Wednesday 8th May 2024

தலைப்புச் செய்தி :

புகழ் பெற்ற எழுத்தாளர் ஆகும் யோகம்…. எழுத்துத் துறையில் புகழும் பணமும் பெறுபவர் யார்?

who can become a writerSri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

“ஒரு கவிஞன் பிறக்கிறான், ஆக்கப்படுவதில்லை” என்பது ஒரு சீன பொன்மொழி. கல்வியில் சிறந்தவரெல்லாம் எழுத்தாளராகி விட இயலாது. எழுத்தாளராக பிறப்பது என்பது ஒரு பாக்கியம், ஒரு வரம். விரல்கள் உள்ளவரெல்லாம் வீணை வாசித்துவிட முடியாது என்பதை போல, பேனா பிடிக்க தெரிந்தவரெல்லாம் எழுத்தாளர் ஆகிவிட முடியாது.

எழுத்தாளர் ஆவதற்கு மிக முக்கிய தேவை நல்ல சிந்தனை திறன். காலத்திற்கு ஏற்றார்போல ஒரு படைப்பாளின் எழுத்து திறன் அமைய வேண்டும். ஒரு எழுத்தாளர் எந்த சூழ்நிலையில் ஒரு படைப்பை உருவாக்கி இருந்தாலும், அதனை எப்போது படித்தாலும், அந்த வாசகரை அதே சூழ்நிலையில் பயணிக்க வைக்கும் திறமை வேண்டும்.

ஒருமுறை, திரு.என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் திரு.கல்கியிடம், “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை. எப்படி எழுதுவது?” எனக் கேட்டார்.

“அதற்கு, நான்கு மை வேண்டும்.” என்றார் கல்கி.

“ஒ அப்படியா…? சரி எந்தெந்த நிறத்தில் மை வாங்க வேண்டும்”என்றார் என்.எஸ்.கே.

“திறமை, தனிமை, பொறுமை, இவற்றுடன் பேனா மை” என்றார் கல்கி.

இதைகேட்ட  என்.எஸ்.கே., “அருமை அருமை” என்றார்.

பேச்சாளர்கள் அனைவரும் நல்ல எழுத்தாளர்களாக இருப்பதும், எழுத்தாளர்கள் அனைவரும் நல்ல பேச்சாளர்களாக இருப்பதும் அபூர்வம். எழுத்தும்-பேச்சும் அற்புத கலைகள். எழுத்தாளர் ஆவது யார் என்ற தலைப்பு எழுதும்போது, கல்யான பரிசு என்ற திரைப்படத்தில் கே. ஏ.தங்கவேலுவின் நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. அந்த படத்தில் அவர் தன் மனைவியிடம், தான் ஒரு எழுத்தாளர் என்றும்,  பைரவன் என்ற பெயரில் நான்தான் எழுதுகிறேன் என்றும் பொய் சொல்வார்.

இதனால் அவர் மனைவி மகிழ்ந்து அவரை பாராட்டுவார். அத்துடன் தன் தோழிகளிடத்திலும் தன் கணவரை பற்றி பெருமையாக பேசுவார்.

இதைகேட்ட கே.ஏ.தங்கவேல், “பைரவா… நீ வாழ்க, உன்னால் நான் வாழ்க.” என்பார். இது சிரிக்க கூடிய காட்சியாக இருந்தாலும் சற்று சிந்திக்க வேண்டிய காட்சி. காரணம், எழுத்தாளராக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை சொல்லாமல் சொல்வார்.

ஒரு நல்ல எழுத்தாளர் ஆவதற்கு ஜாதகத்தில் சிறப்புகள் இருக்க வேண்டும்.

லக்கினத்திற்கு மூன்றாம் இடம் எழுத்துறை தொடர்பான இடம். அந்த மூன்றாம் அதிபதி யார்?, ஜாதகத்தில் அந்த மூன்றாம் அதிபதி அமர்ந்த இடம் எது? என்று பார்க்க வேண்டும்.

குறிப்பாக, புதன் வலு பெற்று இருக்கிறனா என்று பார்க்க வேண்டும்.

Manamakkal Malaiலக்கினத்திற்கு மூன்றாம் அதிபதி, மூன்றில் இருந்தாலும், அல்லது 5,9,10,11-ல் இருந்தாலும், அவர்கள் எழுத்தாளர் ஆக வாய்ப்புண்டு.

புதன், 2,5,9,10,11-க்குரியவனாக இருந்து, 10-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,7,9,10,11-ல் இருந்தாலும் எழுத்தாளர்களாக வர வாய்ப்பு மட்டுமல்லாமல், அத்துறையில் பணத்தையும் சம்பாதிக்கலாம்.

உதாரணமாக, கடக லக்கினமாக இருந்து, மூன்றாம் அதிபதி புதன், 10-ல் இருக்கிறார் என்றால், அவர் எழுத்து துறையில் நல்ல பணமும் சம்பாதிப்பார்.

விருச்சிக லக்கினமாக இருந்து, மூன்றாம் அதிபதி சனி, 10-ல் இருந்தாலும், எழுத்து துறையில் பணம் சம்பாதிப்பார்.

ரிஷப லக்கினமாக இருந்து, மூன்றாம் அதிபதி சந்திரன், 3-ல், 5,7,9,10,11- ல் இருந்தாலும் எழுத்து துறையில் பணம் பார்க்கலாம்.

எந்த லக்கினமாக இருந்தாலும் 3-ம் அதிபதி, 2,5,7,9,10,11-ல் இருந்து அவற்றுடன், 3,6,8,12-ம் அதிபர்கள் சேராமல் இருந்தால், எழுத்தாளர்களாக மட்டுமன்றி, அத்துறையில் கை நிறைய பணம் சம்பாதிப்பார்கள் என கூறலாம்.

முக்கியமாக, மதியுக மந்திரியான புதன், கெடாமல் இருக்க வேண்டும்.

மூன்றாம் அதிபதியும், புதனும் வலுத்து இருந்தால்,

“பைரவா நீ வாழ்க, என்று மறைந்த கே.ஏ.தங்கவேலு அவர்கள் கூறுவது போல் கூறாமல், உண்மையிலேயே நீங்கள் சிறந்த  எழுத்தாளராக புகழும்-பணமும் பெற முடியும்.!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

mm ads

Posted by on Apr 5 2013. Filed under Headlines, Home Page special, செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech