நிரஞ்சனா மகாராஷ்டிரா மாநிலத்தின் “பாகா” என்ற ஊரில் கம்பீர ராயர் என்பவர் இருந்தார். இவர் சாஸ்திரங்களையும், புராணங்களையும் நன்கு கற்றவர். இவர் மிகபெரிய பண்டிதர். கம்பீர ராயருக்கு நல்ல குணவதியான “கோனாம்பிகா” என்ற பெண் மனைவியாக அமைந்திருந்தாள். இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு “பாஸ்கர ராயர்” என்று பெயர் வைத்தார்கள். குழந்தை பாஸ்கர ராயரின் 7-வது வயதில் “சரஸ்வதி உபாசனை” செய்ய வைத்தார்கள் பெற்றோர்கள். பாஸ்கர ராயர் சிறு வயதிலேயே […]
நிரஞ்சனா காலையில் எழுபவனை யாராலும் செல்ல முடியாது என்கிறது சாஸ்திரம். விடியற்காலையில் சேவலும் கோழியும் விழிக்கிறது. அதை பிரியாணி செய்துவிடுகிறார்களே என்று விதண்டாவாதம் பேசுபவர்களும் உண்டு. புனிதமான கடலுக்குள்ளே இருக்கும் ஜீவராசிகளுக்கு, சிப்பிக்குள் இருக்கும் முத்தால் லாபம் இல்லை. அதுபோல்தான் கோழி, சேவல் போன்றவையும். காலையில் எழுந்தாலும் இறைவனுடைய நாமத்தை அது உச்சரிக்குமா?. அதனால் மனிதன் விடியற்காலையில் எழுந்து இறைவனுடைய நாமத்தை உச்சரிப்பதும் அந்த நாமத்தை நினைப்பதுமாக இருக்க வேண்டும். காலை பொழுதில் எழுந்து தெய்வத்தை நினைத்து […]
முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும் நிரஞ்சனா அயோத்திப் பட்டிணத்தில் “நம்பியான்” என்ற ஏழை பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் உஜ்ஜைனி காளி பக்தர். “ஏழு பெண் பிள்ளைகளை பெற்றிருக்கிறேன். அவர்களை எப்படி கரை சேர்ப்பேன்.” என்று தினம் தினம் காளியிடம் புலம்புவார். அதேசமயம் அயோதியில் பஞ்சம் உண்டானது. ஒருநாள் அவர் கனவில் உச்சிகாளி அம்மன் தோன்றி, “தென்னாட்டின் உஜ்ஜைனி பகுதியில் உள்ள என் கோயிலுக்கு வா” என்று கட்டளையிட்டாள். இதனால் பல முயற்ச்சி செய்து எப்படியோ அந்த […]
நிரஞ்சனா அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் மாகாளிக்குடி, சமயபுரம் திருச்சி மாவட்டம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை கொண்டது அவ்விஷம். அதனால் அந்த விஷத்தை கண்டவுடன் அசுரர்களும் தேவர்களும் பயந்தார்கள். உலக நன்மைக்காக அந்த விஷத்தைக் சிவபெருமானே வாயில் போட்டுக்கொண்டார். இதை கண்டு அதிர்ந்து போன சக்திதேவி, விஷம் சிவபெருமானின் […]
நிரஞ்சனா அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில் வீராம்பட்டினம் – புதுச்சேரி மாவட்டம். மீனவர் வீரராகவர் பரதவர்கள். இவர்கள் கடல் சார்ந்த தொழில் செய்பவர்கள். 450ஆண்டுகளுக்கு முன்பு இந்த பரதவர் குலத்தில் பிறந்த வீரராகவர் என்ற மீனவர், தினமும் மீன் பிடிக்க கடலுக்கு செல்வார். தினமும் மீன்பிடித்துதான் சம்பாதிக்க வேண்டும். ஏனோ இவரின் வலையில் மட்டும் பெரிய அளவில் மீன்கள் கிடைக்காது. கடலில் மீன் பிடிக்கவில்லை ஒருநாள் செல்லவில்லை என்றாலும் அவர் குடும்பம் பசியில் வாடும். இப்படி […]
நிரஞ்சனா முகவரி: அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில், நேரு காலனி, பழவந்தாங்கல் நங்கநல்லூர், சென்னை. ஒருசமயம் காஞ்சி மகாபெரியவர், சென்னை பரங்கிமலை அருகில் இருக்கும் நந்தீஸ்வரரை வணங்க வேண்டும் என்று விரும்பினார். அதேபோல பழவந்தாங்கல், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கோயில்களை தரிசிக்க, பக்தர்களுடன் பாதயாத்திரையாக சென்னை வந்தார்கள். சுவாமிகள் திரிசூலம் வந்தாகள். அங்கு கோயில் கொண்டிருக்கும் திரிசூலநாதரையும், திரிபுரசுந்தரியையும் தரிசித்து விட்டு பழவந்தாங்கல் வந்துக்கொண்டு இருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் களைப்படைந்த சுவாமிகளும் பக்தர்களும், […]
நிரஞ்சனா “கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்” என்றனர் நம் ஆன்றோர்கள். இந்த வார்த்தையை வேதமாக ஏற்று நடப்பவர்கள் இந்தியர்களாகிய நாம். “அந்த புதிய ஊர் (அ) நாடு, உன் வாழ்க்கைக்கு நல்ல மாற்றம் தரும். நீ அங்கு செல்” என்று இறைவன், பக்தர்களுக்கு உணர்த்துவார். இதனால் வேலை வாய்ப்புக்காக, முன்னேற்றத்திற்காக நாம் ஊர் விட்டு ஊரோ, அல்லது நாடு விட்டு நாடோ போக வேண்டிய சூழ்நிலை பெறுவோம். இப்படி ஒரு புதிய இடத்திற்கு போனவுடன், […]
பகுதி – 2 இதன் முந்தைய பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா கைலாய மலையில் புட்பதந்தன், மாலியவான் என்கிற இரண்டு சிவகணங்கள் இருந்தார்கள். சிவபெருமானுக்கு பணிவிடை செய்வதில் இருவரும் போட்டி போடுவார்கள். ”நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருங்கள்.” என்று பலமுறை சிவபெருமானும் சொல்லி பார்த்தார். ஆனால் அந்த சிவகணங்கள் கேட்பதாக இல்லை. ஒருநாள் சிவபெருமான் மிகுந்த கோபம் கொண்டு புட்பதந்தனை யானையாகவும் மாலியவானை சிலந்தியாகவும் பிறக்கும்படி சாபமிட்டார். இருவரும் அவ்வாரே பிறவி எடுத்தனர். அதுவும் ஒரே […]
பகுதி – 1 நிரஞ்சனா திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ளது ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். பிரம்மனால் அன்னை ஆணாக மாறிய சம்பவம் பிரம்மன், தன் படைக்கும் தொழிலை சிறப்பாக செய்துவந்தார். சித்திர குப்தரும் அவரவர் செய்யும் பாவ புண்ணிய கணக்கை பிரம்மனிடம் தருவார். ஒருநாள் சித்திரகுப்தர், ஒரு ஆத்மாவின் பாவ புண்ணிய கணக்கை சரிபார்த்த போது அந்த ஆத்மா பாவமே செய்யாமல் அதிக புண்ணியம் மட்டுமே செய்திருந்தது. இதனால் அந்த அந்த ஆத்மாவை பற்றி “புண்ணியவான்” வரிசையில் எழுதி […]
நிரஞ்சனா திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 2.கி.மி மீட்டர் தொலைவில்அமைந்துள்ளது, திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதியம்மன் ஆலயம். திருமண கோலத்தில் காட்சி தரும் காந்திமதி அம்மன் சிவபெருமானுக்கும் அன்னை பார்வதிதேவிக்கும் திருமண வைபவம் கோலாகலமாக நடந்தது கொண்டு இருந்தது. சிவ-சக்தியின் திருமணத்தை காண கைலாய மலைக்கு முனிவர்கள், தேவர்கள், பார்வதிதேவியின் உறவினர்கள், அசுரர்கள் என்று பலர் ஒன்றாக திரண்டு வந்ததால் பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்தது, தென்திசை உயர்ந்தது. இதனால் திருமண நிகழ்ச்சியில் குழப்பம் உண்டானது. அந்த நேரத்தில் மணமகனான […]