நிரஞ்சனா ஒருசமயம் பிரம்மன் காஞ்சி தலத்திற்கு வந்து காமாட்சி அம்மனை தரிசிக்க சென்றார். அம்மனை தரிசிக்க வேண்டும் என்ற அவசரத்தில் காமாட்க்ஷி ஆலயத்தில் இருக்கும் காயத்தரி மண்டபத்தை மிதித்து விடுகிறார். இதனால் பிரம்மனின் கண்பார்வை குறைந்துவிடுகிறது. திரும்ப சரியான பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்று சரஸ்வதிதேவியிடம் கேட்டார். “மறுபடியும் காஞ்சி தலத்திற்கே சென்று கண்பார்வை கிடைக்க வேண்டுங்கள். நிச்சயம் காமாட்க்ஷி மனம் இறங்கி உங்களுக்கு கண் பார்வையை கொடுப்பார்.” என்றாள் சரஸ்வதி. சரஸ்வதி தேவி […]
நிரஞ்சனா செங்கல்பட்டு மாவட்டம் சென்னை மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில். ஒருசமயம் விருத்தாசலத்தில் சிதம்பர சுவாமிகள் என்பவர் சமாதி நிலையில் தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரின் தவத்தில் முருகபெருமான் காட்சி தந்தார். திடுக்கிட்டு கண் திறந்து பார்த்த சிதம்பர சுவாமிகள், “இதற்கு என்ன காரணம்.? கனவில் முருகப் பெருமான் வந்தாரே. தூக்கத்தில்தானே கனவு வரும். நாம் தியானம்தானே செய்தோம். அப்படியானால் என் மனம் முருகனை நினைத்து தியானிக்காமல் அமைதியாக உறங்கியதா?.” என்று […]
நிரஞ்சனா மயிலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கு காரணமே கற்பகவல்லி அம்பிகையால்தான். அன்னை மயிலாக உருவெடுத்து சிவபெருமானை நினைத்து தவம் செய்தாள். அதனால் இந்த பகுதிக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. இத்திருக்கோயிலுக்கு உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால் உடல்நலம் இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்தால் நலம் பெறுவார்கள். நம்முடைய எண்ணங்களை வாய் திறந்து ஈசனிடம் சொல்ல வேண்டியதில்லை. மனதில் நினைத்தாலே நிறைவேறும் என்கிறார் சேக்கிழார். நாம் நம்முடைய வேண்டுதலை மனதில் நினைத்தப்படி இந்த கோயிலுக்குள் நுழைந்தாலே நினைத்தது நிறைவேறும். […]
நிரஞ்சனா சென்னை மாநகரையொட்டி உள்ள ஊர் திருவொற்றியூர். இங்கு இருக்கும் இறைவனின் பெயர் தியாகராசர். அன்னையின் பெயர் வடிவுடை அம்மன். ஒரு சமயம் தச்சனின் யாகத்தீயில் விழுந்து உயிரைவிட்டாள் பராசக்தி. அவள் உடல் பாதி கருகியும் பாதி கருகாமலும் இருந்தது. தேவியின் உடலை பார்த்து சினம் கொண்ட சிவன், அன்னையின் உடலை தன் தோலில் போட்டு கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். இதை கண்ட ஸ்ரீமந் நாராயணன் சிவனின் ஆவேச நடனத்தை கண்டு பதறினார். இதனால் தனது சக்கரப் […]
நிரஞ்சனா கடம்பந்துறை என்ற இத்தலம் இன்று குளித்தலை என அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் இருந்து முப்பது கி.மீ தொலைவில் இந்த கோயில் இருக்கிறது. காசிக்கு போனால் பாவம் தொலையும் என்பது போல் இந்த ஸ்தலத்திற்கு வந்தால் காசிக்கு வந்த புண்ணியம் கிடைக்கும் என்கிறது ஸ்தலபுராணம். ஆம்.. காசியில் இருக்கும் சிவாலயம் வடக்கு நோக்கி அமைந்திருப்பது போன்று, இந்த ஆலயமும் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அதனால் இந்த திருக்கோயில் தட்சிணகாசி என்ற பெயரும் பெற்றிருக்கிறது. இந்த […]
நிரஞ்சனா மதுரையிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள திருப்பூவணம் என்ற சிற்றூரிலிருந்து ஓன்றரை கிமீ தூரத்தில் மடப்புரம் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெயர் “அடைக்கலம் காத்த அய்யனார் – பத்ரகாளியம்மன் திருக்கோயில்.” பிரம்மன், விஷ்ணு, சிவனுடன் கௌரி அம்மனும் ஒரு காட்டுபகுதியில் வேட்டையாட வந்தார்கள். அது அடர்ந்த காட்டு பகுதி. இனி காட்டுக்குள் செல்ல செல்ல சூரிய வெளிச்சம் கூட இல்லாமல் இருக்கும். ஆகவே நீ இங்கேயே இரு என்று சிவபெருமான் கௌரியம்மனை கேட்டுக்கொண்டார். அம்மனின் காவலுக்கு அய்யனாரை அங்கு நிறுத்தினார் […]
நிரஞ்சனா திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் பாங்கோடு என்ற இடத்தில் சாஸ்தா நகரில் ஒரு விலங்கு ஒன்றின் மேல் அமர்ந்திருக்கிறார். ஆம்.. சாஸ்தா பொதுவாக புலி மீது அமர்ந்திருப்பதைதான் பார்த்திருக்கிறோம் ஆனால் இநத வனசாஸ்தா குதிரை மேல் அமர்ந்திருக்கிறார் அதன் காரணத்தை பார்ப்போம். திருவிதாங்கூர் நாட்டின் அரசர் ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா, ஒருசமயம் குதிரையில் நகர்வலம் வந்துக் கொண்டு இருந்தார். உடன் வந்தவர்களுடன் பேசி கொண்டே வந்தாலும் ஏதோ காரணத்தால், இல்லை இல்லை… […]
நிரஞ்சனா “இந்த ஊரிலேயே பிறந்து இந்த ஊரிலேயே வளர்ந்த எங்ககிட்ட பணம் இல்லை. ஆனா சொந்த ஊரைவிட்டு வந்த உங்க கிட்ட மட்டும் எப்படி சேடு எங்க ஊருக்கே கடன் தர அளவுக்கு கட்டு கட்டா பணம் இருக்கு” இது ஒரு படத்தில் மார்வாடி சேட்டிடம் நடிகர் ஒருவர் பேசிய வசனம். இதை சிந்தித்து பார்த்தால் உண்மையாகதானே இருக்கிறது. எதனால் வடஇந்தியர்களிடம் பணம் கொட்டி கிடக்கிறது என்றால் காரணம் ஸ்ரீமகாலஷ்மியின் பேரருள் அவர்களுக்கு இருக்கிறது. அவள் விரும்பி […]
நிரஞ்சனா திருமுல்லைவாயில் சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து 4. கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது. காஞ்சி தொண்டைவள நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார் தொண்டைமான். இதனால் காஞ்சி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். இதே தொண்டை நாட்டின் வடபகுதியில் குறும்பாரிக் கோட்டை என்ற நகரில் ஓணன், வாணன், காந்தன் என்ற கொடிய அசுர குணம் படைத்த குறும்பர்கள் பைரவனை வணங்கி அவரையே தங்கள் நகருக்கு காவலாக வைத்திருந்து தங்கள் நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு செய்து வந்தனர். இதனால் […]
நிரஞ்சனா மாமல்லபுரம் செல்லும் வழியில் திருக்கழுக்குன்றம் இருக்கிறது. திருக்கழுக்குன்றம் என்கிற பெயர் வந்த காரணம், இன்று வரை இந்த பகுதிக்கு இரண்டு வெள்ளை கழுகுகள் மதிய வேளையில் வருகிறது. சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் அந்த இரண்டு கழுகுகளுக்கு பண்டாரங்கள் உணவு ஊட்டுவார்கள். யார் இந்த கழுகுகள்? பிரம்ம புத்திரர்கள் எட்டு பேர், சாரூப பதவி வேண்டி கடும் தவம் இருந்தார்கள். சிவபெருமானும் இவர்களின் தவத்தை மெச்சி காட்சி கொடுத்தார். தங்கள் தவத்தை ஏற்று சிவன் […]