Friday 22nd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

டிசம்பரில் உலகிற்கு பேரழிவா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG.

ஒரு ஜோதிடர் உலகிற்கு மற்றொரு பேரழிவு வருகிறது, அதாவது வரும் டிசம்பர் 20-ந்தேதி உலகிற்கு மற்றொரு பேரழிவு வருகிறது என்று சில பத்திரிக்கைளிலும், வாட்ஸ்அப்பிலும் செய்தி பரவுகிறது.

டிசம்பர் 20-ந் தேதி கிரக நிலவரம் பார்த்தேன். செய்தியில் குறிப்பிட்ட தேதியான 20.12.2020 அன்று கும்ப இராசி, சதயம் நட்சத்திரம். ரிஷபத்தில் இராகு, விருச்சிகத்தில் சுக்கிரன், கேது, தனுசில் சூரியன், புதன், மகரத்தில் குரு, சனி, மீனத்தில் செவ்வாய்.

முன்பு நான் மார்ச் மாதம் 23-ம் தேதி குரு, தனுசு இராசியை விட்டு மகர இராசிக்கு செல்கிறது. அன்றிலிருந்து விஷ காய்ச்சல், வைரஸ் பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தேன். காரணம், அன்று கிரகநிலையானது தனுசில் சனி, கேது, குரு, மிதுனத்தில் இராகுவும் இருந்தது. மார்ச் 23-ம் தேதி பாபகிரகங்களை விட்டு குரு அதிசாரம் பெற்றதும் பேயாட்டம் போட துவங்கியது இராகு.

இராகுதான் விஷம், விஷ ஜுரம் போன்ற கொடிய விஷயங்களுக்கு காரணகர்த்தா. ஜுன் மாதத்தில் இதன் தாக்கம் படிபடியாக குறைந்து கொரோனா கொத்து கொத்தாக சாகும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

இப்பொழுது 20.12.2020 அன்று விருச்சிகத்தில் இருந்து மீனம்வரை வரிசையாக கிரகங்கள் இருக்கிறது. இதை கிரக மாலிக யோகம் என கூறலாம். அதுமட்டுமல்ல குரு, மகரத்தில் நீச்சம் அதனுடன் சனியும் சேர்ந்து விடுகிறது. இங்கு நீச்சபங்க இராஜயோகம் பெற்று விடுகிறது.

தனுசில் சூரியன், புதன் அமைந்து புத ஆதித்யாய யோகம் பெறுகிறது. ரிஷபத்தில் இருக்கும் விஷம் தரும் இராகுவை குரு பகவான் 5-ம் பார்வையாக பார்த்துவிடுவதால் இராகுவால் ஒன்றும் பாதிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

ஆகவே டிசம்பரில் உலகிற்கு பேரழிவு என்று பயப்பட வேண்டாம். ஆபத்தை, பேரழிவை உண்டாக்கக் கூடிய இராகு, குரு பகவானின் பார்வையால் அமைதியாகிவிடுவார். ஆகவே 20.12.2020-ம் தேதி கிரக நிலைகள் பாதகம் கொடுக்காது சாதகம்தான் கொடுக்கும். இது எனது ஆராய்ச்சி.

20.12.2020 அன்று இராகு திசையில், சனி புக்தி நடக்கும். குருவுடன் புத்திநாதன் சனி இணைந்து அமைதியாகிவிடுவார். தசாநாதன் இராகு, குரு பார்வை பெற்று மேலும் அடங்கிவிடுவார். சனி, இராகு அதாவது தசாநாதன், புத்திநாதன் துள்ளல் இனி இல்லை. பயமும் இல்லை. அம்பாள் அருளால் நல்லதே நடக்கும்.

ENGLISH VERSION HERE – CLICK

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech