நிரஞ்சனா இறைவனை வேறெங்கும் தேடாதே,அவர் உன் உள்ளத்தில்தான் இருக்கிறார் என்பார் பெரியோர். ஒருவன் கடும் தவம் செய்து ஸ்ரீமந் நாராயணனை அழைத்து, “இவ்வுலகில் எந்த இடம் பெரியதோ அந்த இடத்தில் நான் வாழ அருள் தர வேண்டும்.“ என வேண்டினான். அத்தகையோர் பெரிய இடம் உன் மனம்தான்.“ என்றார் ஸ்ரீமந் நாராயணன். அதற்கு பக்தன், “இல்லை சுவாமி… உலகிலேயே பெரிய இடம் இருக்கிறது“ என்று வாதம் செய்தான். “நான் வாமன அவதாரம் எடுத்த போது, […]
நிரஞ்சனா மீஞ்சூர் அருகேயுள்ள மேலூரில் கோயில் கொண்டு இருக்கிறாள் திருவுடையம்மன். அந்த ஊரில் உள்ள ஒருவர் வளர்த்து வந்த பசு மாடுகளில் ஒன்று மட்டும் கொட்டகையில் இருந்து தானாகவே கட்டை அவிழ்த்து கொண்டு ஓடிவிடும். பிறகு பல மணி நேரம் கழித்து அதுவே வீடு திரும்பும். ஒருசமயம் அந்த மாட்டின் உரிமையாளர் இந்த பசுவிடம் பால் கறக்க நினைத்தார். பசுவின் மடியில் பால் இல்லை. யாராவது இந்த பால் கறந்து திருடி இருப்பார்களோ என நினைத்தார். […]
நிரஞ்சனா அம்மன் திருமணம் 1. திருவுடை அம்மன் திருமணம் செய்யாமல் தவத்திலே இருந்தார். இதை கண்ட சிவன் மனம் வருந்தி பல முறை அழைத்தும் தேவி தவத்தை களைப்பதாக இல்லை. அதனால் சிவபெருமான், முல்லை பூ வாசம் உள்ள இடத்தில் வந்து அமர்ந்தார். தவத்தில் இருந்த அம்மனுக்கு மலர் வாசம் வீசியதால் தவம் கலைந்தது. நறுமனம் வீசும் திசை நோக்கி சென்றாள் அம்பிகை. அங்கு சிவபெருமானை கண்டு மகிழ்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி வாசனை […]
நிரஞ்சனா கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் வசித்த நம்பூதிரி ஒருவர், வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாகஉருவத்தை சிலையாக செய்து தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார். ஒருநாள், நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது. அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சருமவியாதி குணமாகவில்லை. இனி இறைவன்விட்ட வழி என்று அமைதியாக இருந்தார். இறைவனுக்கு செய்யும் சேவையில் எந்த பங்கமும் […]
நிரஞ்சனா கும்பகோணம் மன்னர்குடி நெடுஞ்சாலையில் 17கி.மீ தூரத்தில் உள்ளது ஆலங்குடி குருபகவான் ஆலயம். ஈசன் ஆபத்சகாயராகவும், அம்பிகை ஏலவார்குழலியாக இங்கே காட்சி தருகிறார்கள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அமுதோடு ஆலமாகிய நஞ்சு வந்தது. அதை ஈசன் இன்முகத்துடன் பருகி உலகத்தையே காத்தார். அதனாலேயே ஆபத்சகாயர் என்றும் ஆலகால விஷத்தை சாப்பிட்டதால் ஆலங்குடி என்ற பெயர் வந்தது. காளமேகப் புலவர் பாடிய ஓரு பாடல் – “ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங்குடியான் என்று ஆர்சொன்னார்-ஆலம் குடியானே […]
நிரஞ்சனா தஞ்சை அரசர் விஜயராகவ நாயக்கர். இவர் ஆட்சி காலத்தில் மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டது. தன் கஜானாவில் இருந்த பணத்தால் வேறு ஊரில் இருந்தெல்லாம் தானியங்களை வாங்கி வந்தார். இப்படியே பல மாதம் செய்ததால் விஜயராகவ அரசின் கஜானா காலியானது. ஊரே உணவு இல்லாமலும் பண வசதி இல்லாமலும் அவதிப்பட்டது. இதை பிரச்சனைக்கு தீர்வு என்ன? யோசனையில் ஆழ்ந்தார் மன்னர். அப்போது அமைச்சர் ஒருவர், “அரசே முன்னொரு காலத்தில் இப்படிதான் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதற்கு காரணம் […]
நிரஞ்சனா கொப்புடை நாயகி அம்மன் காரைக்குடிப் பகுதியில் திகழும் கல்லுக்கட்டி என்ற ஊரில் வாழ்கிறாள். இந்த அம்மனை ஸ்ரீ காட்டம்மன் என்ற ஆலயத்தில் இருந்து எடுத்து வந்து பூஜை செய்தார்கள். ஒருநாள் முகலாயர் படையெடுத்த போது, எங்கே அம்மனுக்கு அவர்களால் பங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி, வேப்பமரத்தடின் கீழே வைத்து வழிபாடு செய்தார்கள். காலங்கள் மாறியதால் இந்த அம்மனை வணங்க மறந்தார்கள் அந்த பகுதி மக்கள்.. இந்த அம்மனுக்கு சரியான பூஜை இல்லாமல் வெறும் சிலையாகவே காட்சி […]
நிரஞ்சனா சேலம் ஆத்தூர் சாலையில் உள்ள வாழப்பாடியிலிருந்து 5கி.மீ தொலைவில் பேளூர் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளூர் என்று அழைக்கப்பட்ட இடத்தை இன்று பேளூர் என்று அழைக்கிறோம். பதரிகா ஆசிரமத்தில் இருக்கின்ற முனிவர்கள் வேத சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். இருந்தாலும் மழையில்லாத காரணத்தால் வறட்சி ஏற்பட்டது. உண்ண உணவு இல்லாமல் தவித்தார்கள். இதனால் வசிஷ்டரிடம் முறையிட்டார்கள். இவரின் வழிகாட்டுதலில் கொங்கு நாட்டில் வெள்ளாறு பாய்ந்து வளப்படுத்தும் இடத்திற்கு குடிவந்தார்கள். அந்த நகருக்கு வெள்ளூர் என்று பெயர் வைத்து […]
நிரஞ்சனா கன்னியாகுமாரி மாவட்டத்தில் தக்கலையிலிருந்து குலசேகரம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில். கேசன் என்ற அசுரன் தனது சகோதரியுடன் தவம் செய்து பிரம்மனிடம் இருந்து சாகாவரம் பெற்றான். வரம் பெற்றவர்கள் சும்மா இருப்பார்களா?. கிடைத்த வரத்தை சோதித்து பார்க்க, தான் உணடு தன் வேலையுண்டு என்று இருக்கும் முனிவர்களிடம் வீணாக சென்று சண்டைபோட்டார்கள். அசுரர்களிடம் மோத முடியாத முனிவர்கள் பெருமாளிடம் முறையிட்டார்கள். முனிவர்களின் மனக்கவலையை தீர்க்க பெருமாள் பூலோகத்திற்கு வந்து அசுரன் கேசனை […]
நிரஞ்சனா கோயம்புத்தூர் நகரின் மேற்கில் 15.கி.மீ தூரத்தில் இத்திருக் கோவில் அமைந்து உள்ளது. சூரபத்மனும் அவனுடைய சகோதரர்களும் பல தவங்கள் செய்து பல வரங்களை பெற்றார்கள். வரங்களை பெற்ற பிறகு முனிவர்களை கொடுமைப்படுத்தினார்கள். பொறுத்து பார்த்து நிம்மதி இழந்த முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். “பொறுமையாக இருங்கள். என் சக்தியால் பிறப்பெடுக்கும் முருகன், சூரனை அழிப்பான். அதுவரை நீங்கள் பாதுகாப்பாக மருதமலையில் தங்கி இருங்கள்.“ என்றார் சிவன். இறைவன் அருளியது போல சூரனை அழித்து மருதமலையில் இருந்த முனிவர்களை […]