Tuesday 26th November 2024

தலைப்புச் செய்தி :

கனமழை : புதுச்சேரி..காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *|
Category archives for: ஆன்மிகம்

கொதிக்கும் உணவில் சாய்பாபா செய்த அற்புதம்

மகான் சீரடி பாபா வரலாறு பகுதி 6 நிரஞ்சனா முந்தைய பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும் தாஸ்கணு பாபாவிடம், “நான் புனித நதிகளை தரிசிக்க போகிறேன். எனக்கு ஆசி கூறி அனுப்புங்கள்.“ என்றார். கங்கை, காவேரி போன்ற பல புனிதநீரை பாபா தன் கால் பாதத்திலேயே வரவழைத்தார். அந்த புனிதநீரை மக்கள் எல்லோரும் தலையில் தெளித்து கொண்டார்கள். அந்த இடத்திற்கு “பிரயாகை நதி“ என்று பெயர் வைத்தார்கள். ஒருநாள், ஈஷா உபநிஷத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்து […]

ஆற்றில் தொலைத்த தங்கம் குளத்தில் கிடைத்த அதிசயம்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி –  5 நிரஞ்சனா  முந்தைய பதிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்  நம்பியாரூரர் விழித்து பார்த்த போது தலைக்கு வைத்து படுத்திருந்த செங்கல் தங்ககல்லாக மாறி ஜொலித்தது. இதை கண்டு, “எம் இன்னலை தீர்த்த இறைவனே..!“ என்று போற்றி மகிழ்ந்தார். திருப்புகலூர் ஈசனால் கிடைத்தது இது. “தம்மையே புகழ்ந்து“ என்று தொடங்கும் திருபதிகத்தை பாடினார். தன் ஊரான திருவாரூர் சென்று அங்கு இருக்கும் சிவனை வணங்கி தன் இல்லத்திற்கு சென்றார். திருவிழாவை சிறப்பாக […]

திருப்பம் தரும் திருபரங்குன்றம்

நிரஞ்சனா கயிலாயமலையில் சிவபெருமான் பார்வதிதேவிக்கு பிரணவ மந்திரத்தையும் அதன் விளக்கத்தையும் உபதேசித்து கொண்டு இருந்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த பாலமுருகனும் இதை கேட்டார். “தந்தை என் தாய்க்கு உபதேசித்ததை நான் அவர் அனுமதியில்லாமல் கேட்பது பாவசெயல்.“ என்று அவர் மனம் கருதி திருப்பரங்குன்றம் சென்று தவம் இருந்தார். முருகனின் தவத்தை ஏற்று சிவசக்தி காட்சி தந்தார்கள். அவர்கள் காட்சி தந்த இடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலாக இப்போது திகழ்கிறது. மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்கள் திருபரங்குன்றத்தில் முருகனையும் […]

சாம்பிரானியுடன் குங்குலியம்.

நிரஞ்சனா கலயனார் என்பவர் தினமும் ஈசனையே வணங்கி வருவார்.  சிவலாயத்தில் சாம்பிரானி போடும் போது குங்குலியத்தையும் தன் பங்குக்கு கொடுத்து போட சொல்வார். குங்குலியத்தை ஆலயத்திற்கு கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். பல வருடங்கள் இந்த வழக்கம் தொடர்ந்தது. தங்கத்தை தீயில் காட்டி தட்டி அழகான ஆபரணம் செய்வார்கள். வைரத்தை பட்டை தீட்டினால்தான் பலபலக்கும். இந்த இரண்டுக்கும் சோதனை வந்தாலும் முடிவில் மதிப்பு அதிகமாக கிடைக்கும். அதேபோலதான் இறைவன் பக்தர்களை சோதித்து பார்ப்பதும். ஈசனின் திருவிளையாட்டில் இருந்து யார்தான் […]

வாகன சக்கரங்களில் எலுமிச்சை நசுக்குவது எதற்காக?

நிரஞ்சனா சும்பன்-நிசும்பன் இருவரும் உடன் பிறந்த சகோதர்கள் பிரம்மனை நினைத்து கடும் தவம் செய்து,  கருவில் உருவாகாத பெண்ணால்தான் தங்களுக்கு மரணம் நேர வேண்டும் என்கிற வரம் பெற்றவர்கள். கருவில் உருவாகாமல் எப்படி உயிர் ஜெனனம் ஆகும்? அதனால் சும்பனையும் நிசும்பனையும் யமனால் நெருங்கவே முடியவில்லை. இப்படிபட்டவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் எத்தனை யுகம் மாறினாலும் நாமும் உயிருடன் இருக்க முடியும் என்ற எண்ணத்தில் “ரக்த பீஜன்“ என்ற அசுரனும் இந்த அசுர சகோதர்களுடன் கூட்டு சேர்ந்தான். ரக்த […]

வாரியார் சுவாமிகளுக்கு வள்ளலார் தந்த ரூ.3500

 நிரஞ்சனா நாம் தெய்வத்தை தொழுவது சிறப்புக்குரியதா அல்லது மகான்களை வணங்கவது சிறப்புக்குரியதா என பார்க்கும் போது, இறைவனை வணங்குவது எவ்வளவு சிறப்போ அதனினும் சிறப்பு இறைவனுடைய அடியார்களை போற்றுதலும் வணங்குதலும் என்பதை சைவ – வைணவ சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை. கடலில் பெரிய கல்லை போடுகிறோம் அது உடனே தண்ணீர்க்குள் போய்விடும். அதே கல்லை ஒரு கட்டையின் மேல் வைத்து கடலில் விட்டால் கட்டையோடு அந்த கல்லும் மிதந்துகொண்டு செல்லும் – முழ்காது. அதைபோல்தான் இறைவனை வணங்குபவர்களும் […]

சாய்பாபாவின் அருளாசி – மகாராஜாவான போலீஸ் கான்ஸ்டேபில்

மகான் சீரடி பாபா வரலாறு பகுதி 5 நிரஞ்சனா முந்தைய பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும்  பக்கானீரில் என்ற ஊரில் கேப்டர்ஹடே என்பவர் சிறந்த பாபா பக்தர். 24 மணி நேரமும் பாபாவின் நினைவாகவே இருப்பார். தான் சாப்பிட்டால் தன் அருகே பாபாவும் உட்கார்ந்து சாப்பிடுவதாக நினைப்பார். பாபாவை எப்படியாவது நேரில் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். “சீரடிக்கு போய்வர இரண்டு மூன்று நாள் ஆகிவிடும். நேரமும் இல்லை. அதற்கான வசதியும் இல்லையே“ என்று வருந்தி கொண்டு […]

சிவ பக்தர்களுக்கு குபேரன் துணை – அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 4

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 4 நிரஞ்சனா  சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் கமலினி திருவாரூரில் வந்து அவதரித்தார். பதியிலார் குலத்தில் பிறந்தார். அதாவது சிவனை தவிர வேறு யாரையும் நினைக்காமல் சிவதொண்டே உயர்ந்த தொண்டு என்று நினைக்கும் குலத்தில் பிறந்தாள். கமலினி பிறந்து சில நாட்கள் ஆனது. குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருவாதிரை என்ற நல்ல நாளில் பரவையார் என்று திருநாமம் சூட்டினார்கள். பார்க்கும் போதே தூக்கி கொஞ்ச வேண்டும் […]

பெருமாளே நடத்திய கும்பாபிஷேகம்

நிரஞ்சனா திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் திருச்சி – துறையூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து பதினேழு கி.மீ. தொசைவில் உள்ளது. சோழநாட்டுத் திவ்விய தேசங்களில் நான்காவதாக அறியப்படுகிறது. திரேதாயுகத்தில் அயோத்தி நகரை சிபி சக்கரவர்த்தி அரசாண்டு வந்தார். ஒருநாள் நீலிவனம் பக்கமாக சென்று கொண்டு இருந்த அரசர், அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பன்றி அங்கும் இங்குமாக ஒடி கொண்டு இருந்தது. பன்றியாக இருந்தாலும் பார்க்க மிக வெள்ளையாக அழகாக இருக்கிறதே என்று நினைத்து, தாம் அரசர் என்பதையே […]

திருக்கோயில் உணவு – பிணி தீர்க்கும் மருந்து

நிரஞ்சனா  மகரிஷி துர்வாசர் முனிவருக்கு அதிகமான பசி ஏற்பட்டது. எங்கு சென்று சாப்பிடுவது என்ற கவலை அவரை வாட்டியது. அப்போது அவர் பார்வையில் ஒரு குடிசை தென்பட்டது.  அந்த குடிசையின் அருகில் சென்று அங்கு வசிக்கும் முத்கலர் என்பவரிடம் “எனக்கு பசியாக இருக்கிறது“ என்றார். ஆனால் முத்கலரோ தன் குடும்ப பசிக்கு அவர் தினமும் வயல்வெளிகளில் சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை  ஒவ்வொன்றாக பொருக்கி சேமித்து பத்து நாட்களுக்கு ஒரு தடவைதான் சாப்பிடுவார்கள். அந்த சாப்பாட்டையும் துர்வாச முனிவர் ஒரே […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech