Wednesday 29th April 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

பலாத்காரத்தால் கற்பிழந்தவர்களுக்கு மருத்துவ வசதி: புதிய நெறிமுறைகள்

நாக்பூர், மார்ச். 4- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களிடம் இதுவரை நடத்தப்பட்ட விஞ்ஞானப்பூர்வமற்ற இரு விரல் சோதனையை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்டவருக்கு சோதனை மற்றும் மருத்துவ வசதி செய்து தரும் வகையில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இரு அறைகள் ஒதுக்கப்படவேண்டும். ஒன்றில் மருத்துவ பரிசோதனைக்கான வசதியும், மற்றொன்றில் தடவியல் சோதனைக்கான வசதியும் செய்து தர வேண்டும் என அனைத்து மாநில […]

டாக்டர் மீது போலீசார் தாக்குதல்: ஆக்ராவில் 200 மருத்துவர்கள் ராஜினாமா

லக்னோ, மார்ச்.4- உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் மருத்துவர்கள் போராட்டத்தால் அங்கு மோசமான சூழ்நிலை நிலவுகிறது. தங்களது சக மருத்துவர் ஒருவரை போலீசார் தாக்கியதை கண்டித்து 200 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வான இர்பான் சோலங்கிக்கும் மருத்துவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அந்த மருத்துவர் போலீசாரால் தாக்கப்பட்டார். மாநிலம் முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கான்பூரில் நான்காவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. […]

99 மதிப்பெண் வாங்கியதால் ஆத்திரம் வயிற்றில் ஊசியால் குத்திக் கொண்ட சிறுவன்

சீனாவின் ஹெயில்லாங்ஜிங் மாகாணத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன். ஒரு நாள் சிறுவனை குளிப்பாட்டும் போது அவனது வயிற்றில் வீக்கம் இருந்ததை தந்தை கவனித்தார். அதைப் பற்றி சிறுவனிடம் கேட்டபோது, அவன் காயங்களை மறைத்துக் கொண்டு மழுப்பலாக பதிலளித்தான். ஆனால், அவனுக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டான். இதையடுத்து, பெற்றோர் அந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையின் போது சிறுவனது வயிற்றில் 4 ஊசிகள் இருப்பது தெரியவந்தது. […]

தொழில் அதிபர் ஒருவருடன் துபாயில் ஜோடியாக சுற்றிய காஜல் அகர்வால் படங்கள் இணையளத்தில் வெளியானதால் பரபரப்பு

மும்பை. தமிழ்,தெலுங்கு படங்களில் முன்னனி கதநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால் இவர் தற்போது சமீபத்தில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் தற்போது இவர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும்  படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார். மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் காஜல் அகர்வால் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் சினிமா துறையில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. காஜல் அகர்வால் மற்றும் […]

புதிய வடிவமைப்பில் மு.க.ஸ்டாலின் இணையதளம்

சென்னை, மார்ச்.1– தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், தன்னை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தனக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தைத் தொடங்கி அதன் வழியாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார். தற்போது வளர்ந்துள்ள நவீன தொழில் நுட்பத்திற் கேற்ப மு.க.ஸ்டாலினின் இணையதளம் www.mkstalin.in புதிய வடிவமைப்பினைப் பெற்றுள்ளது. அவருடைய பிறந்தநாளான இன்று (1-3-2014) அவராலேயே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வளைதலங்களில் உரையாடுவதற்கான வசதியும் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜோதிட கட்டுரை […]

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி வக்கீலுக்கு முக்கிய பதவி

நியூயார்க், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பலர் திறமை காரணமாக உயர் பதவிகளில் நியமித்து கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த வரிசையில் தற்போது  நியூயார்க் நகரில் வசித்து வரும் பிரபல வக்கீல் நிஷா அகர்வால் நியூயார்க் மேயர் அலுவலக குடியுரிமை விவகார கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனத்தை மேயர் டி பலாசியோ அறிவித்ததுடன், நிஷா ஏற்கனவே குடியுரிமை வேண்டுவோருக்காக செய்து வரும் பணிக்கு பாராட்டு தெரிவித்தார். நிஷா அகர்வால் அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். […]

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: கருணாநிதியிடம் ஆசிபெற்றார்

சென்னை, மார்ச் 1– தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 61–வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடக்கூடாது. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி தி.மு.க.வினர் இன்று மாநிலம் முழுவதும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கியும், மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கியும் கொண்டாடினார்கள். மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார். அப்போது கருணாநிதி மு.க.ஸ்டாலினை […]

நடிகை பூமிகாவுக்கு ஆண் குழந்தை

நடிகை பூமிகா தமிழில் ‘பத்ரி’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘ரோஜா கூட்டம்’ படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். பூமிகாவுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007–ல் திருமணம் நடந்தது. பல வருடங்களுக்கு பிறகு இப்போது பூமிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பூமிகாவும் உறுதி செய்தார். இதுகுறித்து பூமிகா கூறும்போது, ‘‘எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். பரத் தாகூரும் சந்தோஷமாக உள்ளார். ஆனந்தபெருக்கால் விழிகளில் […]

உக்ரைனில் ராணுவம் முற்றுகை: ரஷியாவுக்கு ஒபாமா எச்சரிக்கை

வாஷிங்டன், மார்ச். 1– ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவியில் இருந்து விலகி தப்பி ஓடி விட்டார். தற்போது அங்கு இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. விக்டர் யனுகோவிச் ரஷியாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். எனவே, அவருக்கு அடைக்கலம் தர ரஷிய அதிபர் புதின் சம் மதித்து விட்டார். மேலும், உக்ரைனில் தன்னாட்சி உரிமை பெற்ற கிரிமியா தீபகற்பத்தின் தலைநகர் சிம்பெரோ போவில் உள்ள பாராளுமன்ற […]

அசாம் பிரசாரத்தில் ராகுலை முத்தமிட்ட பெண் எரித்து கொலையா?

புதுடெல்லி, மார்ச். 1– காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை அறிந்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம் சென்றார். ஜோர்கட் என்ற இடத்தில் அவர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்தார். இதில் 600 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ராகுல்காந்தி கருத்துக்களை கேட்டார். அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »