Thursday 28th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: ஆன்மிகம்

குரு பார்வை

நிரஞ்சனா கும்பகோணம் மன்னர்குடி நெடுஞ்சாலையில் 17கி.மீ தூரத்தில் உள்ளது ஆலங்குடி குருபகவான் ஆலயம். ஈசன் ஆபத்சகாயராகவும், அம்பிகை ஏலவார்குழலியாக இங்கே  காட்சி தருகிறார்கள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அமுதோடு ஆலமாகிய நஞ்சு வந்தது. அதை ஈசன் இன்முகத்துடன் பருகி உலகத்தையே காத்தார். அதனாலேயே ஆபத்சகாயர் என்றும் ஆலகால விஷத்தை சாப்பிட்டதால் ஆலங்குடி என்ற பெயர் வந்தது. காளமேகப் புலவர் பாடிய ஓரு பாடல் – “ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை  ஆலங்குடியான் என்று ஆர்சொன்னார்-ஆலம் குடியானே […]

மன நோயாளியாக மாற இருந்த தன் பக்தனை பக்குவப்படுத்திய பாபா

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 8 முந்தைய பகுதிக்கு செல்ல…  நிரஞ்சனா   ரேகே ஷீரடியை நோக்கி சென்றார்.சாய்பாபாவை பார்த்தவுடன் ரேகே  மனதில்  ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. ரேகேவை பார்த்தவுடன், “வா ரேகே… நீ வருவாய் என்று தெரியும். உன்ன விஷ்ணு பகவானே என்னிடம் அனுப்பியிருக்கிறார். வா என் அருகில். வந்து உட்கார்.“ என்றார் சாய்பாபா. நான் யார் என்பது பாபாவுக்கு எப்படி தெரிந்தது? பகவான் என் கனவில் சொல்லியது இவருக்கு எப்படி தெரியும். என்கிற கேள்விகளுடன் […]

தொழில் வளர்ச்சி தரும் காரைக்குடி கொப்புடைநாயகி அம்மன்

நிரஞ்சனா கொப்புடை நாயகி அம்மன் காரைக்குடிப் பகுதியில் திகழும் கல்லுக்கட்டி என்ற ஊரில் வாழ்கிறாள். இந்த அம்மனை ஸ்ரீ காட்டம்மன் என்ற ஆலயத்தில் இருந்து எடுத்து வந்து பூஜை செய்தார்கள். ஒருநாள் முகலாயர் படையெடுத்த போது, எங்கே அம்மனுக்கு அவர்களால் பங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி, வேப்பமரத்தடின் கீழே வைத்து வழிபாடு செய்தார்கள். காலங்கள் மாறியதால் இந்த அம்மனை வணங்க மறந்தார்கள் அந்த பகுதி மக்கள்.. இந்த அம்மனுக்கு சரியான பூஜை இல்லாமல் வெறும் சிலையாகவே காட்சி […]

பச்சைக்கந்த சுவாமிகள் செய்த அற்புதம்

நிரஞ்சனா சேலம் ஆத்தூர் சாலையில் உள்ள வாழப்பாடியிலிருந்து 5கி.மீ தொலைவில்  பேளூர் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில்  வெள்ளூர் என்று அழைக்கப்பட்ட இடத்தை இன்று பேளூர் என்று அழைக்கிறோம். பதரிகா ஆசிரமத்தில் இருக்கின்ற முனிவர்கள் வேத சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். இருந்தாலும் மழையில்லாத காரணத்தால் வறட்சி ஏற்பட்டது. உண்ண உணவு இல்லாமல் தவித்தார்கள். இதனால் வசிஷ்டரிடம் முறையிட்டார்கள். இவரின் வழிகாட்டுதலில் கொங்கு நாட்டில் வெள்ளாறு பாய்ந்து வளப்படுத்தும்  இடத்திற்கு குடிவந்தார்கள். அந்த நகருக்கு வெள்ளூர் என்று பெயர் வைத்து […]

வீரனாக சென்று அரசரின் துயரம் தீர்த்த திருவட்டாறு ஆதிகேசவர்

நிரஞ்சனா கன்னியாகுமாரி மாவட்டத்தில் தக்கலையிலிருந்து குலசேகரம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில். கேசன் என்ற அசுரன் தனது சகோதரியுடன் தவம் செய்து பிரம்மனிடம் இருந்து சாகாவரம் பெற்றான். வரம் பெற்றவர்கள் சும்மா இருப்பார்களா?. கிடைத்த வரத்தை சோதித்து பார்க்க, தான் உணடு தன் வேலையுண்டு என்று இருக்கும் முனிவர்களிடம் வீணாக சென்று சண்டைபோட்டார்கள். அசுரர்களிடம் மோத முடியாத முனிவர்கள் பெருமாளிடம் முறையிட்டார்கள். முனிவர்களின் மனக்கவலையை தீர்க்க பெருமாள் பூலோகத்திற்கு வந்து அசுரன் கேசனை […]

தன் பக்தனை பாபாவின் பக்தனாக்கிய பெருமாள்

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 7   முந்தைய பகுதிக்கு செல்ல… நிரஞ்சனா ரஷ்யாவுக்கும்  ஜப்பானுக்கும் கடுமையாக போர் நடந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் கடும் புயல் வீசியது.. இதனால் மூன்று நீராவிக் கப்பல் தவிர மற்ற எல்லா கப்பலும் புயலில் சிக்கி கடலுக்குள் முழ்கியது. எங்கு தன்னுடைய கப்பலும் கடலுக்குள் மூழ்கிவிடுமோ என்று பயந்தார் அந்த கப்பலின் கேப்டன் ஜஹாங்கீர்ஜி ப்ராமி தர்வாலா. இவர் சிறந்த பாபா பக்தர். எந்த நேரமும் மகான் […]

இறைவனுக்கே வேடிக்கை காட்டிய சுந்தரர்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி –  6       நிரஞ்சனா சென்ற பகுதியில்….. முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும்   சங்கிலியாருக்கு ஏற்ற நல்ல மணமகனை தேட வேண்டும் என்ற தீவிர முயற்சி எடுத்தார் தந்தை. சங்கிலியாரை பெண் பார்த்து விட்டு சென்றாலே மாப்பிள்ளை வீட்டாருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படும். சில சமயத்தில் உயிர் பலி கூட நடந்துவிடும். இதனால் சங்கிலியார் இராசியில்லாதவள் என்று ஊர் மக்கள் பேச ஆரம்பித்தார்கள்.    “எல்லாம் நல்லதுக்குதான். இந்த நிலையும் […]

ஆஞ்சநேயருக்கு அருளிய முருகப் பெருமான்

நிரஞ்சனா கோயம்புத்தூர் நகரின்  மேற்கில் 15.கி.மீ தூரத்தில் இத்திருக் கோவில் அமைந்து உள்ளது. சூரபத்மனும் அவனுடைய சகோதரர்களும் பல தவங்கள் செய்து பல வரங்களை பெற்றார்கள். வரங்களை பெற்ற பிறகு முனிவர்களை கொடுமைப்படுத்தினார்கள். பொறுத்து பார்த்து நிம்மதி இழந்த முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். “பொறுமையாக இருங்கள். என் சக்தியால் பிறப்பெடுக்கும் முருகன், சூரனை அழிப்பான். அதுவரை நீங்கள் பாதுகாப்பாக மருதமலையில் தங்கி இருங்கள்.“ என்றார் சிவன். இறைவன் அருளியது போல சூரனை அழித்து மருதமலையில் இருந்த முனிவர்களை […]

குருவின் சதி தப்பித்த ஸ்ரீராமானுஜர்

நிரஞ்சனா ஸ்ரீ ராமானுஜர், குரு சேவையில் பிரியம் கொண்டவர். தன் குரு யாதவப் பிரகாசருக்கு அன்று எண்ணைய் தேய்த்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் குரு தன் சிஷ்யர்களின் ஒரு கேள்விக்கு சரியான உதாரணமாக கூறாமல் அறுவெறுப்பான உதாரணத்தை தன் சீடர்களுக்கு உபதேசித்துவிட்டார். நெற்றி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பது போல, குருவாக இருந்தாலும் இப்படி அருவருக்கத்தக்க உபதேசம் செய்தால் எப்படி சகித்து கொண்டு இருப்பது? என்ற எண்ணத்தில் சரியான தெய்வீகமான பதிலை கூறி குருவையே மிஞ்சினார் […]

பராசக்திக்கே துன்பம் தந்த செய்வினை

எந்த யோகத்தையும் அனுபவிக்கவிடாத செய்வினை பகுதி – 2 முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும் நிரஞ்சனா துஷ்ட மந்திரங்களை உச்சரித்து அரசருக்கு செய்வினை செய்தார் விஷ்ணுகுப்தர். இதனால் அரசருக்கு திடீரென உடல்நலம் பாதிப்படைந்தது. எத்தனையோ வைத்தியர்கள் வந்து அரசருக்கு சிகிச்சை செய்தும் அரசர் தனநன்தன் உடல்நலம் தேரவில்லை. மேலும் மேலும் உடல்நிலை மோசமாக போய்க் கொண்டே இருந்தது. கடைசியில் மருத்துவர்களால் அரசர் கைவிடப்பட்டார். நாட்டை சரியாக யாருக்கும் பாதுகாக்க தெரியாததால், விஷ்ணுகுப்தன், அறிவு தந்திரத்தாலும் மாந்தீரிக சக்தியாலும் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech