Tuesday 26th November 2024

தலைப்புச் செய்தி :

கனமழை : புதுச்சேரி..காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *|
Category archives for: ஆன்மிக பரிகாரங்கள்

கண்ணப்ப நாயனார்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 14 சென்ற பகுதியை படிக்க…   நிரஞ்சனா குண்டக்கல் அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம் பேட்டைக்கு அருகில் உள்ளது உடுக்கூர். இது முன்னொரு காலத்தில் உடுப்பூர் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரில் பிறந்தவர் நாகன். இவர் வேடவர்களுக்கு தலைவர். இவருடைய மனைவி பெயர் தத்தை. வேடவர் குலத்தில் பிறந்தவளான இவளிடத்தில் தைரியம் அதிகமாகவே திகழ்ந்தது. தத்தை நடந்து வந்தால் சிங்கம் நடந்து வருவது போல் இருக்குமாம். அந்த அளவில் […]

வெற்றி தரும் ஹயகிரீவர்

நிரஞ்சனா  சும்மா இருப்பது நல்லதென இருந்தாலும், யாராவது வம்பாய் வருவதும் உண்டு. நரி தந்திரத்துடன் செயல்படும் தீய குணத்தவர்களிடம் சிக்கி அவதிப்பட்டவர்கள் – இன்னல்படுபவர்கள் பலருண்டு. அப்படி அவதிப்பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் விஷ்ணுபகவான். ஆம். அசுரர்கள், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தார்கள். அவர்களை காக்க விஷ்ணுபகவான், அசுரர்களுடன் போர் செய்தார். அந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நீடித்தது. இதனால் சோர்வுற்ற விஷ்ணுபகவான், ஒய்வு எடுக்க ஒரு இடத்தில் தன் கையில் இருந்த வில்லை பூமியில் ஊன்றி வில்லின் […]

மலர்கள் தருகிற மலர்ச்சியான வாழ்க்கை

நிரஞ்சனா   வாசனை உள்ள இடத்தில்தான் தெய்வம் இருக்கும்.வாசமான மலர்களை கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால்,அவ்வாறு அர்ச்சனை செய்தோருக்கு நல்லவை யாவும் வசியம் ஆகும்.வாழ்க்கையில் நல்ல மாற்றமும் ஏற்றமும் ஏற்படும். பீமன், தாமரை மலரை தேடி போனபோதுதான் பீமனுக்கு ஸ்ரீஅனுமானின் தரிசனமும் அருளும் கிடைத்தது. ஸ்ரீஅனுமானின் அருளை பெற்ற பிறகுதான் காட்டில் இருந்த பாண்டவ சகோதரர்கள், நாட்டை ஆளும் யோகத்தை பெற்றார்கள். இவ்வாறாக மலர்கள் ஒருவரின் வாழ்வை நல்ல விதத்தில் மாற்றும் சக்தி படைத்தது. மலர்களுக்கு மருத்துவ குணமும் […]

நோய் தீர்த்த காக்கை

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு   பகுதி – 16 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்   நிரஞ்சனா டாக்டர் பிள்ளையின் நோயை ஷீரடி சாய்பாபா குணப்படுத்திய அற்புதம் பற்றி இந்த பகுதியில் சொல்கிறேன். மனிதனாக பிறந்தால் கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த கர்ம பயன் பெரிய அளவில் பாதகத்தை கொடுக்காமல் இருக்க இறைவனை நம்ப வேண்டும். அந்த இறைவன்தான் நம் ஷீரடி சாய்பாபா. நடமாடும் தெய்வமாக இருந்த நம் ஷீரடி சாய்பாபாவை ஆரம்பத்தில் […]

நல்ல வாழ்க்கை தரும் பாண்டுரங்கா திருநாமம்

நிரஞ்சனா இறைவனுடைய நாமத்தை தினமும் உச்சரிக்க வேண்டுமா? அப்படி உச்சரித்தால் இறைவன் நம்மை வந்து பார்ப்பாரா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. மக்கள் அதிகம் இருக்கும் கூட்டத்தில் “சீனிவாசா” என்று அழைத்தால், அந்த கூட்டத்தில் தன்னை தான் அழைக்கிறார்களோ என்று, “சீனிவாசன்” என்ற பெயர் உள்ள அத்தனை பேரும் திரும்பி பார்ப்பார்கள். அதுபோல் இறைவனும் யார் நம்மை அழைப்பது என பார்ப்பார். அதனால்தான் மனிதர்களுக்கு இறைவனுடைய பெயர் வைக்கிறார்கள். புண்ணியம் தேடி தந்த ஹரிதாசர்   பண்டரிபுரத்தில் […]

ஒலி தரும் ஒளிமையமான வாழ்க்கை

Written by Niranjana ஒலிக்கு சக்தி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது இறைவனுடைய பெயரை வைக்க வலியுறுத்தினார்கள். இறைவனின் பெயரை கொண்ட குழந்தையை பெயர் சொல்லி அழைக்கும்போது இறைவனின் நாமத்தை சொல்கிறோம். இறைவனுடய பெயர் நல்ல ஒசைகொண்டது. அந்த ஓசை இல்லத்தில் ஒலிக்க ஒலிக்க சுபிக்ஷம் ஏற்படும். ‘ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே” என்ற துர்கைக்கு உகந்த மந்திரத்தை […]

நினைத்ததை நிறைவேற்றி தரும் சூலக்கல் மாரியம்மன்

நிரஞ்சனா கோயம்புத்தூரில் அமைந்துள்ளது சூலக்கல் மாரியம்மன் கோவில். இறைவன் எப்படி காட்சி தருவார் – எவ்வாறு காட்சி தருவார் என்று யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் இறைவன் தம் பிள்ளையாகவே நினைத்து அவர்களுக்கும் தன் அருள்பார்வையை செலுத்த வருடத்திற்கு ஒருமுறை வீதி உலா வருகிறார். இதனால் தம் பிள்ளைகளான எல்லா ஜீவராசிகளுக்கும் கடவுள் தரிசனம் தருகிறார். இறைவனின் அருள்பார்வை பெற்றவர்கள் பெரிய பாதகத்தில் இருந்து தப்பிக்கிறார்கள். பெற்றோரை மதிக்காத பிள்ளைகளை எந்த பெற்றொரும் வெறுத்து […]

சென்னையில் விநாயகருக்கு திருமணம் நடந்த இடம்

நிரஞ்சனா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில், சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.: ஒருவரின் வாழ்நாளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட இன்னாரால்தான் முடியும் என்று இறைவன் எழுதிவைத்தால் அப்படிதான் நடக்கும். இதை குருபகவானே அனுபவத்தில் உணர்ந்தார். ஆம். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால், தன்னுடைய மகனான பாரத்வாஜ மகரிஷி, கரிக்குருவியின் (வலியன்) என்கிற  பறவை உருவத்தில் பிறந்திருக்கிறானே என்று மனம் […]

சதுரகிரியில் இரட்டை லிங்கமாக காட்சி தரும் ஸ்ரீசங்கரநாராயணன்

நிரஞ்சனா நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று மனிதர்களுக்குள் வேண்டுமானால் போட்டி ஏற்படும். ஆனால் தெய்வங்களுக்கோ அத்தகைய போட்டி – பொறாமை கிடையாது. ஹரியும் சிவனும் ஒன்றே என பல சமயங்களில் நிரூபித்து உள்ளனர். சிவபெருமானை வணங்குபவர்களுக்கு அதற்குரிய ஒரு பலனும், ஸ்ரீமந் நாராயணனை வணங்குபவர்களுக்கு அதற்குரிய ஒரு பலனும் கிடைக்கிறது. ஆனால் சங்கரரையும் நாராயணனையும் ஒன்றாக நினைத்து, ஸ்ரீசங்கரநாராயணனாக வணங்கும் பொழுது பன்மடங்கு பலன்கள் கிடைக்கிறது. ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார். அதனால் ஸ்ரீவிஷ்ணு […]

சாய்பாபா வாக்கின் மகிமை

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 15 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்   நிரஞ்சனா மகான் ஷீரடி சாய்பாபாவின் பேச்சை கேளாமல் வெளியூர் சென்ற மகல்சபாதி அனுபவித்த சம்பவம் என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் தெரிந்துக்கொள்ள இருக்கிறோம். மகல்சபாதி, புராணகதைகளை சொல்வதில் திறமையானவர். அவர், புராணகதைகளை சொல்ல ஆரம்பித்தால் கேட்பவர்களுக்கு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல மனம் வராது. அந்த அளவில் சிறப்பாக சொல்வார்.  ஒருநாள், அஸ்தினாபுரத்தில் இருந்து ஹர்தே என்பவர் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech