Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

அரசனாவதும், ஆண்டியாவதும் சனியின் திருவிளையாடல்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648

நவகிரகங்களில் என்னை பொறுத்தவரை ஆராய்ச்சி செய்ததில் சனி பகவானுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. பிரபஞ்சத்தை படைத்த ஈஸ்வரனையே ஓடி ஒளிந்திருக்க செய்தவன் சனிதான். அதனால் சனி பகவானை சனீஸ்வரர் என்று ஈஸ்வரனுக்கு நிகராக அழைக்கிறோம்.

பொதுவாக கோச்சாரத்தில் சனி பகவான் அஷ்டம சனியாகவோ, ஏழரை சனியாகவோ, அர்தாஷ்டம சனியாகவோ, ஜென்ம சனியாகவோ, பாத சனியாகவோ வந்தால் உஷாராகி விட வேண்டும். வம்பு தும்புக்கு போகவே கூடாது. அகலகால் வைத்து வியபாரம் செய்யக்கூடாது. பேராசைக்கு அழைத்து சென்று பேரழிவில் தள்ளி விடும்.

நான்தான் பெரியவன் என்று பேச வைத்து பிறகு தலைவணங்க வைக்கும். பலசாலியையும் நோய் நொடியுடன் பாயில் படுக்க வைத்து விடுவான் சனீஸ்வரன். பொதுவாக, சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நிலையில் அவ்வப்போது பாதிப்பு ஏன் வருகிறது?. அவர் மகர ராசியில் பிறந்தவர். தற்போது ஜென்ம சனி. அதுபோல ஓடி கொண்டு இருக்கும் நடிகர் சூர்யா ஏன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்?. அவரும் மகர ராசி, ஜென்ம சனி. ஏன் கூறுகிறேன் என்றால், இந்த ஏழரை சனி, அஷ்டம சனி, பாத சனி, அர்தாஷ்டம சனி, ஜென்ம சனி என வந்துவிட்டால், நிதானமே பிரதானம் என்று இருக்க வேண்டும்.

நான் பார்த்தவரை எந்த திசை நடந்தாலும் வாரி, வாரி பணத்தை கொடுத்தாலும் மேற்சொன்ன சனி பகவானின் காலகட்டத்தில் பணத்தை கொடுத்தாலும், குடும்ப வாழ்க்கையில் நிம்மதியை கெடுப்பான்.

சனி பகவானை போற்றி, அவர் தரும் பிரச்னையில் இருந்து தப்பிக்க அம்பாளை சரண் அடைவோம்.




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

https://twitter.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Nov 24 2021. Filed under Bhakthi planet, Headlines, Home Page special, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech