Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. வெற்றி பெற வேண்டும் என்றால் சகிப்புதன்மை இருக்க வேண்டும். ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரையில் காத்திருக்குமாம் கொக்கு என்பதைபோல, சாதிக்க வேண்டுமானால், நம், கொள்கையின் இலக்கை எட்ட வேண்டுமானால் அத்தகைய நேரமும், காலமும் அமையும்வரையில் காத்திருந்தால் வெற்றிதான். இதைதான் நம் முன்னோர்கள். “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்றார்கள். முல்லா வாழ்வில் நடந்த ஒரு சுவரஸ்யமான கதை இது. முல்லா வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அவசரம் – பரபரப்பு என்பது இந்த காலத்தில் மட்டுமல்ல உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே அனைவருக்கும் இருக்கிறது. உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. கண்ணகியின் சிலம்பில் ஒன்றை கோவலன் விற்க சென்றான். அந்த நேரத்தில் பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பு காணாமல் போய் இருந்ததால், அதை யார் திருடினார்கள் என்று கண்டுபிடியுங்கள் என்று அரசர் உத்தரவிட்டு இருந்தார் அந்த நேரத்தில் தான் கோவலனின் விதி விளையாட தொடங்கியது. ஆம். […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. வசதி வாய்ப்புகள் இல்லாமல் அதனால் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். ஆனால் எல்லா வசதிகள் இருந்தும் பலர் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இவர்களால் அந்த குடும்பத்தில் இருப்பவர்களும் நிம்மதி இழந்து கஷ்டப்படுகிறார்கள். மன அழுத்தத்திற்கு காரணம், தேவையற்ற சிந்தனை. நடக்காதது நடந்துவிட்டது போல ஒரு பிரம்மை. அளவுக்கு அதிகமான கற்பனை. வீண் பயம் இவைதான் மன அழுத்தத்திற்கு பெரும் காரணங்கள். ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஒரு ஊரில், […]
கே.விஜய கிருஷ்ணாராவ் தேவபட்டணமாகிய அமராவதியில் தேவர்கள், முனிவர்கள் சூழ, தன் சிங்காதனத்தில் அமர்ந்திருந்தார் இந்திரன். அன்று ஒரு முக்கிய ஆலோசனையில் மூழ்கிருந்தவர், நான்முகனான பிரம்ம தேவனையும் அழைத்திருந்தார். “ஒவ்வொரு காலகட்டத்தில் ஏதோ ஒரு அசுர குலத்தவன் தேவர்களை இம்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதேனோ?“ என்று வினவினார். “எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான் தேவேந்திரா! இம்முறை நமது பாதுகாப்பிற்கு லோகமாதா பார்வதிதேவியை சரணடைவதை தவிர வேறு நல்வழி இருப்பதாக தமக்கு தோன்றவில்லை.” என்றார் பிரம்மதேவர்! “ஆம் பிரம்ம தேவரே, அதுவே சரி. […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒரு அரசர் இருந்தார். அவருக்கு ஒரு கேள்வி எழுந்தது. யார் உண்மையான தைரியசாலி என்பதுதான் அவர் கேள்வி. இதை பற்றி மந்திரிகளிடம் கேட்டார் அரசர். இதற்கு ஒவ்வொரு மந்திரிகளும் ஒவ்வொரு கருத்துகளை சொன்னார்கள். முதல் மந்திரி எழுந்தார். “அரசே, சிறு போர் படையாக இருந்தாலும் பெருஞ்சேனையை எதிர்கொள்ள துணிபவர்கள்தான் மகா தைரியசாலி.” என்று கூறி அமர்ந்தார். அடுத்த மந்திரி எழுந்தார். “அரசே, போரில் எதிரிகளுக்கு அஞ்சாமல் போரிட்டு வீர […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. என் நண்பன் போல யார் இருக்கிறான்? என்று கைகோர்த்து சொன்னவர்களும் ஏதோ சில காரணத்தால், அதே நண்பர்கள் நீயா- நானா என்று ஆவதும் உண்டு. ஒரே தட்டில் சாப்பிட்டோம் ஆனால் இன்று அவன் யாரோ நான் யாரோ என்று கூறுபவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் நண்பர்களாக இருந்து திடீர் என்று எதிரிகளாக மாறி விடுகிறார்கள்?. பார்த்து பார்த்து பழகினாலும் சில நண்பர்கள் தேள் போல் கொட்டி விடுவது ஏன்? […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. “ஒரு கவிஞன் பிறக்கிறான், ஆக்கப்படுவதில்லை” என்பது ஒரு சீன பொன்மொழி. கல்வியில் சிறந்தவரெல்லாம் எழுத்தாளராகி விட இயலாது. எழுத்தாளராக பிறப்பது என்பது ஒரு பாக்கியம், ஒரு வரம். விரல்கள் உள்ளவரெல்லாம் வீணை வாசித்துவிட முடியாது என்பதை போல, பேனா பிடிக்க தெரிந்தவரெல்லாம் எழுத்தாளர் ஆகிவிட முடியாது. எழுத்தாளர் ஆவதற்கு மிக முக்கிய தேவை நல்ல சிந்தனை திறன். காலத்திற்கு ஏற்றார்போல ஒரு படைப்பாளின் எழுத்து திறன் அமைய வேண்டும். ஒரு […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. யோகம் யார் மூலமாக வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்த வேலை சோற்றுக்கு திண்டாட்டமாக இருந்தான், இன்று என்ன கொண்டாட்டமாக வாழ்கிறான் பார் என்று மற்றவர் சொல்லும் வகையில் வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் உண்டு. அனைவருமே வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் முயற்சிக்கிறார்கள். முயற்சிப்பவர்கள் அனைவருமே வெற்றி பெறுகிறார்களா என்றால் இல்லை. விதைத்த விதைகள் அனைத்தும் மரமாகிவிடுகிறதா என்ன? மனித வாழ்வில் அனைவரும் யோகத்தை பெற்று விடுவதில்லை. யோகம் என்பது […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் தேவை புத்திசாலிதனம். அது இருந்தாலே பணம், புகழ், நண்பர்கள் என்று அனைத்தையும் பெற்று விடலாம். ஒரு ஊரில் ஏழை ஒருவன் இருந்தான். அவன் வறுமையின் கொடுமையில் இருந்தாலும் இறைவன் அவனுக்கு புத்திசாலியான மகனை தந்திருந்தான். அதனால் அந்த ஏழை தன் மகனுக்கு நல்ல படிப்பு தர வேண்டும் என விரும்பினான். அதனால் அந்த நாட்டை ஆளும் அரசரிடம் சென்று, ”அரசே, நான் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகத்தில் இராகு – கேது அருமையாக அமைந்து விட்டால், அந்தஸ்தான வாழ்க்கை தந்து செல்வ சீமானாக்குகிறது. பண வசதியை தரக்கூடிய தனஸ்தானாதிபதி, 6-8-12-ல் அல்லது நீச்சம் பெற்று இருந்தாலும் கவலை வேண்டாம். தனத்தை நான் தருகிறேன் என்று இராகு-கேது மல்லுகட்டிக் கொண்டு முன்னால் வருவார்கள். “கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்று சொல்பவர்களே… கேதுவாகிய நான் கெடுப்பதில்லை, கொடுப்பவன். அதுவும் அள்ளி கொடுப்பேன்.” என்கிறார் கேது பகவான். அது […]