Tuesday 23rd April 2024

தலைப்புச் செய்தி :

ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி அமெரிக்காவுக்கு வருவார்: பான் கி மூன் நம்பிக்கை

நியூயார்க், மே 21-

இந்தியப் பிரதமராக விரைவில் பொறுப்பேற்கும் நரேந்திர மோடி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க விரைவில் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்று நம்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்திற்கு, குறிப்பாக, பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்று மிகவும் நம்புகிறோம்.

பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறும் உச்சி மாநாட்டின்போது அவரை காண்போம் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் கலவரத்தை காரணம் காட்டி மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து இருந்தது. இந்நிலையில் உலகின் பெரிய தலைவரான பான் கி மூன் சார்பில் அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://greensite.in/

Posted by on May 21 2014. Filed under Headlines, இந்தியா, உலக செய்திகள், செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech