Tuesday 26th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: ஆன்மிக பரிகாரங்கள்

திருப்பம் தரும் நட்சத்திர மரங்கள்

நிரஞ்சனா மரம் வளர்ப்போம் வளம் பெருவோம் என்று கூறுவார்கள். மரம் வளர்ந்தால் எப்படி வளம் கிடைக்கும்.? மரம் இருந்தால்தான் மழை வரும். நல்ல காற்று கிடைக்கும். அத்துடன் வீட்டுக்கு தேவையான ஜன்னல்கள், கதவுகள் போன்றவையும், காகிதங்கள் போன்றவையும் அதிகபட்சம் மரங்களால்தான் கிடைக்கிறது. இப்படி, மரங்கள் நம் வாழ்வோடு ஒன்றிருக்கிறது. அத்துடன் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை வளர்த்தால் நிச்சயம் நம் வாழ்வில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். நமக்கு உகந்த நட்சத்திர மரத்தை வளர்த்தால் அது எப்படி […]

ஸ்ரீஇராகவேந்திரரின் ஆத்மாவுடன் பேசிய சர் தாமஸ் மன்றோ

நிரஞ்சனா ஆத்மாவுக்கு சக்தி இருக்கிறதா என்றால், உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவில்லாதது. அதிலும் சித்தர்கள், மகான்கள், ஞானிகளின் புனித ஆத்மாக்கள் மகிமை நிறைந்தவை. ஆண்டாண்டு காலங்கள் இந்த பூலோகத்தில் நிலைத்து இருக்கும். மகான்களும், சித்தர்களும் உயிரோடு இருக்கும் போது, தியானம் செய்து தங்களின் ஆத்மாவை அமைதியாகவும் சக்தி வாய்ந்ததாகவும் வைத்திருப்பார்கள். அவர்களின் உடல் அழிந்தாலும் கூட அழிவில்லாத ஆத்ம ரூபமாக நம்மை சுற்றிதான் அவர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீஇராகவேந்திரரின் ஆத்மாவுடன் பேசிய சர் தாமஸ் மன்றோ  கி.பி 19- […]

ஐஸ்வர்யங்கள் தரும் கோமாதா

நிரஞ்சனா பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.  எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும்  ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது.  மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை […]

தன் பக்தனை காப்பாற்றிய பாபா

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி –19 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்   நிரஞ்சனா   ஒரு பெண் என்றும் பாராமல் சபையில் சேலை உருவப்பட்டு அவமானத்துக்கு ஆளானா திரௌபதி, தன் மானத்தை காக்க ’கிருஷ்ணா’ என்று கதறி அழைத்தாள். அந்த அபாய குரலுக்கு அருள் புரிந்தான் – மானம் காத்தான் கண்ணன். அதுபோல பகவான் ஸ்ரீசாய்பாபா, தன் பக்தர்களை என்றென்றும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார். பாபாவை நம்பிக்கையுடன் ஒருமுறை வணங்கினாலே அவருடைய செல்லபிள்ளையாகிவிடுகிறோம். எந்த ஆபத்து […]

பக்தர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும் வெக்காளியம்மன்

நிரஞ்சனா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அல்லது மலைக்கோட்டையில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து உறையூர் வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஏறி, நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்கி, பிறகு இங்கிருந்து சிறிது தூரத்தில் மேற்கு நோக்கி நடந்தால் வெக்காளியம்மன் கோவிலை அடையலாம். அன்னை சக்திதேவி தாயாக இருந்து தன் பக்தர்களை காக்கிறாள். அதுபோலேவே, வெக்காளியம்மனாக வீற்றிருக்கும் அம்பாள், தன் நலனைவிட அவளின் பிள்ளைகளான நமது நலனே பெரியேதேன நமக்கு நல்லவழி காட்டுவதே கடமை என, […]

வெளிச்சம் இல்லாத இடத்தில் சாப்பிடக் கூடாது:சாஸ்திரம் தரும் விளக்கம் என்ன?

Written by Niranjana  நல்ல வெளிச்சம் இல்லாத இடத்திலும், இருட்டாக  இருக்கிறபோதும் உணவு எதுவும் சாப்பிடக் கூடாது என்பது சாஸ்திர விதிமுறை. இன்று, விஞ்ஞானம் என்று சொல்வதை அன்றைய நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்றார்கள். வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் சாப்பிடும் போது, உணவில் ஏதேனும் பூச்சிகள் விழுந்தால் அதை தெரியாமல் நாம் சாப்பிட்டுவிடக் கூடும். இதனால் சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். ஆகவே இருளில் சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் […]

தீராத வினைகளை தீர்க்கும் விநாயகர்

நிரஞ்சா கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் பிள்ளையாருக்கு கோவில் இருக்கிறது. அவருடைய பெயர் வராஹப் பிள்ளையார் என்று முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது “கரும்பாயிரப் பிள்ளையார்“ என்று பெயர் மாற்றபட்டு உள்ளது. எண்கணித சாஸ்திரத்தை பார்த்து மாற்றினார்களா? என்றால் இல்லை. பிறகு எதற்காக மாற்றினார்கள்? வராஹப் பிள்ளையார் கோவில் அருகே ஒரு வண்டியில் கரும்பை ஏற்றி கொண்டு கரும்பு வியபாரி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிறுவன் அந்த வண்டியை நிறுத்தி “ஒரு கரும்பு […]

விஷத்தை முறியடித்த முகுந்தன்

நிரஞ்சனா  பூ நாயகன் என்றோரு அரசர். இவருடைய மனைவி சந்திரமுகி. இந்த தம்பதியினருக்கு பிறந்தவள்தான் மீரா. ஒருநாள்,  கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, நான்கு வயது மீரா, தன் தோழிகளுடன் ஆடிப் பாடிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் மகான் ரூபகோஸ்வாமி, அரண்மனைக்கு வந்தார். அவர் கையில்  கிருஷ்ணரின் விக்கிரகம் இருந்தது. அதை கண்ட குழந்தை மீரா, “இது என்ன பொம்மை.?“ என்றாள் அந்த மகானிடம். “இது பொம்மை அல்ல குழந்தாய், கிருஷ்ண பரமாத்மா.” என்றார். “கிருஷ்ணனா..? அவர் யார்.?” […]

அனுகிரகம் தரும் சக்தி தேவி கதைகள்

நிரஞ்சனா சக்திதேவி தன் பக்தர்களை தம்முடைய குழந்தையாக பாவிக்கிறாள். அதனால் இந்த பூலோகத்தில் தோன்றி தன் பக்தர்களின் கஷ்டத்தை தீர்க்க அற்புதங்களை நிகழ்த்துகிறாள். அம்பாள், ஒவ்வொரு காரணத்தால் பல பெயர்களில் உருவாகி இருக்கிறாள். இப்போது நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன் உருவான சம்பவமும், போற்றதக்க வாழ்வை தரும் உச்சிகாளி அம்மன் உருவான விதமும். இந்த சக்திதேவியின் அற்புதத்தை படித்தாலே நிச்சயம் படிப்பவர்களின் வாழ்வில் நல்ல அற்புதங்கள் ஏற்படும். நல்ல விஷயங்களை படிக்க படிக்க […]

கண்ணப்ப நாயனார்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 16 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா திண்ணன் சிவலிங்கத்தை பார்த்ததும் காணாமல் போன தாய் -தந்தையை பார்த்தது போல கட்டிபிடித்துகொண்டான். அப்படியே பல மணிநேரம் கண்ணீருடன் இருந்தான். திண்ணனுடன் வந்த நாணனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. பசி வேறு அவன் வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது. “திண்ணா வா போகலாம்” என்றான் நாணன். “நாம் சென்றுவிட்டால் இந்த குடுமிசாமி எப்படி தனியாக இருப்பார்.? குடுமி சாமியும் பசியாக இருப்பாரா? அவருக்கும் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech