Saturday 24th February 2018
Breaking News:
Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு.    New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி
Category archives for: மருத்துவம்

இரத்த விருத்திக்கு பாட்டி வைத்தியம்

முருங்கைக் கீரையைக் கொண்டுவந்து மூன்று கைப்பிடி அளவு எடுத்து, ஒரு கைப்பிடியளவு துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்து இறக்கும் முன் ஒரு கோழிமுட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும். பொன்னாங்கன்னிக் கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும். […]

சரும நோயை போக்கும் ரோஜாப்பூ மருத்துவம்!

ரோஜாப்பூ ஒரு மருத்துவப் பொருளாகவும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது என்ற விஷயம் நம்மில் பலருக்குத் தெரியாது. சாதாரண சீதபேதிக்கு ரோஜாப்பூ நல்ல மருந்து. ரோஜா மலரின் இதழ்களை ஆய்ந்து வேளைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் இரண்டு நாட்களில் சீதபேதி முற்றிலுமாக குணமாகிவிடும். ரோஜாப்பூவினால் தயாரிக்கப்படும் “குல்கந்து” என்ற திரவத்தையும் சீதபேதிக்கு சாப்பிடுவது உண்டு. மிகவும் இனிய சுவையுடைய குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த விருத்தியும், இரத்த […]

உடல் ஆரோக்கியத்தை தரும் உலோகங்கள்

தங்கம் உடல் சிவப்பு நிறம் பெற தங்கத்தை வசம்புடன் சேர்த்து அரைத்து உண்ணும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. ஆயுர்வேகத்தில் “தங்கபஸ்பம்” என்னும் மருந்து தேனில் குழைத்து உண்ணத் தரப்படுகிறது. உடலை வனப்போடும் இளமையோடும் வைக்க தங்கச்சத்து பயன்படுகிறது.  தங்கத் தட்டில் சூடான சாதமும் நெய்யும் இட்டு உண்பதால் உடலுக்கு எவ்வளவு தங்கம் வேண்டுமோ அவ்வளவு தங்கம் (மிகமிகச் சிறிய அளவு) உடலில் சேரும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. வெள்ளி வெள்ளி உடலுக்குப் பொலிவு மற்றும் அழகைத் […]

மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா?

மனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர்கள் வரை கூறி வருகிறார்கள். ஒருவரது மனதில் கவலை தோன்றும் போது, அவரது உடல் தளர்ந்து போவதும், கோபத்தில் இருக்கும்போது இதயம் படபடப்பதும் மன உணர்ச்சியின் அடிப்டையில் உடலில் தோன்றும் விளைவுகளாகும். அதிக அச்சம் ஏற்படுவதால் இதயத்துடிப்பு அதிகரித்தல், கைகால்கள் இழுத்துக் கொள்ளுதல், சிலருக்கு அதிர்ச்சியில் இதயமே நின்றுபோவது கூட நிகழ்கிறது. மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக […]

இருதயத்தை வலுப்படுத்தும் கொய்யாப் பழம்

வீரிய விருத்தியை உண்டாக்கும் இயல்பு, கொய்யாப் பழத்துக்கும் உண்டு. இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு இரத்தத்தின் வளத்தைப் பெருக்குவதில் இதன் சக்தி பயன்படுகிறது, இதனால் இரத்த சோகை பீடித்தவர்கள் தொடர்ந்து கொய்யாப் பழம் சாப்பிடக் குணம் தெரியும். கொய்யாப் பழம் பித்தக்கோளாறுகளை ஊட்டக்கூடியதாகையால், அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. இருதயத்தை வலுப்படுத்தும் ஆற்றல், இதற்கு உண்டு. ஆதலால் இருதய நோயாளிகள், கொய்யாப் பழசீசனில் அன்றாடம் ஒரு பழத்தைக் காலை உணவுக்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பயனைத் தரும். ஜோதிட கட்டுரை படிக்க […]

உடல் நலம் தரும் திராட்சைப் பழம்

திராட்சை வைட்டமின் C நிறைந்தது. இதயநோய்க்கு பச்சை திராட்சை சிறந்தது. நரம்புத் தளர்ச்சியால் உடல் நடுக்கம் கொண்டவர்கள் தினமும் சிறிது திராட்சை உண்டு வந்தால், நரம்புத்தளர்ச்சி குறையும். ஜீரண சக்தியை அதிகரிக்கம். பலவகையான குடல் கோளாறுகளுக்கும் பச்சை திராட்சை நல்ல வகையில் பயன் படுகின்றது. இருதய நோய்களையும் பச்சை திராட்சை சீராக்கும் இயல்பு பெற்றிருக்கிறது. நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படுகிற உடல் நடுக்கத்தை சீர் செய்யும் வல்லமையும் இதற்கு உண்டு. பச்சைத் திராச்சையின் சாறு எடுத்து பகல் […]

யார் ரத்த தானம் செய்யலாம்?

ரத்ததானம் செய்பவரின் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவர்களின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். சாதாரண மனிதனின் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்ததானத்தின்போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். நாம் தானம் செய்யும் ரத்தம், 24 மணி நேரத்தில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய […]

மருத்துவம் குணம் கொண்ட சீயக்காய்

சீயக்காய் பொடி கிருமிக் கொல்லியாகவும், புண்களை ஆற்றுவித்து, சீழ்பிடிக்காமல் வற்றச் செய்யும் மருத்துவக் குணமும் கொண்டதாகும். தலைமுதல் கால்வரை வரக்கூடிய சொறி, சிரங்கு, அடிபட்ட ரணங்களை “டெட்டால்” மூலம் கழுவுவதைப் போல் சீயக்காய்ப் பொடியை நீரில் கலந்து காய்ச்சி, அந்த கஷாயத்தால் கழுவலாம். செப்டிக் புண்களையும், சீழ் வடியும் ரணங்களையும், சீயக்காயினால் கழுவி வர விரைந்து அவை ஆறும். தலைமுடியில் அழுக்குப்படிந்து ”சிக்கு” ஆகிவிட்டால் சீயக்காயினை அரைத்துப் புழுங்கலரிசி வடித்த கஞ்சியில் குழைத்து தலை சிக்கு மீது […]

வயிற்று இரைச்சலை நீக்கிக் குடலுக்கு வலுவை கொடுக்கும் கறிவேப்பிலை

உணவு பதார்த்தங்களுக்கு சிறந்த மணமூட்டியாக விளங்குவது கறிவேப்பிலை. இதைப் பச்சையாகவும் உண்ணலாம். இரத்த சுத்திக்கேற்றது. பித்தம், மாற்றும் வாந்தியைத் தடுக்கும். வயிற்று இரைச்சலை நீக்கிக் குடலுக்கு வலுவைக் கொடுக்கும். மூல பேதியை கட்டும் இதில் வைட்டமின் “ஏ“ சத்து அதிகமாக இருக்கிறது.  அத்துடன் வைட்டமின் பி, சி யும் உண்டு. ஓரளவு இரும்புச் சத்தும் உண்டு. கறிவேப்பிலையைக் காயவைத்து, பொடித்து சோற்றுடன் சிறிது நெய்யும் கலந்து உண்டால் குடல் இறுக்கம், மூலக்கடுப்பு போன்றவை குணமாகும். கறிவேப்பிலையை இஞ்சி, […]

கருவில் இருக்கும் குழந்தைக்கு முக்கிய தேவை அயோடின் சத்து

கருவில் உள்ள குழந்தைக்குத் தேவையான அயோடின் சத்து அதன் தாயிடமிருந்து கிடைக்காத நிலையில், பிறவிலேயே சில குறைபாடுகள் ஏற்படும். குழந்தைப் பருவத்திலேயே முறையான மூளை மற்றும் உடல் வளர்ச்சி இல்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும். பிறந்த குழந்தைகளுக்குப் போதிய நினைவாற்றலும் சுய சிந்தனையும் இல்லாத நிலையுடன் தைராய்டு பாதிப்பு, பிறக்கும்போதே முன் கழுத்துக் கழலை, வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு முன் கழுத்துக் கழலை, உடல் வளர்ச்சிப் பாதிப்பு, இளம் வயதில் வரும் ஹைப்போ தைராய்டிசம், மன […]

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech