நிரஞ்சனா சோழநாட்டில் குலதிலகர் செட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் முருகபெருமானின் பக்தர். நல்ல குணம் படைத்த மனைவியும் பெற்றிருந்தார். “எல்லாம் செல்வங்கள் இருந்தாலும் மழழை செல்வம் இல்லையே” என்று மனம் வருந்தினார். இதனால் ஜோதிடர் ஒருவரை சந்தித்து, தங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா என்று கேட்டனர் குலதிலகர் தம்பதியினர். “உங்கள் ஜாதகப்படி குழந்தை பாக்கியம் இருக்கிறது. நீங்கள் முருகனை தொடர்ந்து வணங்குங்கள். சஷ்டியில் விரதம் இருந்து வந்தால் உங்களுக்கு நிச்சயம் முருகப் பெருமானின் பேரருளால் அழகான […]
நிரஞ்சனா உத்தானபாதன் என்ற அரசருக்கு சுநீதி, சுருசி, என பெயருடைய இரு மனைவிகள் இருந்தனர். மன்னருக்கு இரண்டாது மனைவியான சுருசியையும் அவள் மூலமாக பிறந்த மகனான உத்தமனையும்தான் மிகவும் நேசித்தார். முதல் மனைவியான சுநீதியையும் அவள் மூலமாக பிறந்த மகனான துருவன் மீதும் பாசம் இல்லாமல் இருந்தார் அரசர் உத்தானபாதன். ஒருநாள் துருவன் தன் தந்தையை காண அரண்மனைக்கு சென்றான். அங்கு உத்தமன் தன் தந்தையின் மடியில் அமர்ந்திருப்பதை கண்டு தானும் தந்தையின் மடியில் […]
நிரஞ்சனா ஒருசமயம் பிரம்மன், சிவபெருமானை கண்டும் வணங்காமல் ஆணவமாக சென்று விடுகிறார். “மகாவிஷ்ணுவே மகேஸ்வரனை வணங்கிவிட்டு செல்கிறார். ஆனால் இந்த பிரம்மனின் கர்வத்தை பாருங்கள்“ என்று கைலாய மலையில் இருக்கும் தேவரிஷிகள் பேசி கொண்டார்கள். ஆனால் ஈசன், பிரம்மனின் செயலை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும், உலகமே வணங்கும் தம் கணவரை, பிரம்மதேவன் இப்படி அலட்சியம் செய்கிறாரே என்று மனம் வருந்தினார் அன்னை பார்வதிதேவி. தன் மனகவலையை தன் கணவரிடமும் சொன்னார் தேவி. இதனால் பிரம்மனை அழைத்த […]
பூர்வ புண்ணியம்படி என்றால் முன் ஜென்மவினைப்படி என்று பொருள். பதவி என்றால், நீதிபதி பதவி, வக்கீல் பதவி, மருத்துவர் பதவி, எம்.எல்.ஏ. பதவி, அமைச்சர் பதவி என்று மட்டுமல்ல. ஒருவர் அடுத்தடுத்து முன்னேறி செல்கிற நிலைக்கும் “பதவி” என்றுதான் அர்த்தம்.
நிரஞ்சனா முகவரி: அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் – கோவை மாவட்டம் இறைவன் தரும் நம்பிக்கை நாம் நம்மை நம்புகிறோமோ இல்லையோ ஆனால் இறைவனை நம்பிக்கையுடன் வணங்குகிறோம். அந்த நம்பிக்கையே நமக்கு மேலும் வெற்றியை தருகிறது. இப்படி இறைவனை நம்பி வெற்றி பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் வரலாற்று கால அரசர்களும் உண்டு. ஏன் அரசர்களை பற்றி சொல்கிறேன் என்றால், அரசர்கள் தங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல், தங்கள் நாட்டுக்காகவும் போராட வேண்டும். போராட்டம் நிறைந்த அரசர்களின் […]
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 14 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா அதிர்ஷ்டராவ். இவர் ஒரு கிருஸ்துவர். இவருடைய மனைவியின் உடல்நிலையில் ஒரு பிரச்சினை இருந்தது. அது என்ன கோளாறு? என்று சொல்ல தெரியாமல் குழம்பினார்கள் மருத்துவர்கள். அந்த பெண்ணை குணப்படுத்த முடியாமல் திணறினார்கள். இதை கேள்விப்பட்ட ராவின் நண்பர், ஷீரடி சாய்பாபாவின் மகிமையை சொல்லி, ஷீரடி சாய்பாபாவின் படத்தையும் கொடுத்து, “தினமும் இந்த மகானை வணங்கி வா. நிச்சயம் […]
நிரஞ்சனா முகவரி: அருள்மிகு பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில், அய்யாவாடி – தஞ்சாவூர் மாவட்டம். எப்போதெல்லாம் அநீதிகள் நடக்கிறதோ அப்போதெல்லாம் தெய்வ அவதாரங்கள் உருவாகும். இதற்கு எடுத்துகாட்டாக பிரத்தியங்கிரா தேவி உருவானார். நல்லவர்கள் செய்யும் நல்லவற்றுக்கு துணை இருந்து, அவர்களை வெற்றியடைய செய்கிறாள். தீயவர்கள் இந்த தேவியை வணங்கினால் அவர்களுக்கு இந்த அம்மன் உதவி செய்வாரா என்றால் நிச்சயமாக இல்லை. நல்ல உள்ளத்தோடு வணங்கினால் அவர்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாதபடி நிழல் போல் தேவி துணை நின்று காப்பாள். […]

ஹரி ஓம் – அறிவோம்! புதிய பகுதி விஜய் கிருஷ்ணாராவ் எதற்கெடுத்தாலும் டென்ஷன்-டென்ஷன் என்கிறோமே, எனக்கு தெரிந்து டென்ஷன் ஆகாத தெய்வம் விநாயகர் மட்டும்தான். அன்பே சிவம் என்றாலும் சிவபெருமான் கோபக்காரர். காக்கும் கடவுள் என்று மகாவிஷ்ணுவை சொன்னாலும், அவதாரம் எடுத்து வந்து அழிப்பார். முருகப்பெருமான் யுத்த கடவுள். இப்படி எந்த கடவுளை நீங்கள் கவனித்தாலும் அவர்கள் ஒருவிதத்தில் கோபம்கொண்டவர்கள்தான். ஆனால் விநாயகப்பெருமான், “டேக் இட் ஈசி” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுபோல, எதையும் சாதாரணமாக […]
நிரஞ்சனா அருள்மிகு திருவேட்டீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி – சென்னை. சிவபூஜை செய்து திருமண பாக்கியம் பெற்ற ஸ்ரீமகாலஷ்மி ஸ்ரீமந் நாராயணனை திருமணம் செய்ய பல முயற்சி எடுத்தும் அத்தனை முயற்சியும் சரியான பலன் கிடைக்காததால், தமது விருப்பம் சிவ வழிபாடு செய்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் ஒரு செண்பக மலர் காட்டில் சிவபூஜை செய்து தவம் இருந்தாள் ஸ்ரீமகாலஷ்மி. தவத்தையும் வழிபாட்டையும் ஏற்ற சிவபெருமான் ஸ்ரீலஷ்மிதேவிக்கு காட்சி தந்து திருமணம வரம் அருளினார். இதன் பிறகுதான் […]