Friday 17th May 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: முருகன் கோயில்

எண்ணங்களை நிறைவேற்றி தரும் எண்கண்முருகன்

நிரஞ்சனா திருவாரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள திருதலம் எண்கண் முருகன் திருகோயில். மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவையில்லை என்ற ஆன்றோர்களின் வாக்கு நூற்றுக்கு நூறு சரியானேதே என்று பல புராணங்களையும், இதிகாசங்களையும் படிக்கும்போது தெரிகிறது. இறைவனை போற்றி பாடி மகிழ்விப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதுபோல எண்ணம் முழுவதும் இறைவனை நினைத்திருந்து அருள் பெற்றவர்களும் பலருண்டு. அப்படி ஒருவர் இறைவனான முருகப்பெருமானின் கருனையை முழுமையாக பெற்றார். அவரை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். முத்தரச […]

வாழ்வின் இருள் நீக்கி வழிகாட்டும் ஓதிமலையாண்டவர்

  நிரஞ்சனா படைக்கும் கடவுள் என்றால் பிரம்ம தேவர் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் முருகப்பெருமானே படைக்கும் கடவுளாக மாறினார். காரணம் பிரணவ மந்திரத்திற்கு பிரம்மனிடம் விளக்கம் கேட்டார் முருகப்பெருமான். ஆனால் பிரம்மனுக்கோ விளக்கம் தெரியவில்லை. இதனால் கோபம் கொண்ட கந்தன், பிரம்ம தேவனை சிறையில் அடைத்து, படைக்கும் தொழிலை முருகப் பெருமானே செய்த காலத்தில், பாவப்பட்ட பிறவிகளும் முருகப்பெருமானால் புண்ணியம் அடைந்தது. இதனால் மரணம் இல்லா வாழ்வை அனைத்து ஜீவராசிகளும் பெற்றது. இதனால் பூமாதேவியால் பூமிபாரம் […]

தைப்பூசம் சிறப்பு கட்டுரை மற்றும் வீடியோ

கட்டுரை: காஞ்சி குமரக்கோட்டம் முருகன் கோயில் வீடியோ: வள்ளலார் வீடியோ: தைப்பூசம் சிறப்புகள்

சென்னையில் விநாயகருக்கு திருமணம் நடந்த இடம்

நிரஞ்சனா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில், சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.: ஒருவரின் வாழ்நாளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட இன்னாரால்தான் முடியும் என்று இறைவன் எழுதிவைத்தால் அப்படிதான் நடக்கும். இதை குருபகவானே அனுபவத்தில் உணர்ந்தார். ஆம். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால், தன்னுடைய மகனான பாரத்வாஜ மகரிஷி, கரிக்குருவியின் (வலியன்) என்கிற  பறவை உருவத்தில் பிறந்திருக்கிறானே என்று மனம் […]

முருகம்மைக்கு அருளிய முருகப்பெருமான்

நிரஞ்சனா சோழநாட்டில் குலதிலகர் செட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் முருகபெருமானின் பக்தர். நல்ல குணம் படைத்த மனைவியும் பெற்றிருந்தார். “எல்லாம் செல்வங்கள் இருந்தாலும் மழழை செல்வம் இல்லையே” என்று மனம் வருந்தினார். இதனால் ஜோதிடர் ஒருவரை சந்தித்து, தங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா என்று கேட்டனர் குலதிலகர் தம்பதியினர். “உங்கள் ஜாதகப்படி குழந்தை பாக்கியம் இருக்கிறது. நீங்கள் முருகனை தொடர்ந்து வணங்குங்கள். சஷ்டியில் விரதம் இருந்து வந்தால் உங்களுக்கு நிச்சயம் முருகப் பெருமானின் பேரருளால் அழகான […]

பக்தர்களின் குறை தீர்க்க சென்னைக்கு வந்த பழனியாண்டவர்

நிரஞ்சனா பக்தர்களின் குறைகளை தீர்க்க சென்னைக்கு வந்த பழனியாண்டவர், வடபழனி முருகன் என்கிற பெயரால் ஆசி வழங்கி கொண்டு இருக்கிறார். சிவபெருமான் அசுரர்களை அழிப்பதற்காக மேருமலையை வில்லாக வளைத்த இடம்தான் புலியூர் கோட்டம். இன்று இதுவே கோடம்பாக்கம் – வடபழனி என்று அழைக்கப்படும் பகுதியாக இருக்கிறது. இப்படி மகன் முருகன் வருவதற்கு முன்னதாகவே அப்பன் சிவன் வந்த இடம் இது. இந்த வடபழனி கோயில் சுமார் 150 வருடங்களுக்கு முன்பு உருவானது என்கிறார்கள். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் […]

முருகனை வணங்கினால் நோய் இல்லை;சிவன்மலை – குமரப்பெருமான்

நிரஞ்சனா காங்கேயம்- திருப்பூர் நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தொலைவில் இருக்கிறது சிவன்மலை குமரப்பெருமான் ஆலயம். சிவன்மலை உருவான கதை தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன். இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு என உலோகங்களால் மிக பெரிய கோட்டைகளை கட்டினார்கள். இந்த கோட்டை எந்த நேரத்திலும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் விமானம் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. கோட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போதும் அசுர […]

தன்னுடைய கோயிலுக்கு தானே பெயர் வைத்தான் முருகன்.திருப்போரூர் கந்தசாமிகோயில்

நிரஞ்சனா செங்கல்பட்டு மாவட்டம் சென்னை மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில். ஒருசமயம் விருத்தாசலத்தில் சிதம்பர சுவாமிகள் என்பவர் சமாதி நிலையில் தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரின் தவத்தில் முருகபெருமான் காட்சி தந்தார். திடுக்கிட்டு கண் திறந்து பார்த்த சிதம்பர சுவாமிகள், “இதற்கு என்ன காரணம்.? கனவில் முருகப் பெருமான் வந்தாரே. தூக்கத்தில்தானே கனவு வரும். நாம் தியானம்தானே செய்தோம். அப்படியானால் என் மனம் முருகனை நினைத்து தியானிக்காமல் அமைதியாக உறங்கியதா?.” என்று […]

மந்திரவாதியை கதிகலங்க செய்த முருகப் பெருமான்

நிரஞ்சனா வள்ளிமலை சுவாமிகள். முருகப் பெருமானின் அருள் பெற்றவர். முருகப் பெருமானின் மனைவி வள்ளியின் உயிர் தோழியான பொங்கி, இவருக்கு நேரில் காட்சி தந்தாள்.  லஷ்மி,சரஸ்வதி,பார்வதி எனும் முப்பெரும் தேவிகளின்  அம்சமானவள் பொங்கி. ஒருநாள் வள்ளிமலை சுவாமிகள், முருகனை தரிசித்துவிட்டு மலை மேல் இருந்து பக்தர்களுடன் இறங்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது பத்து வயது சிறுமி ஒருத்தி, சுவாமிகளின் முன் வந்து “எனக்கு பசிக்கிறது ஏதாவது கொடுங்கள்“ என்றாள். “என்னிடம் எதுவும் இல்லை பாப்பா“ என்றார் […]

தேர்வடிவில் திருமுருகன் கர்ப்பகிரகம்

நிரஞ்சனா திருவனந்தபுரத்தில் வழுதக்காடு என்ற இடத்தில் இடப்பழஞ்சி என்ற ஊரில், “ஸ்ரீகுமார் ராமம் இடப் பழஞ்சி ஸ்ரீ பாலசுப்பிரமண்ய சுவாமி“ எனும் முருகன் ஸ்தலம் இருக்கிறது. இந்த சுவாமியின் கர்ப்பகிரகம் தேர் வடியில் அமைந்திருக்கிறது. அந்த தேர்வடிவ கோயிலுக்கு இரண்டு பெரிய சக்கரங்கள் உண்டு. அதில் அச்சாணிகள் கூட உண்டு. இந்த தேர் வடிவ கோயிலின் வரலாறு அற்புதமானது. கிருகநாதர் என்பவரின் வீட்டில் இராமாயணம் வசித்து கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் நல்ல தேஜஸான ஒரு சிறுவன் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech