இருதயாலீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம். திருநின்றவூர்   திருநின்றவூர் என்றவுடன் உங்களால் ஓரளவுக்கு யூகிக்க முடியும், இந்த ஊருக்கு திருமகளின் ஆசியும் இருக்கிறது என்று. ஆம். மகாலஷ்மிக்கு திருமகள் என பெயரும் உண்டு. மகாலஷ்மி இந்த பகுதிக்கு வந்து நின்றதால்தான், திரு – நின்ற – ஊர் = திருநின்றவூர் என்று […]

நல்லவை யாவும் பெருக விநாயகப் பெருமானை வணங்குவோம்

நிரஞ்சனா தெய்வங்களை தரிசிக்க நாம் திருக்கோயில்களுக்குள் நுழையும்போது முதலில் நம்மை வரவேற்பது விநாயகர்தான். அதுபோல, யாகங்கள், சுபநிகழ்ச்சிகளின் தொடக்கம் போன்ற சுபகாரியங்களில் முதல் மரியாதை விநாயகப் பெருமானுக்குதான் தரவேண்டும். அவருக்கு நாம் தரும் மரியாதையை பொறுத்தே நமது எந்த செயல்களுக்கான வெற்றியும் அமைகிறது. நம்பிக்கை உள்ளவர்களை எந்த கணத்திலும் கைவிடாத கடவுள் தும்பிக்கைநாதனாம் கணபதி. தெய்வங்களுக்கு மட்டுமல்ல, பூலோக மக்கள் அனைவருக்கும் செல்ல பிள்ளையாக இருக்கிறார் பிள்ளையார். நள சக்கரவர்த்தி, சனீஸ்வரரால் அவதிப்பட்டு திருநள்ளாறு சென்று, சனி […]

மகான் ஸ்ரீரமண மகரிஷி

நிரஞ்சனா ஜீவராசிகள் அனைத்துக்கும் ஒரு குணம், உடல் அமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஆண் யானைக்கு தந்தம் இருக்கும், பெண் யானைக்கு தந்தம் இருக்காது என்பது பொதுவான கருத்து. ஆனால் ஆப்பிரிக்கா யானைகளில் ஆண் மற்றும் பெண் யானைகளுக்கும் தந்தங்கள் இருக்கின்றன என்ற தகவல் இருக்கிறது. ஆனால் குணங்களை மட்டும் அந்தந்த ஜீவராசிகளுக்கு ஏற்ப இறைவனின் தந்துள்ளான். மனிதன் என்ற ஜீவனுக்கு உடல் அமைப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், உருவ அமைப்பும், குணமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். […]

விரோதிகளின் தொல்லை தீர்க்கும் வைகுண்டமூர்த்தி சுவாமி

Niranjhana வைகுண்டமூர்த்தி சுவாமி ஆலயம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியம் என்ற ஊருக்கு 1கி.மீதொலைவில் கோட்டையூர் மெயின் சாலையில் உள்ளது. இறைவனின் படைப்பில் அனைத்து ஜீவராசிகளும் உருவாகிறது. அப்படி இருக்கும்போது ஏன் சிலர் தெய்வ நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள்? என்று பலருக்கு சந்தேகம் இருக்கிறது. அந்த சந்தேகத்தை ஒரு மகானிடம் கேட்டார் ஒருவர். “ஒரு மரத்தில் எத்தனையோ பழங்கள் இருக்கிறது. அத்தனை பழங்களிலும் விதைகள் இருக்கிறது. அத்தனை விதைகளும் மரங்களாக மாறியா விடுகிறது? இல்லை. […]

உடல் ஆரோக்கியத்தையும் வசீகரத்தையும் தரும் பிருகு முனிவர் சொன்ன எளிய மந்திரம்

Article by: Niranjhana எத்தனை கோடி சம்பாதித்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் முழுவதும் புண் வைத்துக்கொண்டு பட்டுதுணியில் சட்டைபோட்டாலும் மனதில் தெம்பு இருக்குமா? நிச்சயம் இருக்காது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தில் வஞ்சனையும், பொறாமையும், அடுத்தவர்களை கெடுக்கும் துர்புத்தியும் இருந்தாலும் உடல் என்ற கோவிலில் இருந்து சந்தோஷம் என்கிற இறைவன் வெளியேறி விடுகிறான். இதனால் அழகாக பிறந்தவர்களும்  தனக்கதானே சூனியம் வைத்துக்கொள்வதுபோல தங்களுடைய தீய எண்ணத்தால் பாதிப்படைகிறார்கள். அவர்களின் […]

உங்கள் கை இராசியானதா?

Niranjana நாம் செய்யும் நற்காரியங்களை தொடங்கி வைக்க வேண்டும் என்றால், அதற்கு முதலில் நாம் கைராசிகாரர்களின் கைகளால் தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்புவோம். பொதுவாக பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க, பெற்றோர்களின் கைகளால் எதை வாங்கினாலும் விருத்தியடையும். ஆனால் மற்றவர்களின் கைகளால் நல்ல காரியம் தொடங்க வேண்டும் என்றால், அவர்கள் கைராசிகாரர்களாக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். கை இராசி என்பது உண்மையா? அல்லது அவரவர்களின் தலையெழுத்தபடிதான் அமையுமா? என்றால், தலையெழுத்து நன்றாக இருந்தால்தான் […]

கோடி வரங்களை தரும் தஞ்சை கோடியம்மன்

Niranjana தஞ்சை மாவட்டத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு கோடியம்மன், தஞ்சையின் எல்லையில் காவல் தெய்வமாகவும் இருக்கிறார். அற்புதம் நிறைந்த கோடியம்மன் தோன்றிய வரலாறு என்ன என்பதையும், சோழ மன்னரின் நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று எண்ணி, எதிரிநாட்டு அரசரான சத்துருகோபன் திட்டமிட்டு போருக்கு வந்தபோது, சத்துருகோபனுடன் போரிடும் அளவுக்கு போதிய நிதி நிலை இல்லை என வருந்திய சோழ மன்னரை, எவ்வாறு கோடியம்மன் காப்பாற்றினார் என்பதையும் இன்று நாம் தெரிந்துக்கொள்வோம். அழகாபுரி அழகாபுரியில் முனிவர்கள், நாட்டுநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் […]

சிவபுராணம் சொல்லும் சிறப்பான பரிகாரங்கள்

Niranjana   இறைவனை வணங்கிட நாள்-நேரம் பார்க்க தேவையில்லை. எந்த சமயத்திலும் இறைவனை வணங்கலாம். ஆனாலும் இறைவனுக்குரிய மிகவும் விசேஷமான தினங்களில் வணங்கினால், வேண்டியது வேண்டியபடி விரைவில் கிடைத்திட வழிவகுக்கும். எந்தெந்த தெய்வங்கள் என்னென்ன பலன்களை நமக்கு தந்திடும்? என்னென்ன தானங்கள் செய்வதினால் என்னென்ன நற்பலன்கள் கிட்டிடும்? காலையில் எந்த திசையை நோக்கி கண் விழித்திட வேண்டும்?  எந்த திசையை முதலில் பார்க்கக் கூடாது.? போன்ற சாஸ்திர விஷயங்களை சிவபுராணத்தில் சூதமா முனிவர் அழகாக சொல்லி இருக்கிறார். […]

இராமருடன் மோதிய ஆஞ்சநேயர்

நிரஞ்சனா  ஸ்ரீ இராம பக்தரான ஆஞ்சநேயர், அதே இராமனிடம் மோதினார் என்பதை அறியும்போது ஆச்சரியமாகவே இருக்கும். விதியின் விளையாட்டில் இருந்து யார்தான் தப்பிக்க முடியும்?. யாரும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கமுடியாது, அதுபோல தொடர்ந்து ஒருவருக்கு எதிரியாகவும் இருக்க முடியாது. காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும். இந்த விதியின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அதனால்தான் நாரதமுனிவரின் சூழ்ச்சியில் ஸ்ரீஇராமரும் அனுமனும் மோதிக் கொண்டார்கள்.  அந்த சம்பவத்தை பற்றி தெரிந்துக் கொள்வோம். உலகம் சுபிட்சமாக இருக்கவேண்டும் என்று நினைத்த […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech