Saturday 2nd May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: Headlines

விமான பயணத்திலும் போலி டிக்கெட்

விமான பயணத்திலும் போலி டிக்கெட் அறிமுகமான ஒரு சம்பவம் வெனிசுலா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள காரகாஸ் நகரில் இருந்து கனடா நாட்டிற்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் 5 பயணிகள் கூடுதலாக இருப்பது விமானிக்கு தெரியவந்தது. உடனே 5 பேரையும் சிப்பந்திகள் கீழே இறக்கி பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த 5 பயணிகளிடமும் விசாரணை நடத்தியதில் 4 பேர் ஈரான் நாட்டையும், ஒருவர் ஆப்கானிஸ்தானையும் சேர்ந்தவர் என்பதும், இவர்களிடம் கனடா செல்வதற்கான […]

மறைந்தும் மறையாமல் நம்மோடு வாழும் சுவாமிகள் – பகுதி 2

சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் Written by Niranjana சூனியத்தை செய்தவனிடமே திருப்பி அனுப்பிய பாம்பன் சுவாமிகள் சிதம்பரத்தில் சுவாமிகள் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால் சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வெற்றி பெற்றார். இதனால் கோபம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளுக்கு செய்வினை செய்தார்கள். முருகன் அருளால், அந்த செய்வினையை செய்தவருக்கே திருப்பி அனுப்பினார் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளுக்கு முருகப் பெருமான் வழி காட்டிய […]

பாம்பன் சுவாமிகள்

Written by Niranjana  பாம்பன் என்ற ஊரில் செங்கமல அம்மையார் – சாத்தப்பபிள்ளையின் மகனாக பிறந்தவர் அப்பாவு. இவரே பின்னாளில் பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். இவர் 1850-ல் பிறந்தார் என்று சொல்கிறார்கள். 1866-ஆம் ஆண்டு தன் படிப்பை தொடங்கினார். முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இருந்தே இவர், கந்தசஷ்டி கவசத்தை விரும்பி படிக்கத் தொடங்கினார். அத்துடன் சேது மாதவஅய்யர் என்பவரிடம் வடமொழியும் கற்றார். தமிழ்மொழியை மேலும் கற்பதில் ஆர்வமாக இருந்தார் சுவாமிகள். காரணம் […]

ஆரம்பம் பார்த்த கமல்

அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டிவிட மாட்டார் கமல். அதேபோல் ஆறி தணிந்த பின்பே பல படங்களையும் பார்ப்பது அவ‌ரின் வழக்கம். மாறாக அ‌‌ஜீத்தின் ஆரம்பம் படத்தைப் பார்த்து படம் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டியுள்ளார். ஆரம்பம் படத்தை ஸ்டைலிஷாக எடுத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், ஒருமுறை நம்பி பார்க்கலாம் என்பதாகவே தொண்ணூறு சதவீத விமர்சனங்கள் உள்ளன. அ‌ஜீத்தின் ஸ்டைலும், நடிப்பும் படத்தின் ப்ளஸ். ஆரம்பத்தை பெங்களூருவில் உள்ள மல்டி பிளக்ஸில் கமல்ஹாசன் பார்த்து ரசித்துள்ளார். அ‌‌ஜீத் உள்ளிட்ட முன்னணி […]

ஓடும் பஸ்சில் டிரைவரின் கால்கள் செயல் இழப்பு பயணிகள் உயிர் தப்பினர்

ஈரோடு:ஈரோட்டில் இருந்து நேற்றிரவு 7 மணிக்கு அரசு பஸ் காரைக்கால் புறப்பட்டது. நாகூரை சேர்ந்த குழந்தைவேலு (47) என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். பஸ் ஈரோடு அரசு மருத்துவமனையை தாண்டியதும் டிரைவர் குழந்தைவேலு உடல்நிலை திடீரென மோசமானது. அவரது கை, கால்கள் செயல் இழந்தன. நிலைமையை உணர்ந்த குழந்தைவேலு மிகவும் சிரமப்பட்டு திடீர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். நடுரோட்டில் பஸ் நின்றதால் பயணிகள், டிரைவரிடம் விசாரித்தனர். அதிர்ச்சியுடன் இருந்த டிரைவர் […]

வானத்தில், ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள் தோன்றியது, சீன மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது

வானத்தில், ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள் தோன்றியது, சீன மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.. சீனாவின் வடக்குப் பகுதியான, மங்கோலியாவில், வசிக்கும் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த அதிசய நிகழ்வை பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் சூரியனுக்கு பக்கவாட்டில், சற்று சிறிய அளவில் மேலும் 2 சூரியன்கள் காணப்பட்டன. அவற்றுடன் சூரியன்களுக்கு அருகில் வானவில்லும் தோன்றியது. இந்த காட்சியினை மங்கோலிய மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.. பூமியின் மேலடுக்கில், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றத்தால், இதுபோன்ற தோற்றங்கள் […]

பஞ்சாயத்துத் தலைவர் ரங்கநாதன் மூக்கைக் கடித்து துப்பினார் முதியவர்

கடனை திருப்பித் தராதவரின் காதை கடித்து எடுத்துக் கொண்டு வருவார் நடிகர் செந்தில் ஒரு திரைப்படத்தில். அது போன்று விருத்தாசலம் அருகே உதவித் தொகை வாங்கித் தராததால் பஞ்சாயத்துத் தலைவரின் மூக்கைக் கடித்து துப்பினார் முதியவர் ஒருவர். மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் பெயர் திரிசங்கு. இவர் வயது 55, 60 வயதானவர்களுக்கே முதியோர் உதவித் தொகை கிடைக்கும். ஆனால் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் ரங்கநாதன் என்பவர் இவருக்கு உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி விண்ணப்பமும் […]

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா

திருச்செந்தூர், நவ.4 – திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜை–யுடன் தொடங்கியது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கபட்டது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 3.30 மணிக்கு காலசந்தி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் யாகசாலைக்கு எழுந்தருளினார். யாகசாலையில் பிரதான மூன்று கும்பங்களான சுவாமி ஜெயந்திநாதர், […]

சென்னை பாக்ஸ் ஆபிஸ் – அமர்க்களமான ஆரம்பம்

அக்டோபர் 31 ஆரம்பம் வெளியான போதே மற்ற படங்களின் கலெக்சன் காலி. நவம்பர் 2ஆம் தேதி அழகுராஜா, பாண்டிய நாடு வெளியாக மற்றப் படங்கள் ஒரேயடியாக ஒட்டாண்டியாகிவிட்டன. நான்காம் ஐந்தாம் இடங்களைப் பற்றி பேச எதுவுமில்லை என்பதால் மூன்றிலிருந்து தொடங்குவோம். 3. பாண்டிய நாடு நவம்பர் 2ஆம் தேதி வெளியான படம் இரு தினங்களில் 38.12 லட்சங்களை வசூல் செய்துள்ளது. குறைவான திரையரங்குகளில் வெளியான காரணத்தால் இந்தளவு குறைந்த வசூலை பாண்டிய நாடு பெற்றுள்ளது. தீபாவளி படங்களில் […]

தமிழகம் – புதுவையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை

சென்னை, நவ. 4 – தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது குமரி கடலோர பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »