Monday 18th November 2024

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by Niranjana

சூரியனை வணங்கினால் அரசாங்க ஆதரவு

நிரஞ்சனா அகஸ்திய மகரிஷிக்கு உலகை பற்றி கவலை அதிகமாக ஏற்பட்டது. இப்போதே இப்படி அநீதிகள் தலைவிரித்தாடுகிறதே இனி போக போக எப்படி இருக்குமோ? என்ற கவலை பயத்தை கொடுத்தது. இதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தார். அநியாயங்கள் பெருகாமல் அதை தடுப்பதும் தட்டி கேட்பதும் பெண்களாகதான் இருப்பார்கள். ஆகவே பராசக்தியிடம் முறையிடுவோம் என்ற எண்ணத்துடன் தேவியை அணுகி தன் மன கவலைகளை கூறினார் அகஸ்தியர். நல்ல உள்ளமும், மன தைரியமும் கொடுக்க கூடிய ஆற்றலும் சக்தியும், “ஆதித்ய […]

“நண்பனோடு விளையாடிய சிவன்“ – அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 3

அறுபத்து மூவர் வரலாறு பகுதி 3   நிரஞ்சனா சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் நீதி சபை முன் நடக்க போவதை எதிர்பார்த்து மௌனமாக நின்றிருந்தார் நம்பியாரூரர். “நம்பியாரூரரே எங்களை மன்னிக்கவும். இந்த ஒலையில் இருக்கும் கையெழுத்தும் உங்கள் பாட்டன் கையெழுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் நியாயப்படி இந்த பெரியவர் பேச்சை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும். அதுதான் தர்மம்.“ என்றார்கள் சபையோர்கள். “சரி… நான் இந்த கிழவனுடன் செல்கிறேன். ஆனால் இந்த திருவெண்ணெய் […]

அற்புதங்கள் நடத்தும் திருச்செந்தூரான்

நிரஞ்சனா முருகனுக்கு ஆறுபடை வீடு. அதில் ஒன்று திருச்செந்தூர். சூரன் முருகனுக்கு பயந்து மாமரமாக காட்சி கொடுத்தார். எல்லாம் கண நேரத்தில் அறியும் ஆறுமுகனால் இதை தெரிந்து கொள்ள முடியாதா என்ன? மரமாக உருமாறி இருக்கும் சூரனை தன் வேலால் அந்த மரத்தை இரண்டாக பிளந்தார். சூரனை கொன்றதால் பிரம்மஹத்திதோஷம் முருகனை பிடித்து கொண்டது. முன்னோரு சமயம் பிரம்மஹத்திதோஷம் நீங்குவதற்கு அன்னபூரணியிடம் உணவை வாங்கி சாப்பிட்ட பிறகுதான் சிவனுக்கே தோஷம் நீங்கியது. ஆனால் ஆறுமுக பெருமானோ யார் […]

சாய்பாபா செய்த விசித்ர வைத்தியம் – மகான் சீரடி சாயிபாபா. பகுதி-3

மகான் சீரடி சாயிபாபா. பகுதி-3 சென்ற இதழ் தொடர்ச்சி…  நிரஞ்சனா ஒருநாள் ஷீரடியில் பலத்த மழையும், பேய் காற்றும் அடித்தது. பலத்த காற்றால் மணலும் இலையும் பறந்தது. மகல் சபாதிக்கு தூக்கம் வரவில்லை. பாபா எப்படி இருக்கிறாரோ என்ற கவலை. உடனே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாபாவை பார்க்க ஒடி வந்தார். பாபாவை கண்ட உடன் அவர் மனம் பதறியது. ஆம்… பலத்த காற்றாலும் மழையாலும் இலையும் மண்ணாலும் பாபாவின் உடல் முடியிருந்தது. “பாபா…“ என்று கதறிகொண்டு […]

சமைத்த உணவு வீணாவது எதனால் ?

நிரஞ்சனா வீட்டின் சமையறையில் சண்டை போடவோ, அழவோ கூடாது. திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தை ஸ்ரீ மகாலஷ்மி வந்து பார்வையிடுகிறார்  என்கிறது புராணம். அதேபோல் நாம் வீட்டில் சமைக்கும் போதும் ஸ்ரீஅன்னபூரணி தேவி வந்து பார்க்கிறார் என்கிறது சாஸ்திரம். சமையலறையில் அழுதாலோ, சண்டை போட்டாலோ ஸ்ரீஅன்னபூரணி அந்த இடத்தை விட்டு சென்று விடுவாள். இதனால் சமைத்த உணவை யாரும் சரியாக சாப்பிட முடியாத அளவிற்கு சூழ்நிலை உருவாகும்.  

கொலுசின் ஒசை திருஷ்டியை விரட்டும்

நிரஞ்சனா பெண்கள் காலில் கொலுசு போட வேண்டும் என்று பெரியவர்கள் எழுதாத சட்டமாக வலியுறுத்தி கூறினார்கள். ஏன் தெரியுமா? கொலுசை காலில் அணிந்து நடக்கும் போது அந்த சலங்கை ஒலி கண் திருஷ்டியை அண்டவிடாது. கொலுசின் ஒலியைக் கேட்ட கஜலட்சுமி ஆனந்தம் அடைந்து வாழ்க்கையை ஆனந்தமாக வைத்திருப்பாளாம். கொலுசை வெள்ளியில்தான் அணிய வேண்டும். தங்கத்தில் கொலுசை அணியவேக் கூடாது.   கண்ணகியும் கோப்பெரும் தேவியும் தங்கத்தால் சிலம்பை காலில் அணிந்ததால்தான் பிரச்சனையே உண்டானது. ஒரு கேள்வி எழலாம்…“தங்கத்திலும் […]

செல்வம் பெருக ஸ்ரீ மகாலஷ்மி கூறிய இரகசியம்

நிரஞ்சனா வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு காபி,டீ கொடுத்து உபசரிப்பது வழக்கம். அதில் சுமங்கலி பெண்கள் இருந்தால் அவர்களுக்கு மஞ்சள் – குங்குமம் – வெற்றிலை-பாக்கு-வாழைபழம் இவற்றுடன் வஸ்திரதானமும் செய்தால் ஸ்ரீ மகாலஷ்மிக்கே அவற்றை கொடுப்பதாக ஐதீகம். கொடுப்பவருக்கு தனம், தானியம் வற்றாத செல்வம்யாவும் கிடைக்கும். அதனால்தான் வரலஷ்மி விரதத்தன்று சுமங்கலி பெண்களுக்கு இவற்றை கொடுக்க வேண்டும் என ஸ்ரீமகாலஷ்மியே பத்ரச்வஸ் என்ற அரசனின் மகள் சியாமளாவுக்கு கூறியதாக புராண கதையில் உள்ளது.  

இராஜயோகம் தரும் சிவலிங்கம்

 நிரஞ்சனா  வீட்டில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். அசுரர்களுக்கு சிவலிங்கத்தின் மகத்துவத்தை எடுத்து சொன்னார் மயன். அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார்கள் அசுரர்கள். அந்த பூஜையின் பலனாக அசுரர்கள் மாட மாளிகையுடன், கற்பக விருச்சகங்களே மரமாகவும் காமதேனுவே பசுவாகவும் அசுரர்களின் மாளிகையை சுற்றி இருந்தது. ஐஸ்வரியத்தில் புரண்டார்கள் அசுரர்கள். சிங்கத்திற்கு நேரம் கெட்டால், நரி கூட நாட்டாமை செய்யும் என்கிற கதையாக தேவர்களை விரட்டி அடித்தார்கள் அசுரர்கள். பிரம்மனும், […]

வருவதை உணர்ததும் சகுனம்

நாம் வெளியில் செல்லும் போது சகுனம் பார்ப்பது தவறல்ல. நல்லவற்றையும் ஆபத்துகளையும் முன் கூட்டியே இறைவன் சகுனம் மூலமாக நமக்கு உணர்த்துகிறார். ராமாயணத்தில் இராவணன் யுத்தத்திற்கு புறப்படும் போது சகுனம் சரியில்லாமல் இருந்தது. ஆனால் இராவணன் அலட்சியப்படுத்தினான். அது போல ராமன், சீதையை திருமணம் செய்து கொண்டு தன் உறவினர்களுடனும் தன் சொந்த ஊரான அயோதிக்கு புறப்பட்டு செல்லும் நேரத்தில், காகம் முதலிய பறவைகள் இடப்பக்கத்தில் சப்தமிட்டபடி வந்தது. இதை கண்ட தசரதன், “சகுனம் சரியில்லையே… என்ன […]

“பாட்டன் கையெழுத்து – மாறிய தலையெழுத்து.“,- அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 2

சுந்தர மூர்த்தி நாயனார்   அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 2  நிரஞ்சனா முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும்   உலகெலாம் இருப்பவர்களுக்கு தந்தையாக காட்சி கொடு்ப்பது ஈசன். அவரின் இடம் இமயமலை. அந்த மலையோ விபூதி பூசியது போல் வெண்மையாக இருக்கும். பிரம்மன் அன்ன வாகனத்தில் வந்து இறைவனை தரிசித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால், அந்த வெண்மையான கையிலாய மலையில் தன் வாகனமான அன்னபறவை எங்கு இருக்கிறது என்று தேடி அழைத்து செல்வதே வாடிக்கையாக கொண்டு […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech