Wednesday 19th December 2018
Breaking News:
தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?    ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள்    பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?    தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    திருமண தடை ஏன்?

அனுகிரகம் தரும் சக்தி தேவி கதைகள்

நிரஞ்சனா

சக்திதேவி தன் பக்தர்களை தம்முடைய குழந்தையாக பாவிக்கிறாள். அதனால் இந்த பூலோகத்தில் தோன்றி தன் பக்தர்களின் கஷ்டத்தை தீர்க்க அற்புதங்களை நிகழ்த்துகிறாள். அம்பாள், ஒவ்வொரு காரணத்தால் பல பெயர்களில் உருவாகி இருக்கிறாள். இப்போது நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன் உருவான சம்பவமும், போற்றதக்க வாழ்வை தரும் உச்சிகாளி அம்மன் உருவான விதமும். இந்த சக்திதேவியின் அற்புதத்தை படித்தாலே நிச்சயம் படிப்பவர்களின் வாழ்வில் நல்ல அற்புதங்கள் ஏற்படும். நல்ல விஷயங்களை படிக்க படிக்க நன்மைகள் தேடி வரும். அதுவும் சக்திதேவியின் சரித்திரத்தை படித்தாலே தரித்திரம் விலகியோடும்.    

உச்சமான வாழ்வை தரும் உச்சிகாளி அம்மன்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்  கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை கொண்டது அவ்விஷம். அதனால் அந்த விஷத்தை கண்டவுடன் அசுரர்களும் தேவர்களும் பயந்தார்கள். உலக நன்மைக்காக  அந்த விஷத்தைக் சிவபெருமானே வாயில் போட்டுக்கொண்டார். இதை கண்டு அதிர்ந்து போன சக்திதேவி, விஷம் சிவபெருமானின் வயிற்குள் இறங்கிவிட கூடாதே என்று இறைவனின் கண்டத்தை (தொண்டையை) அழுத்தி பிடித்துக்கொண்டார்.

அதனால் விஷம் கண்டத்திலேயே தங்கிவிட்டது. இதனால் இறைவன் “நீலகண்டன்” எனப் பெயர் பெற்றார். அதே போல இறைவனின் கண்டத்தில் இருக்கும் ஆலகால விஷத்தை வெளியேற்ற, சிவபெருமானின் உச்சி தலையில் தன் கைகளால் தட்டினார் அன்னை பார்வதி. விஷம் வெளியேறக்கூடாது என இறைவனுக்கு தெரியாதா? அதனால் அதற்கு பதிலாக அந்த விநாடியே சிவனின் உச்சி தலையில் இருந்து ஒரு சக்திதேவி உருவானாள். அந்த சக்தி தேவிக்கு “உச்சிகாளி அம்மன்” என்று பெயர் வைத்தாள் பார்வதி தேவி.

“உன்னை வணங்குபவர்களுக்கு பெரியம்மை, சின்னம்மை, உஷ்ண சம்மந்தமான வியாதிகள் அண்டாது.” என்ற பார்வதி தேவி, அத்துடன் உச்சிகாளி அம்மனுக்கு துணையாக பச்சைவேதாளம், கறுப்பன், மோகினி, பிசாசுக் கூட்டங்களையும் படைத்தாள்.

“நீ இப்போது பூலோகத்திற்கு புறப்படு.” என்று ஆசி வழங்கி உச்சிகாளியம்மனை கயிலையிலிருந்து பூமிக்கு அனுப்பி வைத்தார் பார்வதிதேவி.

உச்சிகாளியம்மனை வணங்கினால் எதிரிகளின் தொல்லைகள் விலகும். உஷ்ணத்தால் வரும் நோய் அண்டாது. உச்சமான வாழ்க்கையை நிச்சயம் உச்சிகாளியம்மன் தன் பக்தர்களுக்கு அருளுவார்.  

 திருச்சி பகுதிக்கு  வந்த உச்சிகாளியம்மனை பற்றி படிக்க கிளிக் செய்யவும்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் உருவான கதை

சிவனை பார்க்க கைலாசமலைக்கு பிரம்மன் வருகிறார். தூரத்தில் பிரம்மனை பார்த்த சக்திதேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கி கொண்டே வந்தார். முகத்தை அருகில் பார்த்த பிறகுதான் தெரிந்தது பிரம்மன் என்று.

“ஐந்து தலையை பார்த்த உடன் சிவன் என்று நினைத்துவிட்டீர்களா?. எனக்கும் ஐந்து தலை சிவனுக்கும் ஐந்து தலை.” என நகைத்தார் பிரம்மா. அம்பிகைக்கு கோபம் வந்தது. சிவ பெருமானிடம் முறையிட்டாள் அன்னை. “ஓ…ஐந்து தலை இருப்பதால்தான் அவருக்கு ஆணவமா?” என்ற பரமன் பிரம்மனின் ஒரு தலையை வெட்டி வீசினார்.

தன் தலைவனின் ஒரு தலை பறிபோக காரணம் அம்பிகைதான் என்று கருதிய கலையரசியான சரஸ்வதி, பராசக்தி மேல் கோபம் கொண்டு, “சக்தி… நீ அரண்மனையில் வாழ்ந்தாய். இனி நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்.” என்று சபித்தாள் கலைவாணி.

சரஸ்வதியின் சாபத்தால் பர்வத இராஜ புத்திரியாக திகழ்ந்த அன்னை பார்வதிதேவி பூலோகத்தில் தோன்றி, இருக்க இடம் இல்லாமல் எங்கு தங்குவது என்று தெரியாமல் அவதிப்பட்டாள். இப்படியே பல இடங்களுக்கு சென்று களைப்படைந்து நிற்கும் போது ஒர் இடத்தில் நறுமணம் வீசியது. அந்த திசையை நோக்கி நடந்தாள்.அந்த இடம் அழகான நந்தவனமாக இருந்தது. அவ்விடத்திலேயே அமர்ந்து தவம் செய்ய தொடங்கினாள். இந்த காட்சியை கண்ட அங்கு காவலுக்கு இருந்த மீனவ இனத்தை சார்ந்தவன்,

“ ஏய் பெண்ணே… இது இந்த நாட்டின் மலையரசனுக்கு உரிமையான இடம். இங்கு நீ தவம் செய்வது உனக்கு நல்லதல்ல. எங்கள் அரசர் தெய்வ நம்பிக்கை அற்றவர். நீ தவம் செய்யும் தகவல் அரசருக்கு தெரிந்தால் உன் உயிருக்கு? ஆபத்து நேரலாம். ஆகவே இங்கிருந்து போய் விடு.” என்று எச்சரித்தான்.

உடனே அன்னை புன்னகைத்தப்படி தன் உடலை புற்று மண்ணால் மூடினாள். அந்த காட்சியை பார்த்தவன் பிரமித்து போனான். இந்த பெண், அன்னை பராசக்தி என்பதை உணர்ந்தான். அம்பிகை மீது பக்தி உண்டானது. மக்களிடம் சொன்னான். நந்தவனத்தில் திடீர் புற்று உருவானதை அறிந்த மக்கள் அதிசயித்தனர். புற்றை பலர் வந்து பார்த்தார்கள். இந்த தகவல் அரசருக்கு தெரிந்து, “எனக்கு சொந்தமான தோட்டத்தில் புற்று இருக்கிறதா? இதை உடனே இடித்து தள்ளுங்கள்.” என்று உத்தரவிட்டான்.

புற்றை இடிப்பது பெறும் பாவம், அதை செய்யாதீர்கள் என்று எத்தனையோ பேர் கூறியும் கேட்கவி்லலை அரசர்.

பணியாளர்கள் புற்றை உடைத்தார்கள். அப்போது அருகில் இருந்த மீனவ இனத்தை சார்ந்த அந்த காவலன், அந்த புற்று மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வைத்து கொண்டான். புற்றை உடைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து சென்று விட்டார்கள் அரசரின் பணியாளர்கள். அவர்கள் போன பிறகு தன் கையில் இருந்த புற்று மண்ணை அந்த இடத்தில் மறுபடியும் வைத்து பூஜை செய்தான் மீனவன். புற்று மறுபடியும் வேகமாக உருவானது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட அரசன், மறுபடியும் பணியாளர்களை அனுப்பினான். புற்றை உடைக்க புற்றின் அருகில் சென்றவுடன் அன்னைக்கு காவலாக வந்து நின்ற சிவபூதங்கள் அந்த பணியாளர்களை கொன்றார்கள். பிறகு அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களை காக்க பூலோகத்திலேயே தங்கிவிட்டாள். அங்காளபரமேஸ்வரி அம்மன் உருவான சம்பவம் இது. அங்காள பரமேஸ்வரியை வணங்கினால் செய்வினை பாதிப்பு, விரோதிகளால் உண்டான பிரச்சனைகள் விலகும். 

அங்காள பரமேஸ்வரி அம்மன் – மேல்மலையனூர்  கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 16 2012. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech