Tuesday 26th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: ஆன்மிக பரிகாரங்கள்

நம் கர்மவினை நீங்கவே மகான்கள் தோன்றுகிறார்கள்

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 17  சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்   நிரஞ்சனா தீப ஒளி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வம் இருக்கிறது. பாழடைந்த இடங்கள் என்கிறோமே அதன் காரணம் என்ன? தீபம் ஏற்றப்படாத இடங்கள் எல்லாம் பாழடைந்த இடங்கள் ஆகிறது. வெளிச்சம் குடியேறாத இடத்தில் சாத்தான் குடியேறும். அதுபோல் மனிதர்களுக்குள்ளும் தெளிவான மனம் என்கிற வெளிச்சம் வேண்டும். அது இல்லை என்றால் மனதினுள் இருள் சூழ்ந்து அந்த இருள் மனித குணத்தை அரக்க […]

வாழ்வின் இருள் நீக்கி வழிகாட்டும் ஓதிமலையாண்டவர்

  நிரஞ்சனா படைக்கும் கடவுள் என்றால் பிரம்ம தேவர் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் முருகப்பெருமானே படைக்கும் கடவுளாக மாறினார். காரணம் பிரணவ மந்திரத்திற்கு பிரம்மனிடம் விளக்கம் கேட்டார் முருகப்பெருமான். ஆனால் பிரம்மனுக்கோ விளக்கம் தெரியவில்லை. இதனால் கோபம் கொண்ட கந்தன், பிரம்ம தேவனை சிறையில் அடைத்து, படைக்கும் தொழிலை முருகப் பெருமானே செய்த காலத்தில், பாவப்பட்ட பிறவிகளும் முருகப்பெருமானால் புண்ணியம் அடைந்தது. இதனால் மரணம் இல்லா வாழ்வை அனைத்து ஜீவராசிகளும் பெற்றது. இதனால் பூமாதேவியால் பூமிபாரம் […]

திருப்புமுனை தரும் மகாசக்தி தேவி

நிரஞ்சனாசுதமன் என்ற அரசர் மதுமந்தம் என்ற நாட்டை ஆட்சி செய்து வந்தார். இந்த அரசருக்கு “வித்யாவதி” என்ற அழகான மகள் இருந்தாள். பொதுவாக, “அழகாக இருப்பவர்களுக்கு அறிவு இருக்காது. அறிவு இருப்பவர்களுக்கு அழகு இருக்காது.” என்று சொல்வார்கள். ஆனால் இளவரசி வித்யாவதியோ அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கினாள். தன் மகளுக்கு ஏற்ற நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதால் அரசர் ஒரு அறிவிப்பு செய்தார். “எல்லா லட்சணங்களும் பொருந்திய நம் இளவரசிக்கு இணையான திறமைகளுடன் உள்ள ஒரு […]

தடையில்லா கல்வி வரம் தரும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி

நிரஞ்சனா   கல்விக்கு அதிபதி சரஸ்வதி. படைப்புகளுக்கு அதிபதி பிரம்மா. ஆனால் சகல லோகங்களுக்கும் தலைவர் ஈசன். படைக்கும் தலைவனான பிரம்மாவின் புதல்வர்களுக்கு குருவாக இருந்து ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியாக உபதேசம் செய்தார் சிவபெருமான். அதை பற்றி தெரிந்துக் கொள்ள இருக்கிறோம். குருவாக சிவபெருமான் பிரம்மாவின் மகன்கள் சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர். இவர்கள், தங்கள் தந்தையை போல ஞானம் பெற வேண்டும் என்று எண்ணினார்கள். அதற்கு, “யாரிடம் ஞான உபதேசம் பெறுவது?. நம் தந்தையிடமே உபதேசம் பெற்றால் […]

தைப்பூசம் சிறப்பு கட்டுரை மற்றும் வீடியோ

கட்டுரை: காஞ்சி குமரக்கோட்டம் முருகன் கோயில் வீடியோ: வள்ளலார் வீடியோ: தைப்பூசம் சிறப்புகள்

சர்வேஸ்வரனை நம்பினால் சர்வலோகமும் அடிமை பகுதி -3

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  நிரஞ்சனா வீட்டுக்கு மூட்டை மூட்டையாக பரிசுகளுடன் வந்த திருவாதவூரரை குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்று புகழ்ந்தார்கள். ஆனால் திருவாதவூரருக்கு நடப்பது கனவா – நிஜமா?. என்றே புரியவில்லை. “குதிரை வாங்குவதற்கு கொண்டு சென்ற பொருளை சிவாலய திருப்பணிளுக்குதானே செலவு செய்தோம். யார் இந்த குதிரை வீரர்கள்.? இவர்களை நாம் இதற்கு முன்னர் பார்த்தது கூட இல்லையே.? ஆனால் என்னை இதற்கு முன் சந்தித்தது போல பேசினார்களே.? ஏதோ ஒன்று நடக்கிறது. இது […]

சர்வேஸ்வரனை நம்பினால் சர்வலோகமும் அடிமை-பகுதி -2

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்    நிரஞ்சனா வாதவூரடிகள், தாம் படும் துன்பத்தைவிட இறைவனின் சொல் பொய்யாகுமோ? அவ்வாறு ஆகாது. என்று நம்பிக்கையுடன், “திருப்பெருந்துறையில் உறையும் பெருமானே, திருவாலவாயில் உறையும் சிந்தாமணியே, இச்சிறியேற்கு இரங்கிக் கருணை புரியாயோ, ஊரார் உன்னை நகைத்தலை நினைக்க வில்லையோ, உன் அடிமை நான் துன்பத்தில் இருக்கிறேன். இதை அறிந்தும் வராமல் இருப்பாயோ.”  என்று வேண்டினார். அன்று ஆவணி மூல நட்சத்திரம். சிவபெருமான், நந்தி தேவரையும், சிவகணங்களையும் அழைத்தார். “பாண்டிய மன்னன் […]

சர்வேஸ்வரனை நம்பினால் சர்வலோகமும் அடிமை பகுதி-1

நிரஞ்சனா   வைகையாற்றின் கரையில் விளங்கும் ஊர் திருவாதவூர். இங்கு ஆமாத்தியர் எனும் அந்தணர் குலத்தில் பிறந்தவர் வாதவூரடிகள். இவர் சிறந்த சிவபக்தர். இவருடைய நல்லறிவு, திறமை, சொல்லாற்றல், கல்வி அறிவு, நற்பெயர், புகழ் ஆகியவற்றை கேள்விபட்ட பாண்டிய மன்னரான அரிமருத்தன பாண்டியன், வாதவூரடிகளை அழைத்து அவரின் அறிவை திறனை சோதித்து ஆச்சரியம் அடைந்தார். மநுசாத்திரப் புலமை வாய்ந்தவராகவும், தனுர் வேதச் சிறப்பும் கொண்டவராகவும் திகழ்ந்தார் வாதவூரடிகள். அதனால் வாதவூரடிகளை “திருவாதவூரர்” என்று அழைத்து, பாண்டிய நாட்டின் […]

பதவி பூர்வ புண்ணியம்

நிரஞ்சனா ஒருவர் வெற்றி பெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை  அடைந்ததாக சொல்வார்கள். தோல்வியை மட்டும் விதி என்று கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம் செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது. இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம் செய்து பயன் பெற்ற பலர் உண்டு. அதில் ஒரு புராண சம்பவத்தை தெரிந்துக் கொள்வோம். பணிப்பெண்ணின் மகன் மகரிஷிகளின் ஆசிரமங்களை சுத்தப்படுத்தி அவர்களுக்கு உணவு சமைத்து தரும் வேலையை செய்து வந்தாள் ஒரு பணிப்பெண். மகரிஷிகளும் அந்த […]

வேண்டுவதை முழுவதும் தரும் வியாக்ரபுரீஸ்வரர்

நிரஞ்சனா   காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனத்தில் உள்ளது,-ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில். இறைவனிடம் தமக்கு பண வசதி வேண்டுவோர் சிலர். நல்ல குடும்ப வாழ்க்கை வேண்டுவோர் சிலர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிலர். இப்படி அது வேண்டும் – இது வேண்டும் என்று வழக்கமான வேண்டுதல்கள்தான் இறைவன் காதில் விழும். ஆனால் ஒரு பக்தரின் வேண்டுதல் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு இருந்தது. தமக்கு இரவிலும் கண் தெரியவேண்டும், மலை உச்சியிலும் மர உச்சியிலும் மலர்களை ஏறி பறிப்பதற்கு ஏதுவாக […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech