நியூயார்க், மே 21- இந்தியப் பிரதமராக விரைவில் பொறுப்பேற்கும் நரேந்திர மோடி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க விரைவில் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்று நம்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்திற்கு, குறிப்பாக, பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு […]
வாஷிங்டன், மே 17- 16-வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பது உறுதியாகிவிட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின்போது, உலக பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா ஆற்றவுள்ள பங்களிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது. உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வாக்காளர்கள் வழங்கியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு பாராட்டு […]
வாஷிங்டன், மே 17- 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதன் எதிரொலியான கலவரங்களை மனித உரிமை மீறல் என்று குற்றம்சாட்டிய அமெரிக்கா, கடந்த 2005-ம் ஆண்டு அந்நாட்டிடம் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் கறுப்புப் பட்டியலில் மோடியின் பெயரை இணைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதன்பிறகு, பல சந்தர்ப்பங்களில் மோடிக்கு அமெரிக்க விசா வழங்குவது தொடர்பாக பட்டும்படாமல் பேசி வந்த வெள்ளை மாளிகை அதிகாரிகள், ‘விசா கேட்டு மோடி விண்ணப்பித்தால், ஏனைய விண்ணப்பங்களைப் […]
ஜிம்சியான், ஏப். 26- கொரியாவின் ஜிம்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, ஜூவாலா, அஷ்வினி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் 18 வயதான பி.வி.சிந்து, ஆல் இங்கிலாந்து சாம்பியன் ஷிஜியானை (சீனா) எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் கடுமையாகப் போராடிய பி.வி.சிந்து, 21-15, 20-22, 12-21 என்ற செட்கணக்கில் தோல்வியைத் தழுவினார். இதனால் அவர் வெண்கலம் வென்றார். இதற்கு முன்பு மூன்று முறை […]
பெர்த் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இன்று 28-வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. இந்த நிலையில் இந்திய 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி நடைபெர்று வருகிறது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது […]
கோலாலம்பூர், ஏப். 26- மலேசியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற எம்.எச்.370 என்ற பயணிகள் விமானம் நடுவானில் மாயமானது. உயர்தொழில்நுட்பம் கொண்ட ரேடார்கள் உதவியுடன் விமானங்கள் மற்றும் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் தொடர்ந்து தேடும் பணி ஈடுபட்டு வருகின்றன. விமானம் விழுந்ததாக கூறப்படும் இந்திய பெருங்கடல் பகுதியில் 95 சதவீத பகுதிகளில் தேடும் பணி முடிவடைந்துவிட்டது. இருப்பினும் விமானத்தின் அடிச்சுவட்டைக்கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் காணாமல் […]
வானில் பறந்தபோது 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம்குறித்த விளக்க அறிக்கையை விரைவில் வெளியிட இருப்பதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்சுக்குசொந்தமான போயிங் விமானம், 239 பயணிகளுடன் மலேசியதலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீனாவுக்கு பறந்து சென்றபோதுமாயமானது. விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்ததாஅல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு வீழ்த்தப்பட்டதா என்றுபல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. எந்த கேள்விகளுக்கும்பதில் கிடைக்காத நிலையில், விமானத்தை தேடும் முயற்சிகளும்இதுவரை பலனளிக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போனவிமானம் குறித்த விளக்க அறிக்கையை விரைவில் வெளியிடஇருப்பதாக மலேசிய […]
வாஷிங்டன், ஏப்.25- அமெரிக்காவில் வாழ் இந்தியக் கோடிஸ்வரரான வினோத் கோஸ்லாவின் மகளான நினா கோஸ்லாவை நிர்வாண் படமெடத்து இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாக மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டார். நினாவும் அமெரிக்காவை சேர்ந்தவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவருமான டக்லஸ் டார்லோவும் கடந்த இரு ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே உருவான நட்பு டேட்டிங் செல்லும் அளவுக்கு உயர்ந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே மன வேற்றுமை ஏற்பட்டதால் நினா […]
டோக்கியோ: அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆசிய பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் வந்துள்ளார். அப்போது அவர் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்திந்தப்போது கூறியதாவது:- ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு தேவையான ஆதரவு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கிழக்கு உக்ரைனில் பதற்றத்தை தணிப்பதற்காக, கடந்த வாரம் ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரஷ்யா பின்பற்றவில்லை. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மூலம் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துவரும் நடவடிக்கைகளில் இருந்தும் அந்நாடு பின்வாங்கவில்லை. சர்ச்சைக்குரிய அந்த தீவுக் […]
பீஜிங், ஏப்.23- சூரிய உதயத்தின் போதோ, அஸ்தமனத்தின் போதோ சில பருவங்களில் பூமியின் மேற்பரப்பில் உள்ள மேகங்களில் இருக்கும் பனிப்படிமங்களின் (ஐஸ் க்ரிஸ்டல்ஸ்) ஊடாக சூரிய ஒளி பாயும் வேளையில் சூரியனைச் சுற்றி ஒரு சிறு வளையத்தை உருவாக்கும். இந்நிகழ்வினை ஆங்கிலத்தில் ‘சோலார் ஹேலோ’ என்று குறிப்பிடுவர். இவ்வேளைகளில், இந்த வளையத்தின் பல முனைகள் சூரிய ஒளியினை சிதறடித்து பல கோணங்களில் பிரதிபலிக்கும் கண்ணுக்கினிய அபூர்வ காட்சி தோன்றும். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் பகுதியில் […]