Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

பேர் சொல்லும் பிள்ளை; வரம் தரும் கர்ப்பரஷாம்பிகை

நிரஞ்சனா

இத்திருக்கருகாவூர்- திருக்களாவூர் மாயவரம் திருக்குடந்தை போகும் பாதையில் பாபநாசத்தில் உள்ளது.  

மாதவீச்வரர் உருவான சம்பவம்

முல்லைகாடாக இருந்தது இந்த இடம். முல்லை காட்டில் மணலால் சுயம்புவாக தோன்றியது ஓர் லிங்கம். இந்த லிங்கத்தை சுற்றி முல்லைகொடிகள் படர்ந்து அந்த மணல் லிங்கத்தையே மறைத்திருந்தது. இதனால் இன்றும் அந்த மணல் லிஙகத்தில் முல்லைகொடியின் அடையாளம் தெரியும். இப்படி பல யுகங்களுக்கு முன்பே தோன்றிய இந்த லிங்கத்தின் பெயர் முல்லைவனநாதர் என்றும் மாதவீச்வரர் என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்பரஷாம்பிகை இத்திருதலத்திற்கு வந்தாள்

எப்படி வானத்தில் சந்திரன் வந்தவுடன் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகிறதோ அதுபோல் இந்த திருக்கருகாவூருக்கு சிவபெருமான் வந்தவுடன் அன்னை சக்திதேவியு்ம், அம்மையப்பனை தொடர்ந்து விநாயகரும் வந்துவிட்டார். அம்பிகை இங்கே கருக்காக்கும் அம்மன் என்றும் கர்ப்பரஷாம்பிகை என்றும் கரும்பனையாளம்மை போன்ற பெயர்களுடன் திகழ்கிறாள். ஆனால் இந்த அம்மனை பக்தர்கள் கருக்காக்கும் அம்மன், கர்ப்பரஷாம்பிகை என்றே அழைக்கிறார்கள்.

அம்மனின் மகிமை முனிவரின் சாபத்தால் தெரிந்தது

திருக்கருகாவூரில் வித்யாசாகர் என்கிற சக்தி உபாஸகருக்கு நல்ல குணவதியான மனைவி இருந்தாள். அவள் கர்ப்பவதியாக இருந்த சமயம் ஒருநாள் வீட்டில் அதிக வேலை காரணமாக சோர்வுற்று சற்று ஓய்வெடுத்தாள். வித்யாசாகர் வேலை காரணமாக வெளியே சென்று இருந்தார். அப்போது அவ்வீட்டுக்கு வெளியே ஊர்த்வ முனிவர் வந்து நின்று, “வித்தியாசாகர்” என்று அழைத்தார். நிறைமாத கர்ப்பவதியாக இருப்பதாலும் சோர்வாக இருந்த காரணத்தாலும் வித்யாசாகரின் மனைவி எழுந்திருக்க முடியாமல் படுத்து கொண்டே, “அவர் வீட்டில் இல்லை. நீங்கள் யார்..? எந்த காரணத்திற்காக வந்துள்ளீர்கள் என்று சொன்னால் அவர் வந்தவுடன் சொல்கிறேன்” என்று வீட்டுக்குள் இருந்தபடி சொன்னாள் அந்த பெண்.

அவள் கர்ப்பவதி என்று அறியாத ஊர்த்வ முனிவர், வாசலில் இருந்தப்படி அவர் பார்த்தபோது அந்த பெண்ணின் கால்கள் மட்டும் தெரிந்ததால், அவள் எழுந்து வந்து பதில் சொல்லாமல் ஒரு குடும்பப் பெண் திமிராக படுத்தப்படி பதில் சொல்கிறாளே என்கிற கோபத்தில், “பெண்ணே.. படுத்திருந்தபடி பதில் சொல்கிறாயா? உனக்கு அவ்வளவு திமிரா? கர்வத்தால் வம்சம் அழிந்தோர் வரிசையில் நீ சேர்வாயாக. உனக்கு வாரிசு என்பதே கிடையாது.” என்று சபித்துவிட்டு சென்று விடுகிறார் முனிவர்.

தன் கணவர் வித்யாசாகர் வீடு வந்து சேர்நதவுடன் முனிவரின் சாபத்தை சொல்லி கதறினாள். தன் வீட்டுக்கு வந்த முனிவர் ஊர்த்வர் என்பதை விசாரித்து, முனிவரிடம் சென்று, “என் மனைவி கர்ப்பவதியாக இருக்கிறாள். வீட்டில் அதிக பணிசுமையின் காரணமாக சோர்வடைந்து படுத்திருந்தாள். தாங்கள் என் வீட்டுக்கு வந்தபோது அவளால் எழுந்திருக்க முடியாமல்தான் படுத்து கொண்டே தங்களுக்கு பதில் சொன்னாலே தவிர, அவள் அகங்காரம் கொண்டவள் அல்ல. விருந்தினரை மதித்து உபசரிக்கும் பண்பானவள்.” என்று விளக்கமாக கூறி தன் வீட்டுக்கு முனிவரை அழைத்து வந்தார் வித்யாசாகர்.

முனிவரை கண்ட உடன் அந்த பெண்மணி, “சுவாமி என்னை மன்னிக்கவும் நான்……“ என்று பொங்கி வந்த அழுகையால் வார்த்தை வராமல் அழுதாள். அவளை கண்ட முனிவர், மனவேதனை அடைந்து, “மகளே…உன் நிலைமையை சரியாக புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு சபித்துவிட்டேன்.” என்று வருந்தினார்.

“சுவாமி… தயவு செய்து சாபத்தை நீக்குங்கள். எங்கள் வம்சம் தழைக்க வேண்டாமா?” என்றார் வித்தியாசாகர்.

“பரமனே சாபம் கொடுத்தாலும் அதை அவர் திரும்பப்பெற முடியாது. அப்படி இருக்கும் போது, சபித்த நான் எப்படி திரும்பபெற முடியும்.? ஒரு வழி சொல்கிறேன். இந்த ஊரில் இருக்கும் கர்ப்பரஷாம்பிகை கோயிலுக்கு சென்று அம்மனை வணங்கி வேண்டுங்கள். நிச்சயம் அவள் உங்கள் வம்சம் வளர வழி அமைப்பாள்.” என்று சொல்லி விடைப்பெற்றார் முனிவர்.

முனிவர் சொன்னது போல் தம்பதியினர் அம்பிகையின் திருக்கோயிலுக்கு விரைந்து வந்து, “தாயே என் மனைவி வயிற்றில் இருக்கும் எங்கள் வாரிசுக்கு எந்த தீங்கும் இல்லாமல் இருக்க வேண்டும். அவளுக்கு சுகபிரசவம் ஆகவேண்டும். குழந்தை தீர்காயுசுடன் வளர வேண்டும்.” என்று கண்ணீருடன் வேண்டினர்.

அப்போது ஒரு பெண்மணி நெற்றி நிறைய குங்குமத்துடன் தோன்றி வித்தியாசாகரிடம், “தம்பி.. நீ எதற்கும் கவலைப்படவேண்டாம். இந்த நெய்யை தொடர்ந்து 49 நாட்கள் உன் மனைவியை சாப்பிட்டு வர சொல். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் நேராமல் பிறந்து, தீர்காயுடன் வளரும்” என்று கூறினாள்.

அந்த பெண்மணியிடம் இருந்து நெய்யை வாங்கி கருக்காக்கும் அம்மன் கருவறையை நோக்கி, “அம்மா.. இந்த பிரசாதம் நீயே வந்து தந்தாக எண்ணி பெறுகிறோம்.” என்று கூறி திரும்பினார்கள். நெய்யை தந்த அந்த பெண்மணி அங்கில்லை. பிரசாதம் தந்து நம்பிக்கையான வார்த்தை சொன்னவருக்கு நன்றி சொல்ல மறந்தோமே என்று அந்த பெண்மணியை கோயில் முழுவதும் தேடினார்கள். எங்கும் அந்த பெண்மணி கண்ணில்படவில்லை. திரும்ப கர்ப்பரஷாம்பிகையை வணங்க சென்றார்கள் வித்யாசாகர் தம்பதியினர். அப்போது அவர்கள் காண்பது என்ன கனவா? என்றே தெரியாமல் திகைத்தார்கள். ஆம்… அந்த பெண்மணியின் முகமும் கருவறையில் இருக்கும் அம்மனின் முகமும் ஒன்றாகவே இருந்தது.

தம்பதியினர் உண்மை உணர்ந்தார்கள். தங்களிடம் நேரடியாக பேசி நெய் பிரசாதம் தந்தது அன்னை கர்ப்பராஷாம்பிகையே.

தங்களுக்காக  அம்பிகையே நேரில் வந்தாளே என்று ஆனந்த கண்ணீருடன் புறப்பட்டார்கள். 49நாட்கள் அம்மன் தந்த நெய்யை சாப்பிட்டு அழகான குழந்தையை பெற்றெடுத்தாள் வித்தியாசாகரின் மனைவி.

வணங்கும் முறை

இந்த கோயிலில் இருக்கும் கற்பக விநாயகருக்கு முதலில் அருகம்புல்லால்  மாலை அணிவித்து மாதவீச்வரருக்கு முல்லை அல்லது மல்லிகை பூக்களை சமர்பித்துவிட்டு, கர்ப்பராஷாம்பிகையை வணங்கினால், வணங்குபவர்களின் வம்சம் தழைக்கும். எந்த ஆபத்தும் நேராமல் காப்பாள் அன்னை. குழந்தை பாக்கியம் தாமதமாகும் பெண்கள், இந்த ஆலயத்தில் பணம் கட்டினால் பிரசாதமாக தரப்படும் நெய்யை வாங்கி 49 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாய்மை அடைவார்கள். அந்த கர்ப்பத்தை கர்ப்பரஷம்பிகையே காத்து வருவாள். நம்பிக்கையுடன் சென்று வணங்குங்கள் பேர் சொல்லும் பிள்ளையை பெறுங்கள்.

© 2011  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 1 2011. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech