Tuesday 23rd April 2024

தலைப்புச் செய்தி :

முன்பதிவு செய்பவர்கள் ஆன் லைனிலேயே தாங்கள் விரும்பும் இருக்கையை தேர்தெடுக்கும் வசதி

டெல்லி : இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் முன்பதிவு செய்து ஏராளமான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் பயணம் செய்கின்றனர். அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்பவே இருக்கை வசதி அல்லது படுக்கை வசதி கிடைக்கும்.

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா தாக்கல் செய்த பட்ஜெட்டில் ‘‘ரயில்வே இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே தங்களுக்கு விரும்பிய இருக்கை, படுக்கை வசதி, பெட்டி ஆகியவற்றை பயணிகள் தேர்ந்தெடுக்கலாம். பயணிகளுக்கு விருப்பமான உணவுகள் ரயில்களில் வினியோகிக்கப்படும். பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கு தேவையான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் உணவு வழங்கப்படும்போது அதற்கான பணம் பெறப்படும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் உள்ள மென்பொருளில் புதிய அறிவிப்புகள் அடங்கிய மென்பொருளை இணைந்து ‘அப்கிரேட்’ செய்யும் பணி நடந்து வருகிறது. இதன்மூலம் நிமிடத்துக்கு 2 ஆயிரம் முதல் 7200 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படும். பயணிகளுக்கு தேவையான உணவுகளை வழங்குவதற்காக நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் பெறும் பணியும் நடந்து வருகிறது. ரூ.100 கோடி செலவில் நடைபெறும் இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். ஆகஸ்டு 15ஆம் தேதி முதல் இந்த வசதிகள் அனைத்தும் நடைமுறைக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

Guru Peyarchi Palan 2014-2015  CLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://greensite.in/

Posted by on Jul 16 2014. Filed under Headlines, இந்தியா, செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech