Wednesday 4th December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: இந்தியா

முன்பதிவு செய்பவர்கள் ஆன் லைனிலேயே தாங்கள் விரும்பும் இருக்கையை தேர்தெடுக்கும் வசதி

டெல்லி : இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் முன்பதிவு செய்து ஏராளமான பயணிகள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் பயணம் செய்கின்றனர். அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்பவே இருக்கை வசதி அல்லது படுக்கை வசதி கிடைக்கும். மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா தாக்கல் செய்த பட்ஜெட்டில் ‘‘ரயில்வே இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே […]

புதுபடங்கள் டிவிடியாக வீடுகள் தோறும் சப்ளை: சேரனின் புது திட்டம்

டைரக்டர் சேரன் புதுபடங்களை டி.வி.டி மூலம் வீடுகள் தோறும் சப்ளை செய்யும் புதுதிட்டத்தை துவங்கியுள்ளார். இதற்கு ‘சினிமா டூ ஹோம்’ என்று பெயர் வைத்துள்ளார். டி.டி.எச்., இன்டர்நெட், கேபிள் டி.வி., மொபைல், டி.வி.டி. உள்ளிட்ட பல வழிகளில் வீடுகளுக்கு புதுபடங்களை நேரடியாக கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் தயாராகியுள்ளது. இதுகுறித்து சேரன் கூறும் போது, நான் இயக்கிய ’ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் தணிக்கை சான்றிதழ் பெற்று 8 மாதங்களாகியும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. எனவே […]

மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாளை தொடக்கம்

மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாளை தொடங்க உள்ளது.  மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வருகிற ஜூலை 18ந்தேதி அதற்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  கோரிக்கைகள் மீதான விவாதம் ஜூலை 21 மற்றும் 24ந்தேதிகளுக்கு இடையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெறும்.  மக்களவையில், சுற்றுச்சூழல் மற்றும் வனம், நீர் வளம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகள் மீதான கோரிக்கைகள் முன் வைக்கப்படும். இதுபோன்று மாநிலங்களவையில், உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் ஆகிய துறைகள் […]

நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு

புதுடெல்லி, பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் […]

பிரதமரின் ‘டுவிட்டர்’ கணக்கு மூடல்: பாரதீய ஜனதா கொதிப்பு

புதுடெல்லி, மே 21- பிரதமர் அலுவலகத்துக்கு என்று ‘டுவிட்டர்’ சமூக வலைத்தள கணக்கு உண்டு. இதை 14 லட்சம் பேர் பின்பற்றி வந்தனர். இப்போது பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகி, புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், பிரதமர் அலுவலக ‘டுவிட்டர்’ கணக்கு அப்படியே தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் பிரதமர் அலுவலக ‘டுவிட்டர்’ கணக்கை, தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே மூடி, (தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ்) ஆவணக் காப்பகமாக மாற்றி […]

ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி அமெரிக்காவுக்கு வருவார்: பான் கி மூன் நம்பிக்கை

நியூயார்க், மே 21- இந்தியப் பிரதமராக விரைவில் பொறுப்பேற்கும் நரேந்திர மோடி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க விரைவில் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்று நம்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்திற்கு, குறிப்பாக, பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு […]

பிரேமலதாவை மனம் திறந்து பாராட்டிய மோடி

புதுடெல்லி, மே 21- புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர். அவ்வகையில், தமிழகத்தில் அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனரும் அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளருமான எல்.கே.சுதீஷ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, இந்த மகத்தான வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சியினருக்கும், பாராளுமன்ற […]

பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி அ.தி.மு.க.

புதுடெல்லி, மே. 17- புதிதாக அமைய இருக்கும் 16-வது பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற பெருமையை அ.தி.மு.க. பெற்று உள்ளது. 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்று உள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 2-வது இடத்தை பெற்று இருக்கிறது. காங்கிரசுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்று 3-வது பெரிய கட்சி என்ற கவுரவத்தை பெற்று இருக்கிறது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  […]

வாரணாசி, வதோதரா இரு தொகுதிகளிலும் நரேந்திர மோடி அமோக வெற்றி வதோதராவில் ஓட்டு வித்தியாசம் 5½ லட்சம்

வாரணாசி, தான் போட்டியிட்ட வாரணாசி, வதோதரா ஆகிய இரு பாராளுமன்ற தொகுதிகளிலும் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றார். வதோதரா தொகுதியில் அவர் சுமார் 5¾ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். 5¾ லட்சம் வாக்கு வித்தியாசம் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள வதோதரா பாராளுமன்ற தொகுதியிலும், உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் அமோக வெற்றி […]

‘ஆம் ஆத்மி’ கட்சியின் வீழ்ச்சி

‘ஊழல் ஒழிப்பு’ என்ற கோஷத்தை முக்கியமாக வைத்து தொடங்கப்பட்ட அரசியல் கட்சி, ‘ஆம் ஆத்மி’. அதன் அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றியவர்.  அவர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து, ஊழல் ஒழிப்புக்கான ‘ஜன லோக்பால்’ மசோதாவுக்காக குரல் எழுப்பி வந்தார். அதுதொடர்பாக நடைபெற்ற போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். டெல்லி–முதல்–மந்திரி அன்னா ஹசாரே, சமூக இயக்கமாகவே தனது இயக்கத்தை நடத்தி செல்ல விரும்பினார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கோ தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஆசை […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech