மலர்கள் தருகிற மலர்ச்சியான வாழ்க்கை
நிரஞ்சனா
வாசனை உள்ள இடத்தில்தான் தெய்வம் இருக்கும்.வாசமான மலர்களை கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால்,அவ்வாறு அர்ச்சனை செய்தோருக்கு நல்லவை யாவும் வசியம் ஆகும்.வாழ்க்கையில் நல்ல மாற்றமும் ஏற்றமும் ஏற்படும்.
பீமன், தாமரை மலரை தேடி போனபோதுதான் பீமனுக்கு ஸ்ரீஅனுமானின் தரிசனமும் அருளும் கிடைத்தது. ஸ்ரீஅனுமானின் அருளை பெற்ற பிறகுதான் காட்டில் இருந்த பாண்டவ சகோதரர்கள், நாட்டை ஆளும் யோகத்தை பெற்றார்கள்.
இவ்வாறாக மலர்கள் ஒருவரின் வாழ்வை நல்ல விதத்தில் மாற்றும் சக்தி படைத்தது. மலர்களுக்கு மருத்துவ குணமும் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மல்லிகை பூ வாசத்தை தினம் முகர்ந்து பார்த்தால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்கிறது மலர் மருத்துவம்.
இப்படிபட்ட சக்திவாய்ந்த மலர்களை இறைவனுக்கு சமர்ப்பித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
எந்த கிழமையில் எந்த மலர்களை இறைவனுக்கு அணிவித்தால் சிறப்பு என்பதை அகத்திய முனிவர் அருளியதை தெரிந்துக் கொள்வோம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் : தாமரை மலர் சமர்பித்து இறைவனை வணங்கினால், குடும்பத்தில் இருக்கும் மனசங்கடங்கள் நீங்கி, குடும்பத்துடன் சுபிக்ஷமாக இருப்பார்கள்.
திங்கள்கிழமைகளில் : முல்லை, மல்லிகை போன்ற மலர்களை கொண்டு இறைவனுக்குப் பூஜை செய்தால், விரோதங்கள் மறையும் மனசங்கடங்கள் நீங்கும்.
செவ்வாய் கிழமைகளில் : அரளி, கஸ்தூரி போன்ற சிகப்பு பூக்களை துர்கைக்கு அணிவித்தால் திருமண தடை விலகும். கணவன்- மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆயுள் விருத்தியாகும்.
புதன்கிழமைகளில் : எல்லா மலர்களையும் சேர்த்து பூஜித்தால், நோய் நீங்கும். நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். பிள்ளைகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
வியாழக் கிழமைகளில் : சாமந்தி போன்ற மஞ்சல் நிற மலர்களை கொண்டு அர்ச்சித்தால், திருமணதடை நீங்கும். தடைபடும் செயல்கள் எளிதாக நடக்கும். தொழில் ஏற்றம் பெறும். குழந்தை பாக்கியம் அமையும்.
வெள்ளிக் கிழமைகளில் : மல்லிகை மலர்களால் இறைவனை பூஜை செய்தால், வியாதிகள் நீங்கும். செல்வம் பெருகும். பிள்ளைகளுக்கு நன்மை உண்டாகும்.
சனிக்கிழமைகளில் : மனோரஞ்சிதம் மலரால் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்தால், மன தைரியம் ஏற்படும். விரோதிகள் அழிவார்கள். நல்ல சிந்தனை உண்டாகும்.
மலர்களின் மகிமையை பற்றி பாண்டிச்சேரி அன்னை அருளியதை பற்றி இப்போது அறிவோம் : –
இளஞ் சிவப்பு நித்திய கல்யாணி : உடல் நலமும் முன்னேற்றமும் ஏற்படும்.
கொய்யாப்பூ : அவசர புத்தி இல்லாமல் சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சியும், மன தைரியமும் கிடைக்கும்.
ஜினியா : மனதளர்ச்சியை போக்கி, விடா முயற்சியை தரும்.
கனகாம்பரம் : சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.
ஆர்கிட் மலர் : வாழ்க்கையிலும் – இறைவன் மீதும் பற்றுதல் உண்டாக்கும்.
டாலியா : நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
செம்பருத்தி : – மனதுக்கும், உடலுக்கும் சக்தி கிடைக்கும்.
சாமந்தி : உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
வெள்ளை அரளி, செண்பக பூ : மனசங்கடங்களை போக்கும்.
தாமரை பூ : மன தெளிவு கிடைக்கும்.
பூவரசம்பூ : தீராத நோயும் தீரும்.
பன்னீர் பூ : இதுவும் மனதுக்கும், உடலுக்கும் சக்தி தரும்.
முல்லை, நந்தியாவட்டை : நல்ல மனமும், அமைதியும் கிடைக்கும்
மகிழம் பூ : மனதில் பொறுமை குணத்தை தரும்.
ஆவாரம் பூ : மனஅமைதி, நல்ல சிந்தனையும், கவனம் சிதறாமல் இருக்கவும் உதவும்.
அசோகம் பூ : சோகங்கள் மறையும்.
பீர்க்கம் பூ : மறறவர்களுக்கு நம் மீது அன்பு உண்டாக்கும்.
துலுக்க சாமந்தி : மனதுக்கும் உடலுக்கும் தெம்பு கிடைக்கும்.
ரங்கூன் : குடும்பத்தினரும், வேலையாட்களும் நம் மீது விஸ்வாசமாக இருப்பார்கள்.
காசி தும்பை : மற்றவர்கள் நம்மிடமும், நாம் மற்றவர்களிடமும் கருணை காட்டுவோம்.
கொத்தமல்லி பூ : நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
குரோடன்ஸ் : – தீய எண்ணங்கள் மனதில் இருந்த விலகும்.
பாதாம் பூ : – தெய்வ பக்தி உண்டாக்கும்.
அந்திமந்தாரை : மன ஆறுதல் உண்டாக்கும்.
பவளமல்லி : இருப்பதே போதும் என்ற எண்ணத்தை உண்டாக்கும்.
மயிற்கொன்றை பூ : எடுக்கும் முயற்சியில் தடைகள் நீங்கும்.
தொட்டால் சிணுங்கி : நுட்ப அறிவு ஏறபடும்.
நாகலிங்க பூ, டாலியா பூ, சிவப்பு அல்லி : தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.
மரமல்லி : நல்ல மாற்றம் கிடைக்கும்.
பாகற்பூ : நல்ல குணம் ஏற்படும்.
பன்னீர் ரோஜா : மனதிற்கு அமைதியும், இறைவனின் அருளும் ஆசியும் கிடைக்கும்.
வில்வம், துளசி, : பக்தி மனம் கிடைக்கும்.
மருகொளுந்து : தீமை அகன்று நன்மை கிடைக்கும்.
அலமன்டா : வெற்றி கிடைக்கும்.
மாதுளை மலர் : தெய்வபக்தியும், மனிதாபிமானமும் உண்டாக்கும்.
சூரிய காந்தி : செய்யும் தவத்திற்கு பலன் கிடைக்கும்.
வாடா மல்லி : யாராலும் வெல்ல முடியாத ஆற்றல் கிடைக்கும்.
வெள்ளை நித்தியகல்யாணி : நல்ல முன்னேற்றமும், உடலுக்கு சக்தியும் கிடைக்கும்.
எருக்கம் பூ : பயம் நீக்கும்.
காகித பூ : நல்லவர்களின் உதவியும், பாதுகாப்பும் கிடைக்கும்.
சம்பங்கி : திறமைகள் வளரும்.
டிசம்பர் பூ : விழிப்புணர்வு கிடைக்கும்.
கொடி ரோஸ் : சண்டை சச்சரவு நீக்கி, அமைதி கிடைக்கும்.
இப்படி எண்ணற்ற மலர்களின் மகிமையை பற்றி புதுச்சேரி அன்னை சொல்லி இருக்கிறார்கள். இந்த பூக்களில் சில பூக்கள் கிடைக்காவிட்டால், கிடைக்கின்ற மலர்களை வைத்து தெய்வத்தை பூஜித்து நன்மை பெறுவோம்.
மலர்களை வைத்து பூஜித்தால் எப்படி வாழ்க்கை மாறும் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். மலர்களின் வாசத்தை தேனி அறிகிறது. இதுபோல் எந்த மலரின் வாசத்தையும் அந்த மலரை படைத்த இறைவன் அறிவார். இறைவன் படைத்த வாசனை மலர்களை இறைவனுக்கே நம்பிக்கையுடன் சமர்ப்பித்தால் நிச்சயமாக நம்முடைய வேண்டுதலுக்கு இறைவன் பலன் தருவார்.
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved