Tuesday 19th March 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்.

மேடையில் பாடி கொண்டிருந்த மடோனா தவறி விழுந்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்தில் பிரிட் விருதுகள் 2015 என்ற நிகழ்ச்சியின் இறுதியில் பாட்டு ஒன்றை பாடி கொண்டிருந்தபோது, பாடகி மடோனா கால் தவறி மேடையில் கீழே விழுந்தார்.  இதனால் அவரது முதுகு மற்றும் தோள் பட்டைகள் தரையில் படும்படி விழுந்த அதிர்ச்சியில் சில வினாடிகள் வரை அவர் உறைந்து இருந்தார்.  அதன்பின்னர் அவர் எழுந்து தனது பாடலை தொடர்ந்து மேடையில் பாடி முடித்தார்.

இந்த காட்சியை பார்வையாளர்கள் வரிசையில் இருந்து பார்த்து கொண்டிருந்த பாடகி டெய்லர் ஸ்விப்ட் மற்றும் மாடல் அழகி கார்லீ கிலாஸ் ஆகியோர் துரதிர்ஷ்டவசமாக நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியில் வாயை திறந்த நிலையில் இருந்தனர்.  நிகழ்ச்சி முடிந்த பின்பு தான் நலமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் வழியாக மடோனா உறுதி அளித்துள்ளார்.

எனது உடை அதிக இறுக்கமாக இருந்தது.  ஆனால், எதுவும் என்னை தடுத்து நிறுத்திட முடியாது.  எனது பாடலான லவ் என்னை எழுப்பி விட்டது.  உங்களது வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள்.  நான் நலமாக இருக்கிறேன்.  லிவிங் பார் லவ் என டுவிட்டர் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

Posted by on Feb 26 2015. Filed under உலக செய்திகள், கதம்பம், செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech