அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 12 சென்ற பகுதியை படிக்க… நிரஞ்சனா சிறுத்தொண்டரும் வெண்காட்டு நங்கையாரான இவரது மனைவியும் சிவத்தொண்டு புரிவதில் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். ஒரு சிவன்னடியாராவது உணவு உட்கொண்ட பிறகுதான் தாம் உணவே உட்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக நின்றார்கள் இந்த தம்பதியினர். கணபதீஸ்வரர் என்ற சிவ திருதலத்திற்கு சென்று அங்கு வரும் சிவன் அடியார்களை தம் வீட்டிற்கு அழைத்துவந்து உணவு பரிமாறுவார்கள். இப்படி தினமும் செய்து வந்தார் சிறுத்தாண்டர். […]
நிரஞ்சனா போகர். இவருக்கு பெருமைகள் பல உண்டு. இவரின் வைத்தியமுறைகள், சித்து வேலைகள், கூடுவிட்டு கூடு பாயும் அதிசயம் என்று இன்னும் இன்னும் எத்தனையோ அற்புதங்களை போகர் நிகழ்த்தி இருந்தாலும், “போகர்” என்று சொன்ன உடன் நம் நினைவுக்கு வருவது பழனி முருகன். இந்த போகர் யார்.? எதற்காக பழனியில் முருகன் சிலையை உருவாக்கினார்.? அந்த பழனி முருகன் சிலையானது நவபாஷாணங்களால் ஆனது. அந்த நவ பாஷாணங்களை யார் சொல்லி செய்தார்? பொதுவாக சில பாஷாணங்கள் விஷதன்மை […]
நிரஞ்சனா வைத்தீஸ்வரன்கோயில் – மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பரசுராமனால் இங்கு வந்த சிவன் ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. கணவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் தன் வீடே திருக்கோயில் என வாழ்ந்து வந்தார். ஒருநாள் இவர்களின் வாழ்க்கையில் விதிவிளையாட தொடங்கியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பரசுராமரின் புகழ் உலகமெல்லாம் தெரியவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டியிருந்திருக்கலாம். ஆம், ஒருநாள் ஏதோ […]
நிரஞ்சனா வீட்டிலும் கோயிலிலும் விளக்கு ஏற்றும் முன்னதாக அந்த விளக்கின் திரியை சரி செய்த பிறகுதான் தீபத்தை ஏற்றுவோம். இப்படி விளக்கின் திரியை சரி செய்த பிறகு அந்த எண்ணை பிசுக்கு கையில் ஒட்டி இருக்கும். அதை பலர் தங்கள் தலையிலேயே தேய்த்துக் கொள்வார்கள். அப்படி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் என்ன கெடு பலன் வரும்? என்பதை தனக்கு வேதாளம் சொன்ன சாஸ்திர கருத்து எல்லோருக்கும் பொதுவானது என விக்கிரமாதித்தன் சொல்லியிருக்கிறார். அது என்ன என்பதை தெரிந்துக் […]
பகுதி – 2 இதன் முந்தைய பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா கைலாய மலையில் புட்பதந்தன், மாலியவான் என்கிற இரண்டு சிவகணங்கள் இருந்தார்கள். சிவபெருமானுக்கு பணிவிடை செய்வதில் இருவரும் போட்டி போடுவார்கள். ”நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருங்கள்.” என்று பலமுறை சிவபெருமானும் சொல்லி பார்த்தார். ஆனால் அந்த சிவகணங்கள் கேட்பதாக இல்லை. ஒருநாள் சிவபெருமான் மிகுந்த கோபம் கொண்டு புட்பதந்தனை யானையாகவும் மாலியவானை சிலந்தியாகவும் பிறக்கும்படி சாபமிட்டார். இருவரும் அவ்வாரே பிறவி எடுத்தனர். அதுவும் ஒரே […]
பகுதி – 1 நிரஞ்சனா திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ளது ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். பிரம்மனால் அன்னை ஆணாக மாறிய சம்பவம் பிரம்மன், தன் படைக்கும் தொழிலை சிறப்பாக செய்துவந்தார். சித்திர குப்தரும் அவரவர் செய்யும் பாவ புண்ணிய கணக்கை பிரம்மனிடம் தருவார். ஒருநாள் சித்திரகுப்தர், ஒரு ஆத்மாவின் பாவ புண்ணிய கணக்கை சரிபார்த்த போது அந்த ஆத்மா பாவமே செய்யாமல் அதிக புண்ணியம் மட்டுமே செய்திருந்தது. இதனால் அந்த அந்த ஆத்மாவை பற்றி “புண்ணியவான்” வரிசையில் எழுதி […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 12 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா யார் இந்த சாய்பாபா? எதற்காக சீரடிக்கு வந்தார்.? அவர் மகானா அல்லது மந்திரவாதியா? போன்ற கேள்விகளை தீயவர்கள் மக்கள் மத்தியில் பரப்பினார்கள். இதை உடனே அறிய வேண்டும், நமக்காக இல்லை என்றாலும் பாபாவை பற்றி அவதூறாக பேசும் சண்டாளர்களின் வாயை மூட வேண்டும் என்ற முடிவுடன் சிலர் கண்டோபா ஆலயத்திற்கு சென்று(சிவன் கோயில்) பூசாரியிடம் குறி கேட்டார்கள். அதை காண சீரடி […]
நிரஞ்சனா அருள்மிகு ஸ்ரீபாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில் விட்டலாபுரம் – 627 304 திருநெல்வேலி மாவட்டம். கோயில் உருவான கதை 16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசரின் தமிழகப் பிரதிநிதியாக விட்டலாராயன் என்ற விட்டலதேவன் ஆட்சி செய்து வந்தார். இவர் பகவான் பாண்டுரங்கன் மீது தீவிர பக்தி கொண்டு இருந்தார். எதையும் பாண்டுரங்கனால்தான் செய்ய முடியும் என்று அதிகமாக நம்பிக்கை கொண்டு இருப்பார். இவருடைய பக்தியை கண்ட எல்லோரும் பாராட்டி வணங்கும் பக்திமானாக திகழ்ந்தார். ஒருநாள் பாண்டுரங்க […]
நிரஞ்சனா திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 2.கி.மி மீட்டர் தொலைவில்அமைந்துள்ளது, திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதியம்மன் ஆலயம். திருமண கோலத்தில் காட்சி தரும் காந்திமதி அம்மன் சிவபெருமானுக்கும் அன்னை பார்வதிதேவிக்கும் திருமண வைபவம் கோலாகலமாக நடந்தது கொண்டு இருந்தது. சிவ-சக்தியின் திருமணத்தை காண கைலாய மலைக்கு முனிவர்கள், தேவர்கள், பார்வதிதேவியின் உறவினர்கள், அசுரர்கள் என்று பலர் ஒன்றாக திரண்டு வந்ததால் பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்தது, தென்திசை உயர்ந்தது. இதனால் திருமண நிகழ்ச்சியில் குழப்பம் உண்டானது. அந்த நேரத்தில் மணமகனான […]
நிரஞ்சனா திவாகர முனிவர் ஸ்ரீமன் நாராயணனை தன் மகனாக அடைந்து சீராட்டி வளர்க்க விரும்பினார். அதனால் ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து கடும் தவம் இருந்தார். முனிவரின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட பெருமாள், குழந்தை உருவத்தில் திவாகர முனிவர் முன் தோன்றி “என்னை அன்பாக வளர்த்தால் நான் உங்களுடனே இருப்பேன். அதை மீறி என் மேல் சிறு கோபத்தை காட்டினாலும் அடுத்த நொடியே நான் உங்களை விட்டு பிரிந்து விடுவேன்.” என்றார். ஸ்ரீமன் நாராயணனின் இந்த நிபந்தனைக்கு சம்மதித்து குழந்தை […]