Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம்

திருமணம் என்கிற பந்தம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லக்கூடிய முக்கிய நிகழ்வு. இது நம் அடுத்த்தலைமுறைக்கு வழிவகுக்கும் ஒரு அற்புத தருணம். அத்தகைய திருமணம் ஒருவருக்கு எளிதாக அமைந்துவிடுகிறது. பலருக்கோ திருமண தடை ஏற்பட ஏதேதோ காரணங்கள் உருவாகிறது. நல்ல திருமண வாழ்க்கையில் நல்ல துணை அமைவதற்கு ஜாதக ரீதியாக பார்த்தால் சில முக்கிய கிரகங்களும் துணையாக தேவைப்படுகிறது. அவை முறையே செவ்வாய், சுக்கிரன், சூரியன் குரு, ராகு, கேது. இந்த ஆறு கிரகங்கள் நல்ல வாழ்க்கை துணை அமைவதற்கு அதிமுக்கிய காரணக்கிரங்களாக இருக்கிறது. இவை தவிர சந்திரன், புதன், சனி ஆகிய கிரகங்களும் முக்கியம்தான் என்றாலும் இவை தனிநபர் ஜாதக தன்மைன்னு ஏற்ப பலன் தரும்.

இவற்றில் செவ்வாயை எடுத்துக்கொண்டால் ராசி மண்டலத்தில் அல்லது ராசிக்கட்டத்தில் முதலில் உள்ள மேஷத்தின் வீடும், மாங்கல்ய பலத்தை காட்டும் எட்டாம் வீடான விருச்சிக ராசியும்  செவ்வாயின் வீடாக முதலிடம் பெறுகிறது. 

மேஷத்தின் இரண்டாம் வீடு சுக்கிரன் வீடாகிறது. இரண்டாம் வீடு குடும்பம், அந்த குடும்பத்தை நடத்திட பணவசதி போன்ற விஷயங்களுக்கு காரணமான சுக்கிரனின் வீடு அமைகிறது. அதுபோல ராசிக்கட்டத்தின் ஏழாம் வீடும் சுக்கிரனின் வீடுதான் இது கணவன்-மனைவியை குறிப்பிடுகிற களத்திரஸ்தானம் எனப்படுகிறது.

அடுத்து சூரியன். இவர் ராசிக்கட்டத்தின் ஐந்தாம் வீட்டுக்குரியவராக வருகிறார். ஐந்தாம் வீடு பிள்ளைபேற்றை, குழந்தை பாக்கியத்தை முக்கியமாக காட்டுகிறது.

அடுத்தது குரு பகவான். இவர் ராசிக்கட்டத்தின் அல்லது ராசி மண்டலத்தின் ஒன்பது மற்றும் பண்ணிரெண்டாம் வீட்டுக்குரியவராக வருகிறார். ஒன்பதாம் இடம் எதை குறிக்கிறது? பாக்கியஸ்தானம் என்கிற சொத்து, சுகத்தை பற்றி எடுத்துக்காட்டுகிறது. ஒரு குடும்பஸ்தனுக்கு சொத்து, சுகமும் முக்கியம் அல்லவா?. அடுத்து பண்ணிரெண்டாம் இடம். இது சயனஸ்தானம் என்கிறது. சுகமான – நிம்மதியான தூக்கம், திருப்திக்கரமான தாம்பத்திய வாழ்க்கை இவற்றை குறிப்பிடுவது பண்ணிரெண்டாம் இ்டம். ராசிக்கட்டத்தில் இந்த பண்ணிரெண்டாம் வீடும் குரு பகவானுக்குரிய வீடாக இருக்கிறது. அதனால்தான் என்னவோ, ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமண வரன் பார்க்கலாம் என்கிற எண்ணம் வந்த உடன், முதலில் தெரிந்துக்கொள்ள விரும்புவது குருவை பற்றிதான். அதனால் குரு பலன் வந்துவிட்டதா? என்று முதலில் திருமண வயதில் உள்ள பெண் அல்லது ஆணின் ஜாதகத்தில் இந்த குரு பலன் பற்றி பார்ப்பார்கள்.

ஆக, ஒரு ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு மேற்கண்ட செவ்வாய், சுக்கிரன், சூரியன் குரு மிக,மிக முக்கிய கிரகங்களாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், திருமணத்திற்கு எந்த வகையிலேயோ தடை ஏற்படுகிறது, எந்த வரனும் சரியாக அமையவில்லை, நம் ஜாதகத்தை பார்த்த உடன் திருமணத்திற்கு மொக்கையான காரணத்தை சொல்லி நிராகரித்து விடுகிறார்கள், நல்ல வரன் அமைந்து கடைசி நேரத்தில் தட்டிப்போகிறது, திருமண சாப்ட்வேர் கூட, இது தோஷ ஜாதகம் என்று தள்ளிவிட்டு சதி செய்கிறது போன்ற காரணங்களுக்கு  மேற்சொன்ன கிரகங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. அவற்றில் முதல் மூன்று இடங்களில் இருப்பது செவ்வாய் மற்றும் ராகு, கேது.

இதில், நம் ஸ்ரீதுர்காதேவி உபாசகர், ஜோதிடர் திரு. ஜி.கிருஷ்ணாராவ் அவர்கள், செவ்வாய் தோஷம் பற்றி இங்கே பேசுகிறார். செவ்வாய் தோஷம் என்பது உண்டு. ஆனால் அதற்கு விதிவிலக்கும் உண்டு. அதுத்தெரியாமல் பலர் செவ்வாய் தோஷம், செவ்வாய் தோஷம் என்று நல்ல வரன்களை கைநழுவி விட்டுவிடுகிறார்கள் என்கிறார். செவ்வாய் தோஷம் பற்றி அவர் பேசுவதை இங்கே காணொளியாக தந்திருக்கிறோம். உலகம் முழுவதும் உள்ள நம் பக்தி பிளானெட் நேயர்கள் மற்றும் வாசகர்கள் மேலும் இது போன்ற ஜோதிட நிகழ்ச்சிகளை கண்டு பயன்பெற நமது YouTube Channel-ல் நிகழ்ச்சிகளை தந்து வருகிறோம். அவற்றை கண்டு, கேட்டு ரசித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி வணக்கம். 

ஜி.விஜய் கிருஷ்ணாராவ்

ஆசிரியர்





 

 

 

 

 

 

 

 

 

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2024 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Mar 20 2024. Filed under Bhakthi planet, Headlines, Home Page special, Video, செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech