Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

சௌந்தர்யமான வாழ்க்கை தரும் அரூப லட்சுமி.!

நிரஞ்சனாNIRANJHANA

செல்வ வளமையோடு வாழ்க்கை அமைய வேண்டுமா?  கலையான முகம் வேண்டுமா? சௌந்தர்யமான வாழ்க்கை அமைய வேண்டுமா? வாருங்கள் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அரூப லட்சுமியை தரிசிக்க.

இந்த அரூப லட்சுமியை தரிசித்த பிறகு, நன்மைகளை பெற நாம் சிறிய எளிய பரிகாரம் செய்ய வேண்டும். அது என்ன என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக ஒரு புராண சமபவத்தை தெரிந்துக்கொள்வோம்.

ஒருசமயம், ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீமகாலஷ்மியின் திருமுகத்தை கண்டு, “நீ என்ன அவ்வளவு பேரழகியா?. உன்னை விட இந்த உலகத்தில் அழகான பெண்களே இல்லை என நினைத்துக்கொண்டிருக்கிறாயா?” என விளையாட்டாக புன்னகையுடன் கேட்க, லஷ்மிதேவிக்கு வந்தது கோபம்.

 “எல்லா லோகமும் என்னை அழகே வடிவானவள் என்று புகழ்கிறது. எந்த அழகான பெண்ணை பார்த்தாலும், லஷ்மி கடாக்ஷமாக இருக்கிறாய் என்றுதான் சொல்வார்கள். பெண்களில் அழகு என்றாலே அது நான்தான். இது தெரிந்தும், என் மனம் வேதனைப்படும் விதமாக, என்னை பார்த்து நீ பெரிய அழகியா? என்ற கேட்ட உங்களுக்கு, முகம் இல்லாமல் போகட்டும்.” என்று ஸ்ரீமந் நாராயணனை சபித்து விடுகிறாள் லஷ்மிதேவி.

இதை கேட்டு சும்மா இருப்பாரா திருமால்? அவரும் கோபம் அடைந்தார். “ஒரு பெண்ணுக்கு அழகு இருக்க வேண்டும் ஆனால் திமிர் இருக்கக்கூடாது. பொறுமை, அடக்கம், அன்பு, நிதானம் வேண்டும். இது இல்லாதவர்கள், பேரழகியாக இருந்தாலும் விரைவில்  கலையான முகத்தை  இழந்து விடுவார்கள் என்பதை உலக மக்கள் அறிய வேண்டும். எல்லோரையும் விட நீதான் அழகு என்று ஆணவமாக நினைத்துக்கொண்டிருக்கிறாய். அதனால், நீ அனைவரையும் விட கருமையாக மாறி, அழகில்லாமல் மாறுவாயாக.” என்று ஸ்ரீமகாலஷ்மியை சபித்து விடுகிறார் பெருமாள்.

சாபம் வேகமாக வேலை செய்தது. ஒட்டுமொத்த கருமை நிறமும் லஷ்மிதேவியை பற்றிக்கொண்டது. மிக கருமையாக மாறினாள்.

ஏதோ சாதாரணமாக பேசிய சொல், இத்தனை விபரீதமாக மாறிவிட்டதே என்று மனம் வருந்தி, கணவரிடம், தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டாள் லஷ்மி தேவி.

“தவறை உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் மன்னிப்பு இருக்கிறது. ஆனால் நான் கொடுத்த சாபம் நீங்குவதற்கு,  நீ காஞ்சிக்கு சென்று காமாட்சி அம்மன் ஆலயத்தில் தவம் செய். இழந்த உன் அழகை திரும்ப பெற என் தங்கை உனக்கு ஆலோசனை சொல்வாள்.” என்றார்.

தன் கணவர் கூறியது போல் காமாட்சி அம்மன் ஆலயத்தில் தவம்Bhakthi Planet இருந்தாள் லஷ்மிதேவி. ஸ்ரீமகாலஷ்மியின் தவத்தை ஏற்ற காமாட்சி அம்மன், லட்சுமிதேவி முன் தோன்றினார்.

“உன் தவத்தின் பயனால் உன்னை பிடித்த சாபம் அகன்றது. உன் அழகை மீண்டும் பெற இந்த ஆலயத்திலேயே அரூப லட்சுமியாக இருந்து, இங்கு வரும் என் பக்தர்கள் உன் திருமேனியில் குங்குமத்தை தடவி, பிறகு அவர்கள் தங்கள் நெற்றியில் இட்டுக்கொள்வார்கள். இதனால் கலை இழந்த உன் முகம் மீண்டும் அழகாக மாறும். சௌந்தர்ய லட்சுமியாக என் வலப்பக்கம் நீ வீற்றிருப்பாயாக. உன் சாபம் நீங்கி, மீண்டும் நீ அழகான மேனியை பெறவும், உன் மகிழ்ச்சிக்கு காரணமாகவும் இருக்கும் என் பக்தர்களின் வாழ்க்கையில் நீயும் நல்ல மாற்றத்தை செய்ய வேண்டும். அதுவே என் விருப்பம்.” என்று ஸ்ரீமகாலஷ்மிக்கு அருள் புரிந்தார் காமாட்சி அம்மன்.

காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், காமாட்சி அம்மனை தரிசித்த பிறகு, அம்மனின் குங்கும பிரசாதத்தை அந்த ஆலயத்தில் இருக்கும் அரூப லட்சுமியின் திருமேனியின் மீது தடவி, அந்த குங்குமத்தை உங்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளுங்கள்.

இந்த எளிய பரிகாரத்தை செய்தாலே, ஸ்ரீமகாலஷ்மியின் மனம் குளிரும். அந்த மகிழ்ச்சியில் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும், சௌந்தர்யமான வாழ்க்கையும், குடும்பத்திற்கு  லட்சுமி கடாக்ஷமும் தருவாள் ஸ்ரீமகாலஷ்மி.!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Manamakkal Malai

Posted by on Mar 29 2013. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், பிற கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech