Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by Niranjana

எதிர்பாரா யோகத்தை தரும் எளிய பரிகாரங்கள்!

Written by NIRANJANA வளையல் ஓசை தரும் லஷ்மி கடாக்ஷம் பெண்களின் கைகளுக்கு அழகு தருவது வளையல். அதுவும் சுமங்களி் பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அத்துடன், வளையல் அணியாமல் மற்றவர்களுக்கு உணவு பரிமாறக்கூடாது. சலசலக்கும் ஓசையுடன் கண்ணாடி வளையல் அணியும்போது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். பெண்களுக்கு வளைகாப்பு செய்யும்போது இன்றும் சில கிராமப்புறங்களில் முதலில் வேப்பிலை கொழுந்தை வளையல் போல செய்து, இறைவன் முன் வைத்து வணங்கி, அந்த வேப்பிலை வளையலைதான் […]

திருமகளின் அருள் இருந்தால் முயற்சி திருவினையாகும்!

Written by NIRANJANA திருமகளின் ஆசி இருந்தால்தான் முயற்சி திருவினையாகும். அது எப்படி? முயற்சி செய்பவர்கள் அனைவருமே சாதித்து விடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. திருமகளின் அருட்பார்வை இருப்பவர்களால்தான் சாதிக்க முடிகிறது. நாம் செய்யும் செயல் நல்வினையாக மாறுவதும் தீவினையாக மாறுவதும் திருமகளின் விளையாட்டு. எடுக்கும் காரியம் நல்வினையாக மாற, திருமகளின் ஆசி இருந்தால், அந்த திருமகள் நம் முயற்சியை திருவினையாக மாற்றி அருள் செய்கிறாள். எதிரிகளை அழிக்கும் ஆற்றல் நரசிம்மருக்கு இருந்தாலும், தன் பக்தர்களின் வாழ்வில் […]

வாழ்வின் இருள் நீக்கி வெளிச்சம் தரும் சுருட்டப்பள்ளி சிவன்!

Written by NIRANJANA சென்னையில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும் தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் சுருட்டப்பள்ளி உள்ளது.     ஒவ்வொரு ஜீவராசிகளையும் காப்பது இறைவன்தான். ஆபத்தில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வை தரும் ஆற்றல் இறைவனுக்கு மட்டும்தான் உண்டு. இறைவன், மனிதர்களுக்கு போதுமான அறிவும், தைரியமும் கொடுக்கிறான். ஆம். குழந்தையாக இருக்கும்போது நடக்க தெரியாமல் இருந்தாலும், விடா முயற்சியால் நடக்க கற்றுக்கொள்கிறது குழந்தை. இதே விடா முயற்சியும், […]

தீப தானம் தரும் உயர்ந்த பதவி – மகிழ்ச்சியான வாழ்க்கை.!

நிரஞ்சனா பூர்வ புண்ணிய பலனாக இறைவன் நமக்கு கொடுத்த வசதிகளை கொண்டு மற்றவர்களுக்கு செய்கின்ற உதவியைதான் இறைவன் விரும்புகிறான். இறைவன் மனிதர்களிடத்தில், “நீ இதை எனக்கு கொடுத்தால்தான் நான் உன்   விருப்பத்தை நிறைவேற்றுவேன்.” என்று கூறுவதில்லை. மற்றவர்களுக்கு செய்கிற உதவிகள், இறைவனுக்கே கொடுப்பதுபோல ஆகும். நாம் தெரிந்தோ – தெரியாமலோ செய்கிற உதவிகள்தான்,  நம் வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்ததை விட இன்னும் அதிக முன்னேற்றங்கள் கிடைத்திட காரணமாகிறது. குசேலன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சாப்பிட அவல் தந்து […]

சௌந்தர்யமான வாழ்க்கை தரும் அரூப லட்சுமி.!

நிரஞ்சனா செல்வ வளமையோடு வாழ்க்கை அமைய வேண்டுமா?  கலையான முகம் வேண்டுமா? சௌந்தர்யமான வாழ்க்கை அமைய வேண்டுமா? வாருங்கள் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அரூப லட்சுமியை தரிசிக்க. இந்த அரூப லட்சுமியை தரிசித்த பிறகு, நன்மைகளை பெற நாம் சிறிய எளிய பரிகாரம் செய்ய வேண்டும். அது என்ன என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக ஒரு புராண சமபவத்தை தெரிந்துக்கொள்வோம். ஒருசமயம், ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீமகாலஷ்மியின் திருமுகத்தை கண்டு, “நீ என்ன அவ்வளவு பேரழகியா?. உன்னை […]

குடும்ப ஒற்றுமைக்கு அருளும் காஞ்சனமாலை அம்மன்

நிரஞ்சனா மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மீனாட்சி அம்மன் கோயில் வழியாக வந்தால், புதுமண்டபத்தின் கிழக்கில், கீழ ஆவணி மூல வீதியிலிருந்து பிரியும் ஏழு கடல் தெரு உள்ளது. இந்த இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காஞ்சனமாலை அம்மன் திருக்கோயில். காஞ்சனமாலை அம்மனை வணங்கினால், ஸ்ரீமீனாட்சி – சுந்தரேஸ்வரரின் அருளாசி பெற முடியும். காஞ்சனமாலை அம்மனை இந்த ஆலயத்தில் வந்து தரிசித்தால், பிரிந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம். காஞ்சனமாலைக்காக […]

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?

நிரஞ்சனா தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்பதே மன்னரின் சந்தேகம்.  அரசரின் சந்தேகத்திற்கான பதிலை சிற்பி ஒருவர், ஒரு சிலையின் மூலமாக விளக்கினார். அதை கேட்டு இராஜராஜ சோழன் மகிழ்ந்து, ஆயிரம் பொன் பரிசு தந்து, தஞ்சை பெரிய கோவிலுக்கான சிற்ப வேலைகளுக்கான பொறுப்புகளையும் அந்த சிற்பிக்கே தந்தார். இராஜராஜ சோழனின் கேள்விக்கு விடை தந்த சிற்பி வடித்த சிலை என்ன என்பதை தெரிந்துக்கொண்டால் […]

திருமண வரம் தரும் இராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிம்மர்

நிரஞ்சனா அருள்மிகு கல்யாண நரசிங்கப்பெருமாள் தேவஸ்தானம், ராமகிரி, வேடசந்தூர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் வட்டத்தில் குஜிலியம் பாறை என்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது ராமகிரி. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கரூர் செல்லும் பேருந்து தடத்தில் ராமகிரி என்று கேட்டு இறங்கலாம். பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீநரசிம்மர், கல்யாண நரசிம்மராக இங்கே அருள் பாலிக்கிறார். எந்த ஜீவராசிக்கும் இல்லாத பெருமை மனித பிறவிக்கு இருக்கிறது. அதுதான் பொறுமை. ஆனால் மனிதர்களாக பிறந்தவர்கள் சில நேரத்தில் பொறுமையை இழப்பதால், பெருமையையும் சேர்த்தே […]

காஞ்சி குமரக்கோட்டம் முருகன் கோயில்

நிரஞ்சனா  முருகப் பெருமானை வணங்கினால் சாதிக்க முடியாது என்பவர்களின் முன்னால் சாதித்து காட்டலாம். வறுமை ஓழியும். வம்சம் வளரும். நினைத்தது நடக்கும். முருகன் என்றால் அழகு – தைரியம் – ஆற்றல். தேவைபட்டால் தம் பக்தர்களை காக்க மனித உருவத்தில் நேரடியாக வந்து உதவும் அன்பு என்று முருகப் பெருமானின் புகழை சொல்லிக்கொண்டே போகலாம். கச்சியப்ப சிவாசாரியாருக்கு கந்தபுராணம் எழுத உதவினான் கந்தன். அதுபோல பாம்பன் சுவாமிகளின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது பார்ப்போம். முருகனின் […]

சொல்லிலும் செயலிலும் விவேகம் நிறைந்த சுவாமி விவேகானந்தர்.!

நிரஞ்சனா சுவாமி விவேகானந்தர். பெயருக்கு ஏற்றபடி பேச்சியிலும் விவேகத்துடன் திகழ்ந்தவர். காந்தம் இரும்பை ஈர்ப்பது போல, ஆன்மிக நெறியில் உலகத்தையே தன் பக்கம் ஈர்த்தவர்.   எதிராளிகள் இவரை சீண்டினாலும், அவர்களுக்கான பதிலை அவர்கள் மனம் புண்படாதபடி சொல்லும் ஆற்றல் சுவாமியிடம் இருந்தது. 1891 ராஜஸ்தான் ஆல்வார் சமஸ்தானத்துக்குச் சென்றார் சுவாமி விவேகானந்தர். அங்கு மன்னர் மங்கள்சிங், விவேகானந்தரிடம், “விக்ரக  வழிபாட்டில் தமக்கு உடன்பாடியில்லை” என்று கூறினார். இதுவே வேறு ஒருவரிடம் இதுபோல் யாராவது சொன்னால் அங்கே […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »