Saturday 23rd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Category archives for: பிற கோயில்

Naga worship to end Naga dhosham | நாகதோஷத்தை நீக்கும் நாக வழிபாடு

Visit : www.youtube.com/niranjanachannel

குருப்பெயர்ச்சி பரிகாரம் (குருவே சரணம்)

குருப்பெயர்ச்சி பரிகாரம் (குருவே சரணம்) | GURU PEYARCHI PARIHARAM (GURUVE SARANAM) Visit: www.youtube.com/niranjanachannel

பலன் தரும் அபிஷேகங்கள்

Written by Niranjhana  இறைவன் படைப்பது அனைத்தும் நமக்குதான். அவன் படைத்த பொருட்களை இறைவனுக்கு திரும்ப அவனிடமே நன்றி செலுத்தும் விதமாக நாம் இறைவனுக்கு அர்பணிக்கிறோம். குழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம். இதனால் நம் மனம் குளிர்வதுபோல் இறைவனுடைய மனம் மகிழ்ச்சியடையும். சரி, இறைவனுக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். நல்லெண்ணெய் அபிஷேகம்:  மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும். […]

கல்யாண ஆஞ்சனேயரை வணங்கினால் திருமண தடை விலகும்!

Written by Niranjana  அனுமனை வணங்கினால் தைரியம் வரும், தடைபடும் காரியங்கள் நடக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அத்துடன் பால ஆஞ்சனேயர், வீர ஆஞ்சனேயர், பஞ்சமுக ஆஞ்சனேயர் என்று ஆஞ்சனேயேரின் சிறப்புகளை கேள்விபட்டு இருப்பீர்கள். ஆனால் ஆஞ்சனேயர் தன் மனைவியுடன் காட்சி தந்து, “கல்யாண ஆஞ்சனேயர்” என்ற சிறப்பு பெயர் பெற்றும் அருள்பாலிப்பது உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிதான் இப்போது தெரிந்துக்கொள்ள இருக்கிறோம். அனுமன், சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு வரும்போது, அவர் உடலில் இருந்து வியர்வை கடலில் […]

கணபதி இருக்க கவலையில்லை! இரட்டை பிள்ளையாரின் சிறப்புகள்!

நிரஞ்சனா இரட்டை பிள்ளையாருக்கு தனி மகத்துவம் என்ன? பிள்ளையாரை வணங்கினாலே நன்மைகள் கிடைக்கும். அத்துடன் இரட்டை பிள்ளையாரை வணங்கினால் காரியதடை நீங்கும் என்கிறது புராணம். இரட்டை பிள்ளையார் உருவான கதையை தெரிந்துக்கொண்டாலே, இரட்டை பிள்ளையாரின் மகிமைகளை அறிய முடியும். அசுரர்கள் என்றாலே தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லைதான். அதன்படியே நடந்தான் ஒரு அசுரன். முனிவர்கள் நாட்டின் நலனுக்காக யாகம் செய்தால், அதை தடுத்து விடுவான். அதனால் அந்த அசுரனை “விக்கினன்” என்று பெயர் அழைத்தார்கள். “விக்கினன்”  என்றால் “தடை […]

திருமகளின் அருள் இருந்தால் முயற்சி திருவினையாகும்!

Written by NIRANJANA திருமகளின் ஆசி இருந்தால்தான் முயற்சி திருவினையாகும். அது எப்படி? முயற்சி செய்பவர்கள் அனைவருமே சாதித்து விடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. திருமகளின் அருட்பார்வை இருப்பவர்களால்தான் சாதிக்க முடிகிறது. நாம் செய்யும் செயல் நல்வினையாக மாறுவதும் தீவினையாக மாறுவதும் திருமகளின் விளையாட்டு. எடுக்கும் காரியம் நல்வினையாக மாற, திருமகளின் ஆசி இருந்தால், அந்த திருமகள் நம் முயற்சியை திருவினையாக மாற்றி அருள் செய்கிறாள். எதிரிகளை அழிக்கும் ஆற்றல் நரசிம்மருக்கு இருந்தாலும், தன் பக்தர்களின் வாழ்வில் […]

குரு குணங்கள் – ஜாதகத்தில் குரு தனித்து இருந்தால் நல்லதா?

கே.விஜய கிருஷ்ணாராவ் தேவபட்டணமாகிய அமராவதியில் தேவர்கள், முனிவர்கள் சூழ, தன் சிங்காதனத்தில் அமர்ந்திருந்தார் இந்திரன். அன்று ஒரு முக்கிய ஆலோசனையில் மூழ்கிருந்தவர், நான்முகனான பிரம்ம தேவனையும் அழைத்திருந்தார். “ஒவ்வொரு காலகட்டத்தில் ஏதோ ஒரு அசுர குலத்தவன் தேவர்களை இம்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதேனோ?“ என்று வினவினார். “எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான் தேவேந்திரா! இம்முறை நமது பாதுகாப்பிற்கு லோகமாதா பார்வதிதேவியை சரணடைவதை தவிர வேறு நல்வழி இருப்பதாக தமக்கு தோன்றவில்லை.” என்றார் பிரம்மதேவர்! “ஆம் பிரம்ம தேவரே, அதுவே சரி. […]

ராமர் பிறந்த தேதியும் ஆண்டும் இதுதான்.!

புஷ்கர் பட்நாகர் என்ற இந்திய ஐ.ஆர்.எஸ். முன்னாள் அதிகாரி ஸ்ரீராமனின் பிறப்பு, வனவாசம், மனைவியை பிரிதல், இராம – இராவண யுத்த வெற்றி, ஸ்ரீராம பட்டாபிஷேகம் முதலியவை குறித்து வால்மீகி இராமாயணத்தில் உள்ள ஜோதிடக் குறிப்புகள் கொண்டு ஆராய்ந்துள்ளார். (‘Dating the Era of Lord Ram’ published by Rupa & Co) “மேஷத்தில் சூரியன், துலா இராசியில் சனி, கடகத்தில் குரு, மீனத்தில் சுக்கிரன், மகரத்தில் செவ்வாய், கடக லக்னம், புனர்வசு சந்திரன் ஆகிய […]

சௌந்தர்யமான வாழ்க்கை தரும் அரூப லட்சுமி.!

நிரஞ்சனா செல்வ வளமையோடு வாழ்க்கை அமைய வேண்டுமா?  கலையான முகம் வேண்டுமா? சௌந்தர்யமான வாழ்க்கை அமைய வேண்டுமா? வாருங்கள் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் அரூப லட்சுமியை தரிசிக்க. இந்த அரூப லட்சுமியை தரிசித்த பிறகு, நன்மைகளை பெற நாம் சிறிய எளிய பரிகாரம் செய்ய வேண்டும். அது என்ன என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக ஒரு புராண சமபவத்தை தெரிந்துக்கொள்வோம். ஒருசமயம், ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீமகாலஷ்மியின் திருமுகத்தை கண்டு, “நீ என்ன அவ்வளவு பேரழகியா?. உன்னை […]

நல்லவை யாவும் பெருக விநாயகப் பெருமானை வணங்குவோம்

நிரஞ்சனா தெய்வங்களை தரிசிக்க நாம் திருக்கோயில்களுக்குள் நுழையும்போது முதலில் நம்மை வரவேற்பது விநாயகர்தான். அதுபோல, யாகங்கள், சுபநிகழ்ச்சிகளின் தொடக்கம் போன்ற சுபகாரியங்களில் முதல் மரியாதை விநாயகப் பெருமானுக்குதான் தரவேண்டும். அவருக்கு நாம் தரும் மரியாதையை பொறுத்தே நமது எந்த செயல்களுக்கான வெற்றியும் அமைகிறது. நம்பிக்கை உள்ளவர்களை எந்த கணத்திலும் கைவிடாத கடவுள் தும்பிக்கைநாதனாம் கணபதி. தெய்வங்களுக்கு மட்டுமல்ல, பூலோக மக்கள் அனைவருக்கும் செல்ல பிள்ளையாக இருக்கிறார் பிள்ளையார். நள சக்கரவர்த்தி, சனீஸ்வரரால் அவதிப்பட்டு திருநள்ளாறு சென்று, சனி […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech