Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

சாகப்போகிறது கொரோனா – Corona

Sri Durga Devi upasakar, Krishnarau VG. 

உலகத்தையே சாகடித்து கொண்டிருக்கும் கொரோனாவுக்கு சங்கு ஊத போகிறார் சூரிய பகவான். ஆம் தற்காலம் இந்த கொரோனாவுக்கு காரணகர்த்தா கிரகம் இராகு. இந்த இராகு மிதுனத்தில் அமர்ந்து தனுசில் இருக்கும் கேது மற்றும் சனியின் பார்வையால் வீரியம் அடைந்து படாதபாடுபடுத்துகிறது.

விஷத்தை குறிப்பிடுவது இராகு. விஷ ஜுரம், விஷ பூச்சிகள், வைரஸ் கிருமிகள் இவை அனைத்தும் இராகுவை சார்ந்ததே. மார் சளிக்கு காரணகர்தாவும் இராகுவேதான்.

சரி, இந்த கொரோனா எப்பொழுது அழியும்? என்று பார்த்தால், எப்படி வந்ததோ அப்படியேதான் போக போகிறது. நவகிரகங்களில் சூரிய பகவானை மிஞ்சியது எதுவும் இல்லை. நெருப்பு கோளான சூரிய பகவான் எதையும் எரித்து பொசிக்கி விடுவார். இதை சிலர் நம்பாமல் கேலி செய்யலாம். ஆனால் அதுதான் உண்மை.

இப்பொழுது சூரிய பகவான் மீனத்தில் இருக்கிறார். 14.04.2020 முதல் 13.05.2020வரை மேஷத்தில் இருப்பார். அந்த காலகட்டத்தில் செவ்வாயின் பார்வை பெற்றதால் நோய் நொடிகளின் தாக்கம் இருக்கும் என கூறி இருக்கிறேன்.

14.05.2020 முதல் 14.06.2020வரை ரிஷபத்தில் சூரியன் அமரப்போகிறார். எப்பொழுது மிதுனத்தில் இருக்கும் இராகுவுக்கு பக்கத்தில் அமர்ந்து விடுகிறாரோ அப்பொழுதே தன் தீ பிழம்பால் கொரோனாவை எரிக்க தொடங்கி விடுவார். அரசன் ஆண்டியாவதும், ஆண்டி அரசன் ஆவதும், புத்திசாலி பைத்தியகாரன் ஆவதும் அனைத்தும் நவகிரகங்களின் செயல்தான். நோய் நொடிகள், இயற்கை சீற்றங்கள், பூகம்பங்கள் இவை அனைத்தும் நவகிரகங்களின் செயல்தான். நம்மால் ஒருநாளும் ஒன்றையும அவனின்றி செயல்பட முடியாது.

சூரியன், ரிஷபத்தில் வந்தவுடன் சூரியனின் தீட்சண்யம் இராகுவை தாக்கும். இராகு விஷங்களுக்கு காரணகர்த்தா என்று சொல்லி இருக்கிறேன். எப்பொழுது சூரிய பகவானின் நெருப்பு தீட்சண்யத்தை இராகு வாங்குகிறாரோ அப்பொழுதே கொரோனாக்கு சாவு நேரம் வந்துவிட்டது. படிப்படியாக கொரோனா அழிந்துவிடும். குறிப்பாக 14.05.2020 முதல் 14.06.2020வரை கொரோனாவுக்கு மணியடிக்கப்பட்ட காலகட்டம் எனலாம்.

15.06.2020 முதல் 15.07.2020வரை அதாவது ஆனி மாதம் சூரிய பகவான் மிதுனத்தில் இருக்கும் இராகுவோடு சேரப்போகிறார். மனிதர்களை கொத்தாக சாகடித்த நிலை மாறி கொரோனாதான் கொத்து கொத்தாக சாகப்போகிறது.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Apr 4 2020. Filed under Astrology, Bhakthi planet, Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech