Friday 17th May 2024

தலைப்புச் செய்தி :

பாம்பன் சுவாமிகள்

Written by Niranjana NIRANJHANA

பாம்பன் என்ற ஊரில் செங்கமல அம்மையார் – சாத்தப்பபிள்ளையின் மகனாக பிறந்தவர் அப்பாவு. இவரே பின்னாளில் பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். இவர் 1850-ல் பிறந்தார் என்று சொல்கிறார்கள். 1866-ஆம் ஆண்டு தன் படிப்பை தொடங்கினார். முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இருந்தே இவர், கந்தசஷ்டி கவசத்தை விரும்பி படிக்கத் தொடங்கினார். அத்துடன் சேது மாதவஅய்யர் என்பவரிடம் வடமொழியும் கற்றார். தமிழ்மொழியை மேலும் கற்பதில் ஆர்வமாக இருந்தார் சுவாமிகள். காரணம் அருணகிரிநாதரின் பக்தர் இவர். அருணகிரிநாதரின் பாடல்களை பிழையின்றி தாம் பாட வேண்டும் என்ற ஆவல் கொண்டார். அதற்கு தமிழை நன்று கற்க வேண்டும் என்பதால் தமிழ்கடவுளான முருகனின் பாடல்களை உச்சரித்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முருகனுக்கு உகந்த ஒன்பதாம் எண் அமையும் விதமாக, தினமும் 36 முறை கந்தசஷ்டி கவசத்தை சொல்வார்.

முருகப் பெருமானை குறித்து தாமும் பாடல் இயற்ற வேண்டும், அதுவும் நூறு பாடல்களை எழுத வேண்டும் என்பதற்காக  தினமும் சாப்பிடுவதற்கு முன்னதாக ஒரு பாடல் எழுத வேண்டும் என்று முடிவு செய்து, தினமும் பாடல் எழுதுவதை வாடிக்கையாக கொண்டார். அத்துடன்   சேதுமாதவ ஐயரிடம் சடக்ஷர மந்திர உபதேசம் பெற்றார்.

திருமண வாழ்க்கை 

Manamakkal Malaiசுவாமிகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் சுவாமிகளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. இருந்தாலும்  சேதுமாதவ ஐயரின் வற்புறுத்தலில் காளிமுத்தம்மையார் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சிவஞானம்பாள், குமரகுருதாச பிள்ளை,  முருகாண்டியாபிள்ளை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

ஒருநாளிரவு, குழந்தையான சிவஞானம்பாள், விடாமல் அழுதுக் கொண்டே இருந்தாள். இதை கண்ட காளிமுத்தம்மையார் பயந்தார். தன் கணவரிடம், “குழந்தை பயத்தில் அழுகிறாள் என நினைக்கிறேன். விபூதி கொடுங்கள்.” என்றார். இரவில் விபூதியை என் கையால் எவருக்கும் தருவதில்லை.” என்று கூறி மறுத்தார்.

அழுதுக் கொண்டிருக்கும் குழந்தையை தூக்கி்க்வைத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்து நின்றாள் காளிமுத்தம்மையார். அப்போது அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த சாமியார் ஒருவர் குழந்தையின் அழுக்குரல் கேட்டு அருகில் வந்து, விவரம் ஏதும் கேட்காமல் அவராகவே குழந்தையின் நெற்றியில் விபூதி பூசிவிட்டு ஆசி வழங்கி சென்றார். குழந்தை சிவஞானம்பாளின் அழுகை நின்றது. மகிழ்ச்சி அடைந்த காளிமுத்தம்மை, வீட்டுக்குள் சென்று தன் கணவரிடம் விஷயத்தை சொன்னார்.

“யாவும் முருகப் பெருமானின் விருப்பப்படியே நடந்தது.” என்றார் சுவாமிகள் அமைதியாக.

எந்த நிலையிலும் முருகனின் மீது நம்பிக்கையை கைவிடாதவர் 

இத்தனை காலங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்த சுவாமிகளின் தந்தையார், ஒருநாள்Bhakthi Planet காலமானார். இதுநாள்வரையில் பணப்பிரச்சனை என்றால் என்ன? என்று அறியாத சுவாமிகள், தந்தையின் மறைவுக்கு பிறகு கடும் பொருளாதர நெருக்கடிக்கு ஆளானார். “கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வளர்ந்த நான், முருகப் பெருமானின் மீது மட்டுமே பக்தியோடு இருந்து வருகிறேன். எனக்கு எது செய்ய வேண்டும் என்று என் முருகனே அறிவான்.” என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

ஷண்முக கவசம் உருவானது 

முருகனின் அருளால் தமக்கு இன்னல்கள் யாவும் நீங்கும் என்று உறுதியாக நம்பினார். அந்த சமயமே முருகனை போற்றி பாடல் இயற்றினார். அதற்கு ஷண்முக கவசம் என பெயரிட்டார். தினமும் தாம் இயற்றிய அந்த ஷண்முக கவசத்தை பாடியும் வந்தார். அவரின் கணீரென்ற குரலும் தமிழ் புலமையும் மக்களை சென்றடைந்தது. முருகப் பெருமானின் பேரருளாள் அவரின் நிதி நெருக்கடி நீங்கியது. அதை தொடர்ந்து பல பாடல்களை இயற்றினார். இவரின் ஆசியை பெற்றவர்களும் இவர் ஷண்முக கவசத்தை பாடியதை நேரடியாக கேட்டவர்களும், அவர்களாகவே பாடியவர்களும் எண்ணற்ற நன்மைகளை பெற்றார்கள். பாம்பன் சுவாமிகளின் மகிமையை தெரிந்து கொண்ட பலர் இவருக்கு சீடர்களாக வந்து சேர்ந்தார்கள்.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்     

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Nov 5 2013. Filed under Headlines, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், முதன்மை பக்கம், முருகன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech