Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

ஏழரையில் முகேஷ் அம்பானி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648

அன்பார்ந்த பக்தி பிளானட் வாசகர்களுக்கு ஸ்ரீதுர்காதேவி உபாசகரின் ஆசிகள். நான் சனி பகவானை பற்றி அரசனும் ஆண்டியாவதும் சனி பகவானால் என்று பதிவு செய்து இருக்கிறேன். பொதுவாக ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, பாத சனி, ஜென்ம சனி என வந்துவிட்டால் இடம் விட்டு இடம் போவதும், என்னதான் செல்வ செழிப்பில் இருந்தாலும் உடல்நலனில் பாதிப்பு அல்லது மனதில் குழப்பத்துடன் குடும்ப சூழ்நிலையில் இருப்பதற்கும் காரணம் சனி பகவானின் நாடகமே.

மேலே நான் பதிவு செய்தது ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. முகேஷ் அம்பானியின் ஜாதகம். இன்று உலக நாடுகளில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் திரு.முகேஷ் அம்பானி அவர்களும் குறிப்பிடத்தக்கவராக திகழ்கிறார். பொதுவாக நான் சனி பகவானை பற்றி விரிவாக கூறி இருக்கிறேன். திரு.முகேஷ் அம்பானி அவர்களை இப்போது சனி பகவான் பாதிக்க போகிறார் என அவரின் ஜாதக கிரகநிலை காட்டுகிறது. அவருக்கு தற்காலம் குரு திசை, சனி புக்தி 09.10.2021 முதல் ஆரம்பம் ஆகிவிட்டது. சனி புக்தி 21.04.2024வரை இருக்கிறது.

சரி – இதனால் பாதிப்பு என்ன தரப் போகிறது? என்றால், குரு, சூரியன் காலில் அதாவது உத்திரம் காலில் 10-இல் அமர்ந்து இருக்கிறார். இது நன்மையே. ஆனால் சனியோ புதன் காலில் கேட்டை நட்சத்திரத்தில் அமர்ந்து உள்ளார். இவரின் லக்கினம் விருச்சிகம். லக்கினத்திற்கு 8-க்கும், 11-க்கும் உரிய புதன் காலில் சனி நிற்பது நன்மை அல்ல. இந்த புக்தி முடியும்வரை மனக்குழப்பம், உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை, தொழிலில் தடுமாற்றம், சொத்து பிரிப்பதில் சிக்கல் என பல தொல்லைகள் இவரை தேடி வரும். அவர் செய்த புண்ணியங்கள் அவரை காக்கும். தருமங்கள் வாரி வழங்கி உள்ளார். தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவை எல்லாம் இவரை காக்கும் என நம்பிக்கை உள்ளது. லக்கினத்திற்கு 3-க்குரிய சனி புக்தி நடப்பதால் நிதானம் தேவை. எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அம்பாள் அருளால் அவர் நலமுடன் மேலும் வளமாக மன நிம்மதியுடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்.

Read in ENGLISH here




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

https://twitter.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Nov 25 2021. Filed under Astrology, Bhakthi planet, English, Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech