Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: July, 2011

வேண்டியதை வேண்டியவுடன் தரும் ஸ்ரீபத்மநாப சுவாமி

நிரஞ்சனா திவாகர முனிவர் ஸ்ரீமன் நாராயணனை தன் மகனாக அடைந்து சீராட்டி வளர்க்க விரும்பினார். அதனால்  ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து கடும் தவம் இருந்தார். முனிவரின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட பெருமாள், குழந்தை உருவத்தில் திவாகர முனிவர் முன் தோன்றி “என்னை அன்பாக வளர்த்தால் நான் உங்களுடனே இருப்பேன். அதை மீறி என் மேல் சிறு கோபத்தை காட்டினாலும் அடுத்த நொடியே நான் உங்களை விட்டு பிரிந்து விடுவேன்.” என்றார். ஸ்ரீமன் நாராயணனின் இந்த நிபந்தனைக்கு சம்மதித்து குழந்தை […]

பக்தர்களின் குறை தீர்க்க சென்னைக்கு வந்த பழனியாண்டவர்

நிரஞ்சனா பக்தர்களின் குறைகளை தீர்க்க சென்னைக்கு வந்த பழனியாண்டவர், வடபழனி முருகன் என்கிற பெயரால் ஆசி வழங்கி கொண்டு இருக்கிறார். சிவபெருமான் அசுரர்களை அழிப்பதற்காக மேருமலையை வில்லாக வளைத்த இடம்தான் புலியூர் கோட்டம். இன்று இதுவே கோடம்பாக்கம் – வடபழனி என்று அழைக்கப்படும் பகுதியாக இருக்கிறது. இப்படி மகன் முருகன் வருவதற்கு முன்னதாகவே அப்பன் சிவன் வந்த இடம் இது. இந்த வடபழனி கோயில் சுமார் 150 வருடங்களுக்கு முன்பு உருவானது என்கிறார்கள். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் […]

ஒப்பில்லா வாழ்வு தரும் ஒப்பிலியப்பன்

நிரஞ்சனா  கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீஒப்பிலியப்பன் கோயில் சிறப்பை இன்று பார்ப்போம். ஸ்ரீமன் நாராயணனிடம் துளசிதேவி, “மகாலஷ்மியை தங்கள் மார்பில் சுமக்கிறீர்கள். அதுபோல் எனக்கும் உங்கள் இதயத்தில் இடம் வேண்டும்” என்றாள். “என்னுள்ளே இருக்கும் உனக்கு, எந்த இடத்தில் இடம் தருவது என நீயே சொல்” என்று துளசியை சமாதானம் படுத்தினார் பெருமாள். இருந்தாலும் துளசி மனம் சமாதானம் அடையவி்ல்லை.இனி எவ்வளவுதான் துளசியிடம் எடுத்துச் சொன்னாலும் துளசி கேட்கும் மனநிலையில் இல்லை என்று நினைத்து, “நீ […]

செவ்வாய்-சனி சிறப்பும் சேர்க்கையும் பரிகாரமும் !பகுதி-2

  முந்தைய பகுதியை படிக்க கிளிக் செய்யவும் V.G.Krishnarau,Astrologer-Chennai லக்கினத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கிறது. கௌரவம் பாதிக்கச் செய்கிறது. தேவை இல்லாமல் குழப்பம், மன உலைச்சல் கொடுக்கிறது. லக்கினத்திற்கு 2-ல் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டையை மூட்டுகிறது. தேவை இல்லா கருத்து வேறுபாடு கொடுக்கிறது. கண் உபாதை உண்டாக்குகிறது. லக்கினத்திற்கு 3-ல் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதகம் செய்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைக்கிறது. உடல்நலனில் தொண்டை […]

செவ்வாய்-சனி சிறப்பும் சேர்க்கையும் பரிகாரமும் !பகுதி-1

V.G.Krishnarau,Astrologer-Chennai நவகிரகங்களில் ஒவ்வொன்றும் தனக்குரிய பலன்களை ஒரு ஜாதகருக்கு தந்துக்கொண்டிருக்கிறது. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பின்படிதான் ஒருவரின் வாழ்க்கை நிலை அமைகிறது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சி காலத்தில் தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தையை நல்லநேரம் பார்த்தும் பிரசவம் செய்கிற மருத்துவ வளர்ச்சி வந்துவிட்டதாக இருந்தாலும், ஒரு குழந்தையானது எந்த தாய்க்கு எந்த ஊரில் எந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதை இறைவன் முன்கூட்டியே தீர்மானித்து இருக்கிறான். நாம் நினைத்த நேரத்தில் குழந்தை பிறந்துவிட்டது என நாம் […]

ஒரு மனிதனின் ஆயுள்காலம்; பகுதி 2

இதற்கு முந்தைய பகுதி. விஜய் கிருஷ்ணாராவ் இதற்க்கு முன் இருந்த பிறவியில் நாம் செய்த நல்வினை – தீவினைதான் இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது. இந்த ஜென்மத்தில் ஒரு மகா அயோக்கியன், பாவ – புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாதவன், அதனால் தன்னுடைய வளர்ச்சிக்காக எதையும் செய்ய துணிந்தவன், ஆனால் அவனுக்குதான் இறைவன் அமோகமான வாழ்க்கையை தந்திருக்கிறான். எத்துணை இன்பங்களை உலகில் இறைவன் வைத்தானோ அத்துணை இன்பங்களும் அவனுக்கே கிடைத்து விடுகிறது. அவனை பார்த்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? கடவுளே […]

சமயத்தில் துணை வருவாள் சமயபுரத்தாள்

நிரஞ்சனா திருச்சியின் வடக்கே காவிரியின் வடகரையில் சுமார் 15 கி.மீ தொலைவில் இருந்தபடி பகதர்களின் குறைகளை தீர்க்கிறாள் சமயபுரத்து மாரியம்மன்.   ஸ்ரீரங்க வைணவி ஸ்ரீரங்கத்தில் வைணவியாக அம்மன் குடிகொண்டு இருந்தாள். வைணவி அதிக உக்கிர சக்தி கொண்டவளாக இருந்தாள். இதனால் ஸ்ரீரங்கத்தில் மழை இல்லாமலும் வெயிலாலும் அவதிப்பட்டார்கள் ஊர் மக்கள்.  இதற்கு வைணவி உக்கிர அம்மனே காரணம், வைணவியை வேறு இடம் மாற்றுங்கள் என வான சாஸ்திர ஜோதிடர் ஒருவர் ஐயர் சுவாமிகளிடம் கூறினார். “ஸ்ரீரங்கபெருமாளின் […]

ஒரு மனிதனின் ஆயுள்காலம்

விஜய் கிருஷ்ணாராவ் பூமியில் பிறக்கின்ற எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஒரே சராசரியான  ஆயுள் உண்டு. ஒரு புழு – பூச்சிக்கும் கூட இயற்கை குறிப்பிட்ட காலம் ஆயுளை நிர்ணயித்து இருக்கிறது. குறிப்பாக மனிதனின் ஆயுள் காலத்தை பற்றி இந்திய புராணங்கள் பலவிதமாக சொல்கின்றன. கற்பனைக்கு எட்டாத காலங்கள் வரையில்கூட பலர் இருந்ததாக நம் புராண கதைகளில் இருக்கிறது. ஆனாலும், ஜோதிடம் மனிதர்களின் ஆயுள்காலம் எவ்வளவு என சொல்கிறது என்பதை பார்த்தால், ஒரு மனிதனின் ஆயுள்காலம் 120 ஆண்டுகள் […]

சங்கடங்களை போக்கும் ஸ்ரீசங்கர நாராயணன்

நிரஞ்சனா   திருநெல்வேலியில் இருந்து 54.கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது சங்கரன் கோயில்.   சங்கரநாராயணன் தோன்றிய கதை ஒருமுறை பார்வதிதேவிக்கு, தன் கணவர் சிவபெருமான் உயர்ந்தவரா அல்லது தன் அண்ணன் ஸ்ரீமகாவிஷ்ணு உயர்ந்தவரா என்ற கேள்வி எழுந்தது. அதை மற்றவர்களிடமிருந்து அறிந்து கொள்ளவும் விரும்பினார். “சிவனுக்கு புலிதோலும் திருவோடும்தான் சொந்தம். மயானமே அவன் இருப்பிடம். அன்னபூரணியிடம் பிச்சை எடுத்தவர்” என்று சிவனை பற்றி விமர்சித்தார்கள் விஷ்ணுபக்தர்கள். “உன் அண்ணனான விஷ்ணுவை பற்றி குறை சொல்கிறோம் என்று தவறாக நினைக்க […]

திருப்பங்களை தரும் திருப்பத்தூர் யோக பைரவர்

நிரஞ்சனா சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் குடி கொண்டிருக்கும் யோக பைரவர். பொதுவாக பைரவர் சூலம் மற்றும் நாய் வாகனத்துடன்தான் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் யோக நிஷ்டையில் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதால் “யோகபைரவர்” என்று அழைக்கப்படுகிறார். பைரவர் உருவான கதை சிவபக்தரான இரண்யாட்சகனுக்கு அந்தாகாசூரன், சம்பாசூரன் என இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இவர்கள் இருவரும் கூட சிவபக்தர்களாக இருப்பதால் தட்டி கேட்க ஆள் இல்லாமல் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமை செய்து வந்தார்கள். இதனால் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech