Sunday 17th November 2024

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by Niranjana

திருப்பங்களை தரும் திருப்பத்தூர் யோக பைரவர்

நிரஞ்சனா சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் குடி கொண்டிருக்கும் யோக பைரவர். பொதுவாக பைரவர் சூலம் மற்றும் நாய் வாகனத்துடன்தான் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் யோக நிஷ்டையில் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதால் “யோகபைரவர்” என்று அழைக்கப்படுகிறார். பைரவர் உருவான கதை சிவபக்தரான இரண்யாட்சகனுக்கு அந்தாகாசூரன், சம்பாசூரன் என இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இவர்கள் இருவரும் கூட சிவபக்தர்களாக இருப்பதால் தட்டி கேட்க ஆள் இல்லாமல் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமை செய்து வந்தார்கள். இதனால் […]

உச்சி பிள்ளையாரை வணங்கினால் உசத்தியான வாழ்க்கை ஏற்படும்

நிரஞ்சனா திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் மிகவும் பிரபலமானது. விநாயகப் பெருமான் மிகவும் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தரிசனம் தருவதால் உச்சிபிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இவரை தரிசிக்க 400மேற்பட்ட படிகள் ஏறிதான் தரிசிக்க முடியும். இத்தனை உயரத்தில் விநாயகர்  அமர்ந்த காரணத்தை பார்ப்போம்.   திருச்சிக்கு வந்து மலைமேல் அமர்ந்தார் உச்சிபிள்ளையார் ஸ்ரீராமர், இராவணனிடம் போர் செய்து சீதையை மீட்டு வந்தார். சீதையை மீட்க விபீஷணனும் துணையிருந்ததால் அசுரகுலத்தில் […]

கௌரவ வாழ்க்கை நிலை தரும் அருள்மிகு கௌமாரியம்மன்

நிரஞ்சனா கௌமாரியம்மன் வீரபாண்டி இந்த வீரபாண்டி என்ற தேனி என்கிற ஊரில் இருந்து கம்பம் போகும் பாதையில் 10.கி.மீ தொலைவில் இருக்கிறது அருள்மிகு கௌமாரி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தை ஒட்டி கண்ணீஸ்வரமுடையார் கோயில் இருக்கிறது.   கௌமாரியம்மன் தோன்றிய வரலாறு தேவர்களையும், முனிவர்களையும் ஆட்டிபடைத்துகொணடு இருந்தான் ஓர் அசுரன். “அவன் பிடியில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கிகொடுங்கள்” என்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள் தேவர்கள். “மகிஷாசூரனை வீழ்த்திய சக்திதேவியால்தான் இந்த அசுரனை அழிக்க முடியும். பார்வதிதேவியே அந்த […]

புற்று மண்ணில் சிலையான அங்காளம்மன்;சுகப்பிரசவத்திற்கு பரிகார திருக்கோயில்

நிரஞ்சனா கோவைக்கு மேற்கில் 6வது கி்மீ.யில் இருக்கிறது பேரூர். இங்குள்ள திருக்கோயில் ஸ்ரீ அங்காளம்மன் கோயில். சிவனும் பார்வதிதேவியும் பூலோகத்தில் இருக்கும் மக்களை நேரில் சந்திக்க விரும்பினார்கள். அதனால் இத்தெய்வ தம்பதிகள் பூலோகத்திற்கு வந்தார்கள். ஒரு காட்டுக்குள் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு ஆற்றை கடந்தால்தான் ஊருக்குள் செல்லமுடியும் என்பதால் சக்திதேவி, தன் சக்தியை உபயோகப்படுத்தி பார்த்தாள். இதை கண்ட சிவபெருமான், “வேண்டாம் நாம் இப்போது மானிட உருவத்தில் இருப்பதால் அவர்களை போல் செயல்படவேண்டும். வா […]

எதிரியை நடுங்கச் செய்த சிறுத்தொண்டர்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 11    நிரஞ்சனா சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் சோழநாட்டில் சிறு நகரம் திருச்செங்காட்டங்குடி. இவ்வூரில் மாமாத்திரர் குலத்தில் பிறந்தவர் பரஞ்சோதியார். இவர் சோழமன்னரிடம் சேனாதிபதியாக இருந்தவர். பரஞ்சோதியார் போர்களத்தில் நின்றாலே எதிரிகள் அஞ்சுவர். எதிர்த்து வரும் எதிரியின் தலைகளை வெட்டி பந்தாடுவார். சோழமன்னரின் ஆட்சிக்கு பெரும் காவலாக இருந்து வந்தார் பரஞ்சோதியார். இதனால் சோழ மன்னர், பரஞ்சோதியார் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் அதிகமாகவே வைத்திருந்தார். ஒருநாள் வாதாபி என்ற […]

கப்பல் கேப்டனுக்கு உதவிய திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமியின் தம்பி

நிரஞ்சனா திருவனந்தபுரத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வர்கலா ஸ்ரீஜனார்த்தன சுவாமி கோயில். திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள்,திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபா சுவாமி, வர்க்கலை ஸ்ரீ ஜனார்த்தன சுவாமி இவர்கள் மூவரும் சகோதரர்கள். ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் பெரிய சகோதரர், இவருடைய தம்பி ஸ்ரீ பத்மநாபசுவாமி. இளையவர்தான் வர்க்கலை ஸ்ரீஜனார்த்தன சுவாமி. சகோதரர்கள் மூவரின் கண்களும் ஒரே அமைப்பில் இருப்பது குறிப்பிடதக்கது. வர்கலா என்கிற இந்த இடமே அமைதியின் இருப்பிடம் என்றார் நாரதமுனிவர். ஒளிந்துக்கொண்டு விளையாடுவதில் குழந்தைகளுக்கு மட்டும் […]

யோகமான வாழ்க்கையை தரும் அரசிலிநாதர் திருக்கோயில்

நிரஞ்சனா திண்டிவனம்-பாண்டிச்சேரி (வழி கிளியனூர்) பாதையிலுள்ள ஒழுந்தியாபட்டு நிறுத்தத்தில் இறங்கி 2கி.மீ சென்றால் விழுப்புரம் மாவட்டம் அரசிலிநாதர் திருக்கோயில் இருக்கிறது. வேடன் சிவலிங்கம் ஆன சம்பவம் கீழைச் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த சத்தியவிரதன் என்ற அரசர் வேங்கி நகரைத் தலைநகராக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தார். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். சிவனுக்கு ஒரு அழகான நந்தவனம் அமைத்து, அந்த நந்தவனத்தில் பூக்கும் மலர்களை பறித்து சிவபெருமானுக்கு சமர்பித்து வந்தார். சில நாட்களாக நந்தவனத்தில் இருந்து மலர்கள் கிடைக்காமல் […]

பேர் சொல்லும் பிள்ளை; வரம் தரும் கர்ப்பரஷாம்பிகை

நிரஞ்சனா இத்திருக்கருகாவூர்- திருக்களாவூர் மாயவரம் திருக்குடந்தை போகும் பாதையில் பாபநாசத்தில் உள்ளது.   மாதவீச்வரர் உருவான சம்பவம் முல்லைகாடாக இருந்தது இந்த இடம். முல்லை காட்டில் மணலால் சுயம்புவாக தோன்றியது ஓர் லிங்கம். இந்த லிங்கத்தை சுற்றி முல்லைகொடிகள் படர்ந்து அந்த மணல் லிங்கத்தையே மறைத்திருந்தது. இதனால் இன்றும் அந்த மணல் லிஙகத்தில் முல்லைகொடியின் அடையாளம் தெரியும். இப்படி பல யுகங்களுக்கு முன்பே தோன்றிய இந்த லிங்கத்தின் பெயர் முல்லைவனநாதர் என்றும் மாதவீச்வரர் என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பரஷாம்பிகை […]

குட்டிசாத்தான் வசியம் செய்தவனை திருத்திய பாபா

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு  பகுதி – 11   சென்ற பகுதியை படிக்க  நிரஞ்சனா  தத்தமஹராஜ். இவர் பல சித்து வேலைகளை செய்து மக்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார். இவரை சந்திக்கவரும் பக்தர்களுக்கு பாலால் தயாரித்த இனிப்பை மாயஜாலத்தில் வரவழைத்து தருவார். இதை பார்த்த குசபாவ் என்ற இளைஞன் இந்த மாயஜால வித்தையை கற்க விரும்பி தத்தமஹராஜ் என்கிற அந்த மந்திரவாதியிடம் சிஷ்யராக சேர்ந்தார். குட்டிசாத்தானை வசியம் செய்த இரும்பு வளையத்தை(காப்பு) குசபாவின் கையில் அணிவித்தார் மந்திரவாதி. சில மாதங்கள் கழித்து […]

முருகனை வணங்கினால் நோய் இல்லை;சிவன்மலை – குமரப்பெருமான்

நிரஞ்சனா காங்கேயம்- திருப்பூர் நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தொலைவில் இருக்கிறது சிவன்மலை குமரப்பெருமான் ஆலயம். சிவன்மலை உருவான கதை தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன். இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு என உலோகங்களால் மிக பெரிய கோட்டைகளை கட்டினார்கள். இந்த கோட்டை எந்த நேரத்திலும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் விமானம் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. கோட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போதும் அசுர […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech