நிரஞ்சனா இத்திருக்கருகாவூர்- திருக்களாவூர் மாயவரம் திருக்குடந்தை போகும் பாதையில் பாபநாசத்தில் உள்ளது. மாதவீச்வரர் உருவான சம்பவம் முல்லைகாடாக இருந்தது இந்த இடம். முல்லை காட்டில் மணலால் சுயம்புவாக தோன்றியது ஓர் லிங்கம். இந்த லிங்கத்தை சுற்றி முல்லைகொடிகள் படர்ந்து அந்த மணல் லிங்கத்தையே மறைத்திருந்தது. இதனால் இன்றும் அந்த மணல் லிஙகத்தில் முல்லைகொடியின் அடையாளம் தெரியும். இப்படி பல யுகங்களுக்கு முன்பே தோன்றிய இந்த லிங்கத்தின் பெயர் முல்லைவனநாதர் என்றும் மாதவீச்வரர் என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பரஷாம்பிகை […]
நிரஞ்சனா காங்கேயம்- திருப்பூர் நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தொலைவில் இருக்கிறது சிவன்மலை குமரப்பெருமான் ஆலயம். சிவன்மலை உருவான கதை தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன். இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு என உலோகங்களால் மிக பெரிய கோட்டைகளை கட்டினார்கள். இந்த கோட்டை எந்த நேரத்திலும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் விமானம் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. கோட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போதும் அசுர […]
நிரஞ்சனா நம் முன்னோர்களுக்கு சாபம் ஏற்பட்டு இருந்தால் அவர்களின் வம்சத்தில் பிறப்பவர்களுக்கு சாபம் தொடரும். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு கங்காதரேஸ்வர் ஆலயம் இதற்கு பரிகார கோயிலாக இருக்கிறது. இஷ்வாகு வம்சத்தை சார்ந்த பரத கண்டத்தையாண்ட பகீரதன் என்ற அரசர், நீதியை நிலைநாட்டி பல நன்மைகளை தன் நாட்டு மக்களுக்கு செய்து வந்தார். பகீரதனால் வந்த கங்கை நதி இந்த பகீரதன்தான் கங்கை, பூமிக்கு வர காரணமாய் இருந்தவர். முன்னொரு சமயத்தில் சகரன் என்ற அரசர் அசுவமேத […]
நிரஞ்சனா ஒருசமயம் பிரம்மன் காஞ்சி தலத்திற்கு வந்து காமாட்சி அம்மனை தரிசிக்க சென்றார். அம்மனை தரிசிக்க வேண்டும் என்ற அவசரத்தில் காமாட்க்ஷி ஆலயத்தில் இருக்கும் காயத்தரி மண்டபத்தை மிதித்து விடுகிறார். இதனால் பிரம்மனின் கண்பார்வை குறைந்துவிடுகிறது. திரும்ப சரியான பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்று சரஸ்வதிதேவியிடம் கேட்டார். “மறுபடியும் காஞ்சி தலத்திற்கே சென்று கண்பார்வை கிடைக்க வேண்டுங்கள். நிச்சயம் காமாட்க்ஷி மனம் இறங்கி உங்களுக்கு கண் பார்வையை கொடுப்பார்.” என்றாள் சரஸ்வதி. சரஸ்வதி தேவி […]
நிரஞ்சனா செங்கல்பட்டு மாவட்டம் சென்னை மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில். ஒருசமயம் விருத்தாசலத்தில் சிதம்பர சுவாமிகள் என்பவர் சமாதி நிலையில் தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரின் தவத்தில் முருகபெருமான் காட்சி தந்தார். திடுக்கிட்டு கண் திறந்து பார்த்த சிதம்பர சுவாமிகள், “இதற்கு என்ன காரணம்.? கனவில் முருகப் பெருமான் வந்தாரே. தூக்கத்தில்தானே கனவு வரும். நாம் தியானம்தானே செய்தோம். அப்படியானால் என் மனம் முருகனை நினைத்து தியானிக்காமல் அமைதியாக உறங்கியதா?.” என்று […]
நிரஞ்சனா மயிலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கு காரணமே கற்பகவல்லி அம்பிகையால்தான். அன்னை மயிலாக உருவெடுத்து சிவபெருமானை நினைத்து தவம் செய்தாள். அதனால் இந்த பகுதிக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. இத்திருக்கோயிலுக்கு உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால் உடல்நலம் இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்தால் நலம் பெறுவார்கள். நம்முடைய எண்ணங்களை வாய் திறந்து ஈசனிடம் சொல்ல வேண்டியதில்லை. மனதில் நினைத்தாலே நிறைவேறும் என்கிறார் சேக்கிழார். நாம் நம்முடைய வேண்டுதலை மனதில் நினைத்தப்படி இந்த கோயிலுக்குள் நுழைந்தாலே நினைத்தது நிறைவேறும். […]
நிரஞ்சனா சென்னை மாநகரையொட்டி உள்ள ஊர் திருவொற்றியூர். இங்கு இருக்கும் இறைவனின் பெயர் தியாகராசர். அன்னையின் பெயர் வடிவுடை அம்மன். ஒரு சமயம் தச்சனின் யாகத்தீயில் விழுந்து உயிரைவிட்டாள் பராசக்தி. அவள் உடல் பாதி கருகியும் பாதி கருகாமலும் இருந்தது. தேவியின் உடலை பார்த்து சினம் கொண்ட சிவன், அன்னையின் உடலை தன் தோலில் போட்டு கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். இதை கண்ட ஸ்ரீமந் நாராயணன் சிவனின் ஆவேச நடனத்தை கண்டு பதறினார். இதனால் தனது சக்கரப் […]
நிரஞ்சனா கடம்பந்துறை என்ற இத்தலம் இன்று குளித்தலை என அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் இருந்து முப்பது கி.மீ தொலைவில் இந்த கோயில் இருக்கிறது. காசிக்கு போனால் பாவம் தொலையும் என்பது போல் இந்த ஸ்தலத்திற்கு வந்தால் காசிக்கு வந்த புண்ணியம் கிடைக்கும் என்கிறது ஸ்தலபுராணம். ஆம்.. காசியில் இருக்கும் சிவாலயம் வடக்கு நோக்கி அமைந்திருப்பது போன்று, இந்த ஆலயமும் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அதனால் இந்த திருக்கோயில் தட்சிணகாசி என்ற பெயரும் பெற்றிருக்கிறது. இந்த […]
நிரஞ்சனா மதுரையிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள திருப்பூவணம் என்ற சிற்றூரிலிருந்து ஓன்றரை கிமீ தூரத்தில் மடப்புரம் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெயர் “அடைக்கலம் காத்த அய்யனார் – பத்ரகாளியம்மன் திருக்கோயில்.” பிரம்மன், விஷ்ணு, சிவனுடன் கௌரி அம்மனும் ஒரு காட்டுபகுதியில் வேட்டையாட வந்தார்கள். அது அடர்ந்த காட்டு பகுதி. இனி காட்டுக்குள் செல்ல செல்ல சூரிய வெளிச்சம் கூட இல்லாமல் இருக்கும். ஆகவே நீ இங்கேயே இரு என்று சிவபெருமான் கௌரியம்மனை கேட்டுக்கொண்டார். அம்மனின் காவலுக்கு அய்யனாரை அங்கு நிறுத்தினார் […]
விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 7 சென்ற பகுதியை படிக்க நிரஞ்சனா சேனன் என்ற அரசன் போர்களத்தில் எதிரியிடம் சண்டையிட்டு தோற்று, எங்கு தன்னையும் தன் மனைவியையும் கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தில், காட்டில் தன் பத்தினியுடன் மறைந்து வாழ்ந்து வந்தான். இராஜயோக வாழ்க்கையை அனுபவித்த அரசனின் மனைவி, காட்டில் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள். அதை தன் கணவரிடம் சொல்லி வருந்தினாள். “ஏன் காட்டில் வாழ்வதாக நினைக்கிறாய். இதை அரண்மனையாக நினைத்து விடு. நேற்றுவரை […]