பீஜிங், சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனது 4 மாத குழந்தையை விற்றவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குய்சோவ் மாகாணத்தை சேர்ந்த சொவ் என்பவர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது 4 மாத குழந்தையை விற்றுள்ளார். இதனையடுத்து அவரது மனைவி தனது குழந்தையை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருமாறும் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாராணை நடத்தியதில் அவரது கணவரே குழந்தையை விற்றது தெரியவந்துள்ளது. சொவ் […]
புதுடெல்லி, பிப்.17- இந்திய அரசால் நடத்தப்படும் ஏர் இந்திய விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டக் கணக்குகளையே காட்டி வருகின்றது. கடந்த 2013, டிசம்பர் முடிய மூலதன செலவு 26,033 கோடியாகவும், முதலீடுகள் கையிருப்பு 21,125 கோடியாகவும் கணக்குக் காட்டியுள்ள இந்த நிறுவனம் 3,600 கோடி நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அரசின் இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான நடைமுறைகள் சாத்தியமில்லை என்பதால் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிக வட்டி விகிதத்தில் வெளியாரிடம் கடன் பெறவேண்டும். […]
செயலிழந்து போன நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் ராணுவ செயற்கைக்கோளான காஸ்மோஸ்-1220 பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். விண்கலம் பூமியை நெருக்கும் அதனுடைய இயக்கம் கட்டுப்பாடற்று இருக்கும் என்று கர்னல் அலெக்சி சொலோடுகின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த 1980ஆம் ஆண்டு இந்த செயற்கைக்கோள் சிக்லோன்-2 என்ற விண்கலம் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. மூன்று டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் காற்று மண்டலத்தில் நுழையும்போதே பெரும்பான்மையான […]
தமிழ் மற்றும் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் டுவிட்டர் என்ற சமூக இணையதளத்தில் இணைந்து, தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தமான அறிவிப்புகள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபலங்கள்தான் இன்னும் இந்த சமூக வலைத்தளத்தில் இணையாமல் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2012-ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா தற்போது டுவிட்டர் இணையதளத்தில் இணைந்துள்ளார். நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்து டுவிட் […]
மணிலா, பிப். 17- வடக்கு பிலிப்பைன்சில் 5.3 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக எந்த விவரமும் வெளியாகவில்லை. அந்நாட்டின் தலைமை நில அதிர்வு நிபுணரான ரெனட்டோ சொலிடம் இது குறித்து கூறுகையில், நாட்டின் முக்கிய தீவான லுசானின் வடக்கு கடற்கரை பகுதியில் இப்பூகம்பம் மையம் கொண்டிருந்தது என்றார். இதனால் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றும் அவர் கூறினார். அந்நாட்டில் கடந்த அக்டோபர் 15ந் தேதி […]
சென்னை, இயக்குனர் பி.வாசு இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். மும்பையில் ஐஸ்வர்யா ராயை சந்தித்து கதி குறித்து பி.வாசி விளக்கி உள்ளார். இது ம்குறித்து இயக்குனர் வாசு கூறும்ம் போது கதையை கேட்ட ஐஸ்வர்யாராய் கதை நன்றாக இருப்பதாககூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.ஆனால் இந்த புராஜக்ட் குறித்து அவர் உறுதி தெரிவிக்கவில்லைஎனகூறினார். இந்திய திரையுலகமே கண்டி ராத ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப் பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யாராய் இது வரை நடித்திராத ஒரு சக்தி […]

ஜெனிவா, பிப்.17- எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து ரோம் நகருக்கு சென்ற எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவாவில் கடத்தல்காரர்களால் மிரட்டப்பட்டு தரையிறக்கப்பட்டதாக சுவிஸ் அரசு உறுதி செய்துள்ளது. உடனடியாக அந்த விமான நிலையம் மூடப்பட்டு காவல்துறையினர் விமானத்தை சுற்றி வளைத்துள்ளதாகவும், கடத்தல்காரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணம் செய்துள்ள பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது. யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் சூழ்நிலை கட்டுக்குள் […]
சிங்கப்பூர், பிப். 17- சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் 43 அதிகாரிகள் தாக்கப்பட்டனர். 24 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒரு இந்தியருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போலீசாரின் உத்தரவை மீறி கலைந்து செல்ல மறுத்ததால் இவருக்கு 15 வாரங்கள் ஜெயில் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை பெற்ற அந்நபரின் பெயர் சிங்காரவேலு விக்னேஷ் […]
புதுடெல்லி, பிப். 17- “வீடுகள் இல்லாதவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஆதார் என்ற தனித்துவ அடையாள அட்டை அதிகாரமளிக்கும் கருவியாகும்” என மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் ஆற்றிய உரையில் ஆதார் குறித்து மேலும் கூறியதாவது:- ஆதாரை குறை சொல்பவர்களும் கூட அது ஒரு அதிகாரமளிக்கும் கருவி என்று உணர்ந்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. கடந்த ஆண்டு சமையல் எரிவாயுவிற்கான மானியம் நேரடியாக ஆதார் அட்டையின் […]
மொபைல் போன்கள், கார்கள் ஆகியவற்றின் மீதான வரிகள் குறைவதாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.அதனால் அவற்றின் விலைகள் குறையும் என்று தெரிகிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மொபைல்களுக்கான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மொபைல் போன்கள் மீதான இறக்குமதி வரிகள் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைகின்றன. இதனால், மொபைல் போன்களின் விலைகள் குறைகின்றன. மேலும், சிறிய ரக கார்கள், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் மீதான […]