Wednesday 27th November 2024

தலைப்புச் செய்தி :

கனமழை : புதுச்சேரி..காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *|
Category archives for: ஆன்மிகம்

செல்வம் பெருக ஸ்ரீ மகாலஷ்மி கூறிய இரகசியம்

நிரஞ்சனா வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு காபி,டீ கொடுத்து உபசரிப்பது வழக்கம். அதில் சுமங்கலி பெண்கள் இருந்தால் அவர்களுக்கு மஞ்சள் – குங்குமம் – வெற்றிலை-பாக்கு-வாழைபழம் இவற்றுடன் வஸ்திரதானமும் செய்தால் ஸ்ரீ மகாலஷ்மிக்கே அவற்றை கொடுப்பதாக ஐதீகம். கொடுப்பவருக்கு தனம், தானியம் வற்றாத செல்வம்யாவும் கிடைக்கும். அதனால்தான் வரலஷ்மி விரதத்தன்று சுமங்கலி பெண்களுக்கு இவற்றை கொடுக்க வேண்டும் என ஸ்ரீமகாலஷ்மியே பத்ரச்வஸ் என்ற அரசனின் மகள் சியாமளாவுக்கு கூறியதாக புராண கதையில் உள்ளது.  

இராஜயோகம் தரும் சிவலிங்கம்

 நிரஞ்சனா  வீட்டில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். அசுரர்களுக்கு சிவலிங்கத்தின் மகத்துவத்தை எடுத்து சொன்னார் மயன். அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார்கள் அசுரர்கள். அந்த பூஜையின் பலனாக அசுரர்கள் மாட மாளிகையுடன், கற்பக விருச்சகங்களே மரமாகவும் காமதேனுவே பசுவாகவும் அசுரர்களின் மாளிகையை சுற்றி இருந்தது. ஐஸ்வரியத்தில் புரண்டார்கள் அசுரர்கள். சிங்கத்திற்கு நேரம் கெட்டால், நரி கூட நாட்டாமை செய்யும் என்கிற கதையாக தேவர்களை விரட்டி அடித்தார்கள் அசுரர்கள். பிரம்மனும், […]

வருவதை உணர்ததும் சகுனம்

நாம் வெளியில் செல்லும் போது சகுனம் பார்ப்பது தவறல்ல. நல்லவற்றையும் ஆபத்துகளையும் முன் கூட்டியே இறைவன் சகுனம் மூலமாக நமக்கு உணர்த்துகிறார். ராமாயணத்தில் இராவணன் யுத்தத்திற்கு புறப்படும் போது சகுனம் சரியில்லாமல் இருந்தது. ஆனால் இராவணன் அலட்சியப்படுத்தினான். அது போல ராமன், சீதையை திருமணம் செய்து கொண்டு தன் உறவினர்களுடனும் தன் சொந்த ஊரான அயோதிக்கு புறப்பட்டு செல்லும் நேரத்தில், காகம் முதலிய பறவைகள் இடப்பக்கத்தில் சப்தமிட்டபடி வந்தது. இதை கண்ட தசரதன், “சகுனம் சரியில்லையே… என்ன […]

“பாட்டன் கையெழுத்து – மாறிய தலையெழுத்து.“,- அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 2

சுந்தர மூர்த்தி நாயனார்   அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 2  நிரஞ்சனா முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும்   உலகெலாம் இருப்பவர்களுக்கு தந்தையாக காட்சி கொடு்ப்பது ஈசன். அவரின் இடம் இமயமலை. அந்த மலையோ விபூதி பூசியது போல் வெண்மையாக இருக்கும். பிரம்மன் அன்ன வாகனத்தில் வந்து இறைவனை தரிசித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால், அந்த வெண்மையான கையிலாய மலையில் தன் வாகனமான அன்னபறவை எங்கு இருக்கிறது என்று தேடி அழைத்து செல்வதே வாடிக்கையாக கொண்டு […]

குளிகை என்பது நல்ல நேரமா..?

குளிகை பிறந்த கதை நிரஞ்சனா  ராகு காலம் – எமகண்டம் என்றால் என்ன? என்று உங்களுக்கு தெரியும். குளிகை நேரம் என்றால் என்னவென்று தெரியுமா? அதற்கு ஒரு கதையும் உண்டு. இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்கு காரணம் இராவணன் தந்தையாகப் போகிறான். அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இராவணன்.   “எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாக இருக்க வேண்டும். எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவணாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் […]

“பாபாவின் பார்வையே மகத்துவம்.“- மகான் சீரடி சாயிபாபா வரலாறு. பகுதி – 2

மகான் சீரடி சாயிபாபா பகுதி – 2   சென்ற இதழ் தொடர்ச்சி… நிரஞ்சனா தன் குருநாதர் கூறியது போல் கபீர் ஷிரடி சென்றார். இப்போது கபீர்தான் “ஷிரடி சாய்பாபா“ என்று நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவரை ஷிரடி மக்கள் சாய்பாபா என்று ஆரம்பத்தில் அழைக்கவில்லை. ஆனால் நம் வசதிக்காக இப்போது நாம் இனி கபீரை, சாய்பாபா என்றே அழைப்போம். அங்கு உள்ள மக்கள் பாபாவை ஆச்சரியத்தோடு கண்டார்கள். வெளிநாட்டுக்கு காந்தியடிகள் சென்றபோது அங்கிருந்த மக்கள் காந்திஜியை […]

வில்வத்தினால் கிருஷ்ணருக்கு கிடைத்த வெற்றி

நிரஞ்சனா குழந்தைகள் தூங்கும் போது எழுப்பாதே என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள் இல்லையா? அதற்கு காரணம் என்ன?குழந்தை பருவத்தில்தான் தன்னை மறந்து நிம்மதியாக தூங்க முடியும். வளர்ந்த பிறகு பரப்பரப்பான வாழ்க்கை சூழலில் நிம்மதியான தூக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்பதால்தான் “தூங்குகிற குழந்தையை எழுப்பாதே“ என்று பெரியவர்கள் நாசுக்காக சொல்லி வைத்தார்கள்.  ஆனால் பகவான் கிருஷ்ணருக்கோ தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் போதே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. கம்சன், கிருஷ்ணரை கொல்ல ராட்சசியை ஏவினான். கடைசியில் கம்சனே கிருஷ்ணரை […]

கோடி நன்மை தரும் சோமவாரவிரதம்

விரதங்ளும் அதன் கதைகளும்.   பகுதி 3                                          நிரஞ்சனா  சோமவார விரதம்    இந்த சோமவார விரதத்தை தொடர்ந்து கடைபிடித்தால் சகல விதமான வசதிகள் கிடைக்கும். முன்னோரு காலத்தில் “ஸீமந்தினி“ என்ற அரசகுமாரி, சோமவார விரதத்தை சரியாகவும் முறையாகவும் கடைபிடித்து வந்தள். அவளின் பக்தியை தங்களுக்கு சாதகமாக நினைத்த திருடர்கள் ஸீமந்தினியிடம் “நாங்கள் கணவன் – மனைவி இருவரும், சோமவார விரதம் இருப்பவர்களிடத்தில்தான் உணவு அருந்துவோம். இன்று திங்கட்கிழமை நீங்களோ விரதத்தை சரியாக கடைபிடிப்பவர் என்று ஊர் மக்கள் […]

சனி பகவானின் தொல்லை தீர்க்கும் திருநீறு

விபூதியின் மகிமைகள் நிரஞ்சனா   வங்கதேசத்தில் “புஜபலன்“ என்ற அரசன் நேர்மையாக ஆட்சி செய்து வந்தான். இந்த அரசன் தன் பிறந்தநாள் அன்று அந்தணர்களுக்கு ஏராளமான தானங்களை வழங்கினான். இதை கேள்விப்பட்ட அந்தணர்கள் திரண்டு வந்தார்கள். விதர்ப்ப தேசத்தில் இருந்து “சுசீலன்“ என்ற அந்தணரும் வந்தார். இவரை கண்ட மற்ற அந்தணர்கள் “அரசே நீங்கள் சுசீலனுக்கு பரிசு வழங்கி விடுங்கள். அவர் வாங்கிய பிறகு நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். இவர் சகல சாஸ்திரங்கள் தெரிந்தவர். உலகநாயகனான ஈசனை வணங்குபவர். […]

“சிவனை வணங்கவே சிவன் அருள் வேண்டும்“ – அறுபத்து மூவர் வரலாறு

“சிவனை வணங்கவே சிவன் அருள் வேண்டும்” அறுபத்து மூவர் வரலாறு முதல் பகுதி                                                                                          நிரஞ்சனா சிவபெருமானின் பக்தர்களை சிவதொண்டர்கள் என்று அழைப்பது சிறப்பு பெயராகும். இதில் அறுபத்தி மூன்று சிவஅடியார்கள் சிறப்பை மட்டும் ஏன் சொல்ல வேண்டும்? என்று பார்க்கும்போது இவர்களை போன்று ஒரு தூய சிவபக்தி மற்றவர்களிடம் இருக்க முடியுமா? என்ற விஷயம் ஆராய்ச்சிகுரியதாகவே இருக்கும். இந்த அறுபத்து மூவரை தவிர மற்ற சிவஅடியார்களின் சிவதொண்டில் குறை இருக்குமா? என்ற கேள்வி நமக்குதான் தோன்றுமே […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech