தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், மணலூர் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது வீரமாங்குடி. இங்கே வடக்குப் பார்த்த கோயிலில் எட்டுக் கரங்களுடன், காட்சி தருகிறாள் ஸ்ரீசெல்லியம்மன். தஞ்சகாசுரனின் மகன்களான தண்டகன், தாரகன், தஞ்சையன் ஆகிய மூவரும் தேவர்களைத் துன்புறுத்தினர். இதைப் பொறுக்கமுடியாத தேவர்கள் ஓடி வந்து, கோடியம்மனிடம் முறையிட்டனர். தன்னுடைய ஆறு சகோதரிகளுடன் கடும் உக்கிரத்துடன் புறப்பட்டுச் சென்ற கோடியம்மன், வெண்ணாற்றங்கரையில் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை […]
கே.விஜய கிருஷ்ணாராவ் தேவபட்டணமாகிய அமராவதியில் தேவர்கள், முனிவர்கள் சூழ, தன் சிங்காதனத்தில் அமர்ந்திருந்தார் இந்திரன். அன்று ஒரு முக்கிய ஆலோசனையில் மூழ்கிருந்தவர், நான்முகனான பிரம்ம தேவனையும் அழைத்திருந்தார். “ஒவ்வொரு காலகட்டத்தில் ஏதோ ஒரு அசுர குலத்தவன் தேவர்களை இம்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதேனோ?“ என்று வினவினார். “எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான் தேவேந்திரா! இம்முறை நமது பாதுகாப்பிற்கு லோகமாதா பார்வதிதேவியை சரணடைவதை தவிர வேறு நல்வழி இருப்பதாக தமக்கு தோன்றவில்லை.” என்றார் பிரம்மதேவர்! “ஆம் பிரம்ம தேவரே, அதுவே சரி. […]
நிரஞ்சனா செல்வ வளமையோடு வாழ்க்கை அமைய வேண்டுமா? கலையான முகம் வேண்டுமா? சௌந்தர்யமான வாழ்க்கை அமைய வேண்டுமா? வாருங்கள் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அரூப லட்சுமியை தரிசிக்க. இந்த அரூப லட்சுமியை தரிசித்த பிறகு, நன்மைகளை பெற நாம் சிறிய எளிய பரிகாரம் செய்ய வேண்டும். அது என்ன என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக ஒரு புராண சமபவத்தை தெரிந்துக்கொள்வோம். ஒருசமயம், ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீமகாலஷ்மியின் திருமுகத்தை கண்டு, “நீ என்ன அவ்வளவு பேரழகியா?. உன்னை […]
நிரஞ்சனா மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மீனாட்சி அம்மன் கோயில் வழியாக வந்தால், புதுமண்டபத்தின் கிழக்கில், கீழ ஆவணி மூல வீதியிலிருந்து பிரியும் ஏழு கடல் தெரு உள்ளது. இந்த இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காஞ்சனமாலை அம்மன் திருக்கோயில். காஞ்சனமாலை அம்மனை வணங்கினால், ஸ்ரீமீனாட்சி – சுந்தரேஸ்வரரின் அருளாசி பெற முடியும். காஞ்சனமாலை அம்மனை இந்த ஆலயத்தில் வந்து தரிசித்தால், பிரிந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம். காஞ்சனமாலைக்காக […]
நிரஞ்சனா பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும் ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது. மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை […]
நிரஞ்சனா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அல்லது மலைக்கோட்டையில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து உறையூர் வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஏறி, நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்கி, பிறகு இங்கிருந்து சிறிது தூரத்தில் மேற்கு நோக்கி நடந்தால் வெக்காளியம்மன் கோவிலை அடையலாம். அன்னை சக்திதேவி தாயாக இருந்து தன் பக்தர்களை காக்கிறாள். அதுபோலேவே, வெக்காளியம்மனாக வீற்றிருக்கும் அம்பாள், தன் நலனைவிட அவளின் பிள்ளைகளான நமது நலனே பெரியேதேன நமக்கு நல்லவழி காட்டுவதே கடமை என, […]
Written by Niranjana நல்ல வெளிச்சம் இல்லாத இடத்திலும், இருட்டாக இருக்கிறபோதும் உணவு எதுவும் சாப்பிடக் கூடாது என்பது சாஸ்திர விதிமுறை. இன்று, விஞ்ஞானம் என்று சொல்வதை அன்றைய நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்றார்கள். வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் சாப்பிடும் போது, உணவில் ஏதேனும் பூச்சிகள் விழுந்தால் அதை தெரியாமல் நாம் சாப்பிட்டுவிடக் கூடும். இதனால் சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். ஆகவே இருளில் சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் […]
நிரஞ்சனா சக்திதேவி தன் பக்தர்களை தம்முடைய குழந்தையாக பாவிக்கிறாள். அதனால் இந்த பூலோகத்தில் தோன்றி தன் பக்தர்களின் கஷ்டத்தை தீர்க்க அற்புதங்களை நிகழ்த்துகிறாள். அம்பாள், ஒவ்வொரு காரணத்தால் பல பெயர்களில் உருவாகி இருக்கிறாள். இப்போது நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன் உருவான சம்பவமும், போற்றதக்க வாழ்வை தரும் உச்சிகாளி அம்மன் உருவான விதமும். இந்த சக்திதேவியின் அற்புதத்தை படித்தாலே நிச்சயம் படிப்பவர்களின் வாழ்வில் நல்ல அற்புதங்கள் ஏற்படும். நல்ல விஷயங்களை படிக்க படிக்க […]
நிரஞ்சனா சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால் நாளையே பலன் கிடைத்துவிடும் என்று எண்ணுவது தவறு. போன மாதம் வேலை செய்ததற்கு இந்த மாதம் சம்பளம் வாங்குகிறோம். அதுபோலதான் சாஸ்திரங்களை கடைபிடிக்கும்போதே பெரிய முன்னேற்றம் தெரியவில்லையே என்று நினைக்கக் கூடாது. நல்ல விஷயங்கள் செய்து வரும்போது இன்று இல்லையென்றாலும் ஒருநாள் மாபெரும் வெற்றியை அடைய செய்கிறது. சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன்தரும். எப்படி நிலக்கரி மண்ணுக்குள் அதிக வருடம் பொறுமையாக கிடந்து வைரமாக மாறுகிறதோ அப்படிதான் நம்பிக்கையும் […]
நிரஞ்சனா மருதாணி இலையின் மருத்துவ குணத்தை பற்றி வரும் நாட்களில் தெரிந்துக்கொள்வோம். அதற்கு முன் மருதாணியின் சக்தி வாய்ந்த தெய்வீக மகத்துவத்தை பற்றி இப்போது சொல்கிறேன். மருதாணியை வைத்துக்கொண்டால் லஷ்மி கடாக்ஷம் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான் இன்றுவரை மதுரையில் இருக்கும் மதனகோபால சுவாமி ஆலயத்தில் இருக்கும் தாயாருக்கு மருதாணியை காணிக்கையாக தருகிறார்கள் பக்தர்கள். அதனை அர்ச்சகர்கள் தாயார் பாதத்தில் வைத்து அந்த மருதாணியை பக்தர்களுக்கு தருவார்கள். அந்த பிரசாதத்தை கையில் வைத்துக்கொண்டால் பக்தர்களுக்கு ஐஸ்வரியங்கள் […]