சென்னை: வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காமல் தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்படும் மன்றங்களின் (கிளப்புகள்) அனுமதிகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் வேட்டி விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசியதாவது: வேட்டி கட்டிக் கொண்டு சென்ற நீதிபதியை அனுமதிக்காத கிளப்பின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காதது தமிழர் நாகரிகத்தை அவமதிக்கும் செயல். தமிழர் நாகரிகத்தைக் […]
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு ஆடி 1ம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது. ஆடி மாதம் நாளை பிறப்பதையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், மங்கல பொருட்கள் அனைத்தும் பெரிய தட்டுகளில் ரங்க விலாச மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 7.20 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானை மீது ஒரு தட்டை வைத்துக் கொண்டு மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோயில் […]
டெல்லி : இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் முன்பதிவு செய்து ஏராளமான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் பயணம் செய்கின்றனர். அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்பவே இருக்கை வசதி அல்லது படுக்கை வசதி கிடைக்கும். மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா தாக்கல் செய்த பட்ஜெட்டில் ‘‘ரயில்வே இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே […]
சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை அடுத்து, சென்னை மற்றும் புறநகர்களில் சிஎம்டிஏ குழு நடத்திய ஆய்வில் 50 கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கட்டிடங்களை ஏன் இடிக்கக் கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை அருகே போரூர்-குன்றத்தூர் சாலையில் உள்ள மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம், ஜூன் 28ம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் […]
Written by Niranjhana கல்லடி பட்டாலும் கண்ணடி மட்டும் படக்கூடாது என்பார்கள். கிணற்றில் தண்ணீர் எவ்வளவு இருந்தாலும், தண்ணீரின்மேல் பாசி மூடியிருந்தால் தண்ணீர் இருப்பது தெரியாது. அதுபோல் ஜாதகத்தில் யோகமும், திறமையும் இருந்தாலும் கண் திருஷ்டி பட்டால் சூரியனை மேகம் மறைத்து வைப்பது போல் யோகத்தைத் தடுத்துவிடும். கண்திருஷ்டி. நாம் சாப்பிடும்போது எங்கோ யாரே நினைத்தால் புறை ஏறும். அதேபோல் யாரோ நம்மை திட்டினாலும் நாக்கை கடித்துக் கொள்வோம். அதுபோல்தான், நமக்குத் தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு […]
டைரக்டர் சேரன் புதுபடங்களை டி.வி.டி மூலம் வீடுகள் தோறும் சப்ளை செய்யும் புதுதிட்டத்தை துவங்கியுள்ளார். இதற்கு ‘சினிமா டூ ஹோம்’ என்று பெயர் வைத்துள்ளார். டி.டி.எச்., இன்டர்நெட், கேபிள் டி.வி., மொபைல், டி.வி.டி. உள்ளிட்ட பல வழிகளில் வீடுகளுக்கு புதுபடங்களை நேரடியாக கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் தயாராகியுள்ளது. இதுகுறித்து சேரன் கூறும் போது, நான் இயக்கிய ’ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் தணிக்கை சான்றிதழ் பெற்று 8 மாதங்களாகியும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. எனவே […]
இயக்குனர் விஜய் அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். இதில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். இதுகுறித்து இயக்குனர் விஜய் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:– ‘சைவம்’ படம் வெற்றிகரமாக ஓடுகிறது. பல தரப்பில் இருந்தும் இதற்கு பாராட்டுகள் வந்தன. குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாய் பார்க்கிறார்கள். இந்த படத்துக்கு பிறகு நல்ல கதை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு மேலும் அதிகமாகியுள்ளது. விக்ரம் பிரபுவின் படம் சிறந்த காதல் கதையம்சம் உள்ள படமாக இருக்கும். இதன் படப்பிடிப்பு அடுத்த […]
சீனாவில் உள்ள வடக்கு சிலின் மாகாணத்தின் தலைநகர் சாங்சூனை சேர்ந்தவர் லியூ யான்யா ( வயது 57).இவர் மாடிப்படியில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்தார்.அப்போது கீழே இருந்த கத்தி ஒன்று அவரது தலையில் 11 செ. மீட்டர் அளவிற்கு உள்ளே சென்று விட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். சீன மருத்துவமனையில் டாக்டர் சன் யங் தலைமையில் நடந்த அறுவை சிகிச்சையில் அவரது தலையில் இருந்த கத்தி எடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிருக்கு எவ்வித […]
சென்னை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை மற்றும் இதர நகரங்களில் ரூ. 825 கோடியில் குடியிருப்புகள் அமைக்கப்படும். திருச்சி நாவல்பட்டில் 68,82 ஏக்கரில் 1,360 பல்வேறு வகை மனைகள் ஏற்படுத்தப்படும். […]
மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாளை தொடங்க உள்ளது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வருகிற ஜூலை 18ந்தேதி அதற்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோரிக்கைகள் மீதான விவாதம் ஜூலை 21 மற்றும் 24ந்தேதிகளுக்கு இடையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெறும். மக்களவையில், சுற்றுச்சூழல் மற்றும் வனம், நீர் வளம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகள் மீதான கோரிக்கைகள் முன் வைக்கப்படும். இதுபோன்று மாநிலங்களவையில், உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் ஆகிய துறைகள் […]