ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் என்பது மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த 5-ம் பாவம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைத்தாலும், புத்தி கூர்மையை எடுத்துக்காட்டும் இடமாக இந்த 5-ஆம் இடமானது இருக்கிறது. வாழ்க்கையில் சோதனையான காலகட்டமாக இருந்தாலும், எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக யோசித்து ஒருவர் எதையும் செய்கிறார் என்றால், அவரின் ஜாதகத்தில் 5-ம் இடமானது சிறப்பாக இருக்கிறது என்று பொருள். இந்த சிறப்பான ஸ்தானத்தின் காரணமாக நிச்சயம் அத்தகைய ஜாதகர் வாழ்க்கையில் […]
மனிதர்களுக்கு தங்களது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதில் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தை நம்பாதவர்கள் கூட, எவரேனும் ஒருவர், கடந்தகாலம், நிகழ்காலத்தை சொல்லிவிட்டால், எதிர்காலத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும் கொஞ்சமாவது ஆவல் ஏற்படும். எவருக்கும் தங்களது இப்போதைய நிலவரம் சரியில்லை என்றாலும், எதிர்காலத்திலாவது ஏதேனும் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்காதா? என்று ஏங்கி இருப்பார்கள், பலர் அதற்காக போராடி வருவார்கள். இந்நிலையில் உலகம் அழியப்போகிறது என்று பல ஆண்டுகளாக சிலர் பேசி வருகிறார்கள். இக்கருத்துகளை […]
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று சொல்வதுண்டு. பலர், மரணத்திற்கு பின்னர் தெய்வமாகின்றனர். சிலர் மட்டும்தான் வாழும்போதே தெய்வீக அம்சங்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ஐயா பொன்முத்துராமலிங்கத் தேவர், மகான் ஸ்ரீஇரமணர் மகரிஷி, ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள், ஷீரடி சாயிபாபா, புட்டபர்த்தி சாயிபாபா, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், திருவண்ணாமலை விசிறி சாமியார், வடலூர் ஸ்ரீராமலிங்க அடிகளார், ஸ்ரீசங்கராச்சாரியர் சுவாமிகள் என்று இன்னும் இன்னும் எத்தனையோ மனிதர்களாக பிறந்த தெய்வப்பிறவிகள் பலருண்டு. இவர்கள் அனைவரும் நமக்கானவர்கள். நம் நலனுக்காகவே துணை […]
சொந்த வீடு என்பது நம் அனைவருக்குமான கனவு. அந்த கனவு நிறைவேறும் காலம் எப்போது என்று தெரியாமல் இருந்தாலும் என்றாவது ஒருநாள் சொந்த வீடு வாங்கி குடியேறுவோம் என்கிற நம்பிக்கையுடன் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு காரணம், ஜோதிடர் சொன்ன அந்த வார்த்தை, ”நீங்க சொந்த வீடு வாங்குவீங்க” இந்த ஒரு வார்த்தைதான் பலரை உத்வேகத்துடன் உழைக்க வைக்கிறது. சொந்தமாக வீடு வாங்கும் நேரத்தை, சந்தர்ப்பத்தை மிக அருகில் கொண்டு வர ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். […]
வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான கட்டமாக ஒருவரின் வாழ்க்கையில் இருக்கிறது. கல்வியும், தொழிலும், உத்தியோகமும் எப்படி ஒருவருக்கு தேவையாக உள்ளதோ, முன்னேற்றத்திற்கு உதவியாக உள்ளதோ அதுபோல, திருமணம் என்பது வாழ்க்கையின் முழுமையை தருவதாக இருக்கிறது. கடின முயற்சியால் கல்வியறிவை பெற முடிகிறது. கடின முயற்சியால் தொழிலிலும், உத்தியோகத்திலும் உயர முடிகிறது. ஆனால் திருமண வாழ்க்கை என்பது ஒரு வரமாகவே உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக அமைந்துவிட்டால், கல்வி சுமாராக இருந்தாலும், தொழில் சொற்ப லாபத்தில் நடந்தாலும், […]
ஜாதக யோகங்கள் பல இருந்தாலும் அதிலே முக்கியமான யோகங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. அவற்றில் புஷ்கல யோகம் என்பது முக்கியமான ஒரு யோகமாகும். ஜாதகத்தில் புஷ்கல யோகம் இருந்தால் பொருளாதார வசதிக்கு மிக முக்கிய வலு சேர்ப்பதாக இருக்கிறது. புஷ்கல யோகம் பெற்றவர்கள் நிச்சயம் ஒருகாலகட்டத்தில் பணவசதியில் உயர்ந்துவிடுகிறார்கள். இன்றைய நிலைமை வறுமையில் துவண்டு கிடந்தாலும், புஷ்கல யோகம் பெற்றவர்கள் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள் என்பது நிச்சயம். அத்துணை சிறப்பு வாய்ந்த புஷ்கல […]
ஒருவரின் ஜாதகத்தில் பல ராஜயோகங்கள் இருந்தாலும், ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியஸ்தானம் நன்கு வலுபெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு ஆபத்தான, இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் தப்பிப்பதற்கு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய இடமானது சிறப்பாக இருக்க வேண்டும். ”யார் செய்த புண்ணியமோ… எப்படியோ தப்பித்துவிட்டார்” என்று யாரையாவது எந்த சந்தர்ப்பதிலாவது சொல்ல கேட்டிருப்போம். அத்தகைய யார் செய்த புண்ணியமோ என்பது அந்த நபரோ அல்லது அவரின் முன்னோர்களின் புண்ணிய பலனாகவோ இருக்கும். இதைதான் ஜோதிட தத்துவம் பூர்வ […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 01/01/2024 ஆங்கில புத்தாண்டு கன்னி லக்கினத்தில் பிறக்கிறது. லக்கினத்தில் கேது அமர்ந்து, லக்கினத்திற்கு 4-இல் சூரியன், செவ்வாய் தனுசில் இணைந்து, கேதுவை 10-ஆம் பார்வையாக சூரியன் பார்க்கிறார். இதனால் தெய்வ பக்தி அதிகரிக்கும். கோயில் குளங்களில் பூஜை அதிகரிக்கும். செவ்வாய், இராகுவை பார்வை செய்வதால் விஷகாய்ச்சல் அதிகரிக்கும். இதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன். வெகு ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும். இராகுவை செவ்வாய் பார்வை செய்வதால் […]