நிரஞ்சனா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அல்லது மலைக்கோட்டையில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து உறையூர் வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஏறி, நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்கி, பிறகு இங்கிருந்து சிறிது தூரத்தில் மேற்கு நோக்கி நடந்தால் வெக்காளியம்மன் கோவிலை அடையலாம். அன்னை சக்திதேவி தாயாக இருந்து தன் பக்தர்களை காக்கிறாள். அதுபோலேவே, வெக்காளியம்மனாக வீற்றிருக்கும் அம்பாள், தன் நலனைவிட அவளின் பிள்ளைகளான நமது நலனே பெரியேதேன நமக்கு நல்லவழி காட்டுவதே கடமை என, […]
Written by Niranjana நல்ல வெளிச்சம் இல்லாத இடத்திலும், இருட்டாக இருக்கிறபோதும் உணவு எதுவும் சாப்பிடக் கூடாது என்பது சாஸ்திர விதிமுறை. இன்று, விஞ்ஞானம் என்று சொல்வதை அன்றைய நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்றார்கள். வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் சாப்பிடும் போது, உணவில் ஏதேனும் பூச்சிகள் விழுந்தால் அதை தெரியாமல் நாம் சாப்பிட்டுவிடக் கூடும். இதனால் சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். ஆகவே இருளில் சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் […]
நிரஞ்சா கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் பிள்ளையாருக்கு கோவில் இருக்கிறது. அவருடைய பெயர் வராஹப் பிள்ளையார் என்று முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது “கரும்பாயிரப் பிள்ளையார்“ என்று பெயர் மாற்றபட்டு உள்ளது. எண்கணித சாஸ்திரத்தை பார்த்து மாற்றினார்களா? என்றால் இல்லை. பிறகு எதற்காக மாற்றினார்கள்? வராஹப் பிள்ளையார் கோவில் அருகே ஒரு வண்டியில் கரும்பை ஏற்றி கொண்டு கரும்பு வியபாரி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிறுவன் அந்த வண்டியை நிறுத்தி “ஒரு கரும்பு […]
நிரஞ்சனா பூ நாயகன் என்றோரு அரசர். இவருடைய மனைவி சந்திரமுகி. இந்த தம்பதியினருக்கு பிறந்தவள்தான் மீரா. ஒருநாள், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, நான்கு வயது மீரா, தன் தோழிகளுடன் ஆடிப் பாடிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் மகான் ரூபகோஸ்வாமி, அரண்மனைக்கு வந்தார். அவர் கையில் கிருஷ்ணரின் விக்கிரகம் இருந்தது. அதை கண்ட குழந்தை மீரா, “இது என்ன பொம்மை.?“ என்றாள் அந்த மகானிடம். “இது பொம்மை அல்ல குழந்தாய், கிருஷ்ண பரமாத்மா.” என்றார். “கிருஷ்ணனா..? அவர் யார்.?” […]
நிரஞ்சனா சக்திதேவி தன் பக்தர்களை தம்முடைய குழந்தையாக பாவிக்கிறாள். அதனால் இந்த பூலோகத்தில் தோன்றி தன் பக்தர்களின் கஷ்டத்தை தீர்க்க அற்புதங்களை நிகழ்த்துகிறாள். அம்பாள், ஒவ்வொரு காரணத்தால் பல பெயர்களில் உருவாகி இருக்கிறாள். இப்போது நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன் உருவான சம்பவமும், போற்றதக்க வாழ்வை தரும் உச்சிகாளி அம்மன் உருவான விதமும். இந்த சக்திதேவியின் அற்புதத்தை படித்தாலே நிச்சயம் படிப்பவர்களின் வாழ்வில் நல்ல அற்புதங்கள் ஏற்படும். நல்ல விஷயங்களை படிக்க படிக்க […]
அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 16 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா திண்ணன் சிவலிங்கத்தை பார்த்ததும் காணாமல் போன தாய் -தந்தையை பார்த்தது போல கட்டிபிடித்துகொண்டான். அப்படியே பல மணிநேரம் கண்ணீருடன் இருந்தான். திண்ணனுடன் வந்த நாணனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. பசி வேறு அவன் வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது. “திண்ணா வா போகலாம்” என்றான் நாணன். “நாம் சென்றுவிட்டால் இந்த குடுமிசாமி எப்படி தனியாக இருப்பார்.? குடுமி சாமியும் பசியாக இருப்பாரா? அவருக்கும் […]
நிரஞ்சனா கனவு காணுங்கள் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்றார் திரு.அப்துல்கலாம் அவர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். நமது ஆழ் மனம் எதை நினைக்கிறதோ அதுவே கனவாக வருகிறது. அந்த கனவே நிஜமாகிறது. புழு, குளவியை நினைத்து கொண்டே இருந்தால் புழுவுக்கும் குளவி குணம் வந்துவிடும் என்றார் ஸ்ரீராமாகிருஷ்ண பரமஹம்சர். கண்ணகி ஒரு கனவு கண்டு அதிர்ச்சியடைகிறாள். தான் கண்ட கனவை தன் தோழியிடம் கூறுகிறாள். “நானும் என் கணவரும் வேறு ஊருக்கு […]
நிரஞ்சனா சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால் நாளையே பலன் கிடைத்துவிடும் என்று எண்ணுவது தவறு. போன மாதம் வேலை செய்ததற்கு இந்த மாதம் சம்பளம் வாங்குகிறோம். அதுபோலதான் சாஸ்திரங்களை கடைபிடிக்கும்போதே பெரிய முன்னேற்றம் தெரியவில்லையே என்று நினைக்கக் கூடாது. நல்ல விஷயங்கள் செய்து வரும்போது இன்று இல்லையென்றாலும் ஒருநாள் மாபெரும் வெற்றியை அடைய செய்கிறது. சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன்தரும். எப்படி நிலக்கரி மண்ணுக்குள் அதிக வருடம் பொறுமையாக கிடந்து வைரமாக மாறுகிறதோ அப்படிதான் நம்பிக்கையும் […]
நிரஞ்சனா இந்த அவசர உலகத்தில் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது? என்று பலருக்கு தெரிவதில்லை. அதனால் செய்ய கூடாத செயலை செய்து அதன் பிறகு வருந்துகிறார்கள். இது தவறு – இது சரி என்று மற்றவர்கள் எடுத்து சொன்னாலும் அதை சிலர் காது கொடுத்து கேட்பதாகவும் இல்லை. தாம் செய்வது பாப காரியம் என்று தெரிந்தாலும் தங்களின் சுயநலத்துக்காக அச்செயலை நியாயப்டுத்துவதற்காக நல்ல அறிவுரை சொல்பவர்களிடமே குதற்கமாக கேள்வி கேட்பார்கள். இதனால் நல்லது சொல்பவர்கள் […]
நிரஞ்சனா மருதாணி இலையின் மருத்துவ குணத்தை பற்றி வரும் நாட்களில் தெரிந்துக்கொள்வோம். அதற்கு முன் மருதாணியின் சக்தி வாய்ந்த தெய்வீக மகத்துவத்தை பற்றி இப்போது சொல்கிறேன். மருதாணியை வைத்துக்கொண்டால் லஷ்மி கடாக்ஷம் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான் இன்றுவரை மதுரையில் இருக்கும் மதனகோபால சுவாமி ஆலயத்தில் இருக்கும் தாயாருக்கு மருதாணியை காணிக்கையாக தருகிறார்கள் பக்தர்கள். அதனை அர்ச்சகர்கள் தாயார் பாதத்தில் வைத்து அந்த மருதாணியை பக்தர்களுக்கு தருவார்கள். அந்த பிரசாதத்தை கையில் வைத்துக்கொண்டால் பக்தர்களுக்கு ஐஸ்வரியங்கள் […]