Friday 1st May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: செய்திகள்

நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு அடித்தது ஜாக்பாட் கோடி கணக்கில் தங்க நாணய புதையல்

கலிபோர்னியா: அமெரிக்காவில் நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு யோகம் அடித்தது. அங்கு மரத்தடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நாணய புதையல் கிடைத்துள்ளது.கலிபோர்னியாவில் உள்ள தம்பதி தினமும் காலையில் தனது செல்ல நாயை அழைத்து கொண்டு வாக்கிங் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வாறு சென்ற போது ஒரு மரத்தின் அடியில் உடைந்து போன இரும்பு டின் ஒன்றின் பகுதியை கண்டனர். இதனை கண்டு அவர்களுடைய செல்ல நாயும் குரைக்கவே, அதில் என்ன […]

சென்னையில், 9–ந்தேதி நடக்கிறது ‘கோச்சடையான்’ படவிழாவில், அமிதாப்பச்சன் ரஜினிகாந்துடன் கலந்து கொள்கிறார்

சென்னை, ரஜினிகாந்த் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் புதிய படம், ‘கோச்சடையான்.’ இந்த படத்தை அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்துள்ளார். ரஜினிகாந்துடன், சரத்குமார், நாசர், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள். படம், ‘மோஷன் கேப்சர்’ என்ற புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான முறையில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் […]

பெண் என்ஜினீயர் கொலை

சென்னை, பிப். 26– சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 13–ந் தேதி மாயமான உமா மகேஸ்வரி 9 நாட்கள் கழித்து சிறுசேரி சிப்காட் வளாகத்திலேயே பிணமாக மீட்கப்பட்டார். உள்ளூர் போலீசார் வசம் இருந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக சிறுசேரியில் முகாமிட்டு கொலையாளிகளை […]

சென்னையில் காங்கிரஸ்–நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதல்

சென்னை, பிப். 26– எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மந்திரி ஜி.கே.வாசனுக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. பாராட்டு விழாவுக்காக காங்கிரஸ் தரப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரின் மீது நாம் தமிழர் கட்சியினர் சத்திய மூர்த்தி பவனை இன்று முற்றுகையிடப் போவதாக இன்று போஸ்டர் ஒட்டினார்கள். இதைப் பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். ராயப்பேட்டை விழாவில் திரண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த தகவல் பறந்தது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், […]

பாராளுமன்றதேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளகள் அறிவிப்பு

சென்னை வருகிற பாராளுமன்ற தேர்தலில்போட்டியிடும் அதி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அவர்கள் விவரம் வருமாறு திருப்பூர்-சத்யபாமா ராமநாதபுரம்-அன்வர்ராஜா கன்னியாகுமரி-ஜான்தங்கம் நெல்லை -பிரபாகரன் தேனி- பார்த்திபன் தென் சென்னை- ஜெயவர்த்தன் மத்திய சென்னை-விஜயகுமார் திருவண்ணாமலை-வனரோஜா திருச்சி.-ப.குமார் காஞ்சீபுரம்-குமரவேல் வேலூர்-செங்குடடுவேல் ஈரோடு- செலவ்க்குமார் நீலகிரி- கோபால கிருஷ்ணன் பொள்ளாச்சி-நாகேந்திரன் கிருஷ்ணகிரி-அசோக்குமார் தர்மபுரி -மோகன் ஆரணி -ஏழுமலை நாமக்கல் -சுந்தரம் கோவை- நாகராஜன் கரூர்- தம்பிதுரை திண்டுக்கல்- உதயக்குமார் சிதமபரம்- சந்திரகாசி விருதுநகர் -ராதாகிருஷ்ணன் […]

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று 66–வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு

சென்னை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) 66–வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாள் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) தனது 66–வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். ‘எனது பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அது பயன்பெறுவோரை மகிழ்விக்கும், என்னை மேலும் உற்சாகப்படுத்தும்’ […]

வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை தேவையானப் பொருட்கள் வாழைப்பூ – 1 பொட்டுக்கடலை – 50 கிராம் பொடியாக நறுக்கிய  வெங்காயம் – 100 கிராம் ப.மிளகாய் – 4 உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – 1 கொத்து இஞ்சி – 1 சிறியதுண்டு பூண்டு – 50 கிராம் எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு செய்முறை வாழைப்பூவைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி […]

பனீர் மட்டர் மசாலா

பனீர் மட்டர் மசாலா தேவையானவை பன்னீர் – 250 கிராம் சீரகம் – 5 கிராம் க்றீம் – 100 மி.லி வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 50 கிராம் பச்சைமிளகாய் – 5 கிராம் மஞ்சள்தூள்  – 10கிராம் மல்லித்தூள் – 15 கிராம் எண்ணெய் – 200 மி.லி கறுப்பு உப்பு – சிறிது கேசரி பவுடர் – சிறிது வெண்ணை – 100 கிராம் உருளைகிழங்கு – ¼  கிலோ […]

மீண்டும் உடல் எடையை குறைக்கும் அஜீத்

வீரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவுதம் மேனன் படத்தில் நடிக்க அஜீத் தயாராகி வருகிறார். இப்படத்தில் அஜீத் பழைய இளமையான தோற்றத்தில் நடிக்கிறாராம். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்து வருகிறாராம். ஏற்கெனவே, ‘ஆரம்பம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அப்படத்திற்காக ஜிம்மிற்கு சென்று உடம்பை குறைத்து வந்தார். அதன்பிறகு, ‘வீரம்’ படத்தில் கொஞ்சம் குண்டாகி விட்டார். இந்நிலையில், கவுதம் மேனன் படத்தில் ஸ்லிம்மாக தோன்ற வேண்டும் என்பதற்காக ஜிம்மிற்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி […]

ஏழு மாதங்களுக்குள் 364 புத்தகங்களைப் படித்து முடித்த சிறுமி

இங்கிலாந்தை சேர்ந்த சிறுமி ஒருவர் 9 வயதில் ஏழு மாதங்களுக்குள் 364 புத்தகங்களை முழுமையாக படித்துள்ளார். இங்கிலாந்தின் ஆஷ்லே பகுதியில் வசித்து வரும் ஃபெயித் என்ற 9 வயது சிறுமி விதவிதமான புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். இவர் இவருடைய வயதுடைய பிற குழந்தைகளை போல இல்லாமல் இந்த வயதிலேயே சுமார் 364 புத்தகங்களை படித்து முடித்துள்ளார். இது குறித்து அச்சிறுமி கூறுகையில், புத்தகம் படிப்பது கணினியில் வீடியோ கேம் விளையாடுவதை போல சுவாரஸ்யமானது, தொலைக்காட்சி […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »