Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: April, 2014

எனது சகோதரர் பாஜகவில் சேர்ந்தது கவலை அளிக்கிறது: மன்மோகன் சிங் வேதனை

பிரதமர் மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி நேற்று பாரதீய ஜனதாவில் சேர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. தேர்தல் நடந்து வரும் சூழலில் பிரதமரின் சகோதரரே,  பாஜகவில் சேர்ந்துள்ளது காங்கிரஸ் கட்சியிநரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது தல்ஜீத் சிங் கோலி, பாஜகவில் சேர்ந்தது குறித்து .மன்மோகன் சிங் குடும்பத்தினர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இது குறித்து தல்ஜீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில், தல்ஜீத் சிங்கின் முடிவு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அது அவருடைய தேர்வு. […]

அமலாபாலுடன் விரைவில் திருமணம்: டைரக்டர் விஜய் அறிக்கை

டைரக்டர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டு உதவிய எல்லோருக்கும் நன்றி. நான் இதுவரை தனியாக இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளும் நிலையை எட்டி உள்ளேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஆமாம் என் வாழ்க்கை துணையை தேடிய நிலை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. என் வாழ்க்கை துணையாக நடிகை அமலாபாலை கண்டறிந்து உள்ளேன். அமலாபால் மிகவும் அழகான இதயத்தை கொண்டவர். அவரை மிகவும் காதலிக்கிறேன். கடைசி வரை அவருக்கு […]

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, ஜூவாலா-அஷ்வினிக்கு வெண்கலம்

ஜிம்சியான், ஏப். 26- கொரியாவின் ஜிம்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, ஜூவாலா, அஷ்வினி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் 18 வயதான பி.வி.சிந்து, ஆல் இங்கிலாந்து சாம்பியன் ஷிஜியானை (சீனா) எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் கடுமையாகப் போராடிய பி.வி.சிந்து, 21-15, 20-22, 12-21 என்ற செட்கணக்கில் தோல்வியைத் தழுவினார். இதனால் அவர் வெண்கலம் வென்றார். இதற்கு முன்பு மூன்று முறை […]

வதோதராவில் தொடரும் முதலைகள் அட்டகாசம்

வதோதரா, ஏப். 26- குஜராத் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான வதோதராவில் ஓடும் விஷ்வாமித்ரி நதிக்கரையை ஒட்டி நவிநகரி என்ற குடிசைப் பகுதி உள்ளது. நேற்று அந்தப் பகுதியில் வசித்து வந்த 60 வயது முதியவர் ஒருவர் மதியம் 2.30 மணி அளவில் ஆற்றுப்பக்கம் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள முதலை ஒன்று அவரைக் கடித்துக் குதறியதில் அவர் இறந்துள்ளார். அந்த வழியே சென்ற வழிப்போக்கர் ஒருவர் இதனைப் பார்த்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தர அவரகள் சம்பவ இடத்திற்கு […]

மாயமான மலேசிய விமானம் கடலுக்கு அடியில் தேடும் பணி முடிவுக்கு வருகிறது

பெர்த் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.   இன்று 28-வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. இந்த நிலையில் இந்திய 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி நடைபெர்று வருகிறது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும்  இது […]

மலேசிய விமானத்தை தேடும் பணிக்கு ஒபாமா ஆதரவு

கோலாலம்பூர், ஏப். 26- மலேசியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற எம்.எச்.370 என்ற பயணிகள் விமானம் நடுவானில் மாயமானது. உயர்தொழில்நுட்பம் கொண்ட ரேடார்கள் உதவியுடன் விமானங்கள் மற்றும் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் தொடர்ந்து தேடும் பணி ஈடுபட்டு வருகின்றன. விமானம் விழுந்ததாக கூறப்படும் இந்திய பெருங்கடல் பகுதியில் 95 சதவீத பகுதிகளில் தேடும் பணி முடிவடைந்துவிட்டது. இருப்பினும் விமானத்தின் அடிச்சுவட்டைக்கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் காணாமல் […]

கோச்சடையான் படத்தை மோடி பார்க்கிறார்

கோச்சடையான் படத்தை நரேந்திரமோடி பார்க்கிறார். குஜராத்தில் இதற்கான சிறப்பு காட்சிக்கு ரஜினி ஏற்பாடு செய்துள்ளார். ரஜினிக்கு நரேந்திர மோடிக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. ரஜினி உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது மோடி நேரில் போய் நலம் விசாரித்தார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த போதும் ரஜினியை அவரது வீட்டில் போய் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் மோடி வெற்றி பெற ரஜினி வாழ்த்து தெரிவித்தார். […]

கமலஹாசனின் உத்தம வில்லன் செப்டம்பர் 10-ந் தேதி ரிலீஸ் ஆகிறது

சென்னை கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.  இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு […]

படப்பிடிப்பில் தாக்கிய குத்து சண்டை வீராங்கனை; கீழே விழுந்த நடிகை பிரியங்கா சோப்ரா

மும்பை ஒலிம்பிக்கில் குத்து ச்ண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் வீராங்கனை மேரி கோம் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை தழுவி மேரி கோம் என்ற  இந்திப்படம் எடுக்கப்படுகிறது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா குத்துசண்டை வீராங்கனையாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வடகிழக்கு மாநில குத்துச்சண்டை வீராங்கனை ஒருவரும் நடிக்கிறார். இந்த படத்தை சஞ்சய்லீலா பஞ்சாலி தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தர்மசாலாவில் நடந்தது.  அப்போது பிரியங்காவுடன் குத்துசண்டை வீராங்கனை இருவரும் […]

மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை

வானில் பறந்தபோது 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம்குறித்த விளக்க அறிக்கையை விரைவில் வெளியிட இருப்பதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்சுக்குசொந்தமான போயிங் விமானம், 239 பயணிகளுடன் மலேசியதலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீனாவுக்கு பறந்து சென்றபோதுமாயமானது. விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்ததாஅல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு வீழ்த்தப்பட்டதா என்றுபல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. எந்த கேள்விகளுக்கும்பதில் கிடைக்காத நிலையில், விமானத்தை தேடும் முயற்சிகளும்இதுவரை பலனளிக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போனவிமானம் குறித்த விளக்க அறிக்கையை விரைவில் வெளியிடஇருப்பதாக மலேசிய […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech