Sunday 5th May 2024

தலைப்புச் செய்தி :

செல்வந்தராக்கும் இராகு-கேது.!

செல்வந்தராக்கும் இராகு-கேது.!

செல்வந்தராக்கும் இராகு-கேது.!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

ஒருவருடைய ஜாதகத்தில் இராகு – கேது அருமையாக அமைந்து விட்டால், அந்தஸ்தான வாழ்க்கை தந்து செல்வ சீமானாக்குகிறது. பண வசதியை தரக்கூடிய தனஸ்தானாதிபதி, 6-8-12-ல் அல்லது நீச்சம் பெற்று இருந்தாலும் கவலை வேண்டாம்.

தனத்தை நான் தருகிறேன் என்று இராகு-கேது மல்லுகட்டிக் கொண்டு முன்னால் வருவார்கள்.

“கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்று சொல்பவர்களே… கேதுவாகிய நான் கெடுப்பதில்லை, கொடுப்பவன். அதுவும் அள்ளி கொடுப்பேன்.”  என்கிறார் கேது பகவான்.

அது எப்படி என பார்ப்போம்.

பாம்பை பிடித்து யோகத்தை சொல்லு.

சனியை பிடித்து மாரகத்தை சொல்லு.

என்பது ஜோதிட பொன்மொழி.

ஒருவரின் ஜாதகம் பணக்கார ஜாதகமா? கோடீஸ்வர ஜாதகமா? என்பதை தெரிந்துக்கொள்ள, ஜாதகத்தில் இராகு – கேதுவின் நிலையை கணித்து பார்க்க வேண்டும். இராகு – கேது அமர்ந்த இடத்தின் அதிபதி, லக்கினத்திற்கு 2,4,5,9,10,11-ல் இருந்தாலும், அதனை குரு பார்த்தாலும் செல்வத்தை வாரி வழங்குகிறார். அதேபோல இராகுவும் செய்கிறார்.

உதாரணமாக, ஒருவருக்கு ரிஷப லக்கினமாக அமைந்து, கன்னியில் கேது, அந்த வீட்டுக்குரியன் புதன்.

Bhakthi Planetஇந்த புதன், மகரத்தில் அதாவது 9-ல் குருவோடு சேர்ந்திருந்தாலும், குரு பார்த்தாலும் அவன் செல்வந்தன். அதுபோல, கடக லக்கினமாக இருந்து, 8-ல் கேது, அந்த வீட்டுக்குரியவன் சனி உச்சம் பெற்று துலாவில் இருந்தாலும் அவர்கள் செல்வந்தர்களே. அதுபோல, சிம்ம லக்கினமாக இருந்து கன்னியில் கேது, அந்த வீட்டுக்குரியவன் புதன், 5-ல் இருந்தாலும் தனவான்களே.

அதேபோல், குரு – கேது சேர்க்கை, குரு -இராகு சேர்க்கை ஆகிய இந்த கூட்டணி கிரகங்களும் அந்த ஜாதகரை செல்வந்தனாக்குகிறது.

என் அனுபவ ஆராய்ச்சியில், இராகு 1,4,7,10-ல் இருந்து திசை நடைபெற்றால், யோகத்தையே செய்கிறது. பள்ளத்தில் இருப்பவனை பல்லாக்கில் உட்கார வைக்கிறது. பொதுவாக கேது, கெடுப்பான்  கெடுப்பான் என்று கூறி அலறுவதை விட, கேது, கொடுப்பான் கொடுப்பான் என்று கூறுவதே சரியாகும்.

அதாவது, இராகுவோ கேதுவோ அமர்ந்த இடத்தின் அதிபதி, ஆட்சி – உச்சம் பெற்றாலும், 2,4,5,7,10,11-ல் இருந்தாலும் யோகமே செய்யும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved


Posted by on Feb 28 2013. Filed under Headlines, Home Page special, Photo Gallery, செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech