Thursday 28th November 2024

தலைப்புச் செய்தி :

கனமழை : புதுச்சேரி..காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *|
Category archives for: ஆன்மிகம்

பேர் சொல்லும் பிள்ளை; வரம் தரும் கர்ப்பரஷாம்பிகை

நிரஞ்சனா இத்திருக்கருகாவூர்- திருக்களாவூர் மாயவரம் திருக்குடந்தை போகும் பாதையில் பாபநாசத்தில் உள்ளது.   மாதவீச்வரர் உருவான சம்பவம் முல்லைகாடாக இருந்தது இந்த இடம். முல்லை காட்டில் மணலால் சுயம்புவாக தோன்றியது ஓர் லிங்கம். இந்த லிங்கத்தை சுற்றி முல்லைகொடிகள் படர்ந்து அந்த மணல் லிங்கத்தையே மறைத்திருந்தது. இதனால் இன்றும் அந்த மணல் லிஙகத்தில் முல்லைகொடியின் அடையாளம் தெரியும். இப்படி பல யுகங்களுக்கு முன்பே தோன்றிய இந்த லிங்கத்தின் பெயர் முல்லைவனநாதர் என்றும் மாதவீச்வரர் என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பரஷாம்பிகை […]

குட்டிசாத்தான் வசியம் செய்தவனை திருத்திய பாபா

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு  பகுதி – 11   சென்ற பகுதியை படிக்க  நிரஞ்சனா  தத்தமஹராஜ். இவர் பல சித்து வேலைகளை செய்து மக்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார். இவரை சந்திக்கவரும் பக்தர்களுக்கு பாலால் தயாரித்த இனிப்பை மாயஜாலத்தில் வரவழைத்து தருவார். இதை பார்த்த குசபாவ் என்ற இளைஞன் இந்த மாயஜால வித்தையை கற்க விரும்பி தத்தமஹராஜ் என்கிற அந்த மந்திரவாதியிடம் சிஷ்யராக சேர்ந்தார். குட்டிசாத்தானை வசியம் செய்த இரும்பு வளையத்தை(காப்பு) குசபாவின் கையில் அணிவித்தார் மந்திரவாதி. சில மாதங்கள் கழித்து […]

முருகனை வணங்கினால் நோய் இல்லை;சிவன்மலை – குமரப்பெருமான்

நிரஞ்சனா காங்கேயம்- திருப்பூர் நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தொலைவில் இருக்கிறது சிவன்மலை குமரப்பெருமான் ஆலயம். சிவன்மலை உருவான கதை தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன். இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு என உலோகங்களால் மிக பெரிய கோட்டைகளை கட்டினார்கள். இந்த கோட்டை எந்த நேரத்திலும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் விமானம் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. கோட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போதும் அசுர […]

வம்சத்தை வாட்டும் சாபத்திற்கு பரிகார கோயில்

நிரஞ்சனா நம் முன்னோர்களுக்கு சாபம் ஏற்பட்டு இருந்தால் அவர்களின் வம்சத்தில் பிறப்பவர்களுக்கு சாபம் தொடரும். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு கங்காதரேஸ்வர் ஆலயம் இதற்கு பரிகார கோயிலாக இருக்கிறது. இஷ்வாகு வம்சத்தை சார்ந்த பரத கண்டத்தையாண்ட பகீரதன் என்ற அரசர், நீதியை நிலைநாட்டி பல நன்மைகளை தன் நாட்டு மக்களுக்கு செய்து வந்தார். பகீரதனால் வந்த கங்கை நதி இந்த பகீரதன்தான் கங்கை, பூமிக்கு வர காரணமாய் இருந்தவர். முன்னொரு சமயத்தில் சகரன் என்ற அரசர் அசுவமேத […]

வீரசிவாஜி வம்சத்தின் இன்னல்களை தீர்த்த தஞ்சாவூர் பங்காரு காமாட்சி.

நிரஞ்சனா ஒருசமயம் பிரம்மன் காஞ்சி தலத்திற்கு வந்து காமாட்சி  அம்மனை தரிசிக்க சென்றார். அம்மனை தரிசிக்க வேண்டும் என்ற அவசரத்தில் காமாட்க்ஷி ஆலயத்தில் இருக்கும் காயத்தரி மண்டபத்தை மிதித்து விடுகிறார். இதனால் பிரம்மனின் கண்பார்வை குறைந்துவிடுகிறது. திரும்ப சரியான பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்று சரஸ்வதிதேவியிடம் கேட்டார். “மறுபடியும் காஞ்சி தலத்திற்கே சென்று கண்பார்வை கிடைக்க வேண்டுங்கள். நிச்சயம் காமாட்க்ஷி மனம் இறங்கி உங்களுக்கு கண் பார்வையை கொடுப்பார்.” என்றாள் சரஸ்வதி. சரஸ்வதி தேவி […]

தொண்டனுக்காக தலைநிமிர்ந்த இறைவன்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 10   சென்ற பகுதிக்கு செல்ல…   நிரஞ்சனா கும்பகோணத்துக்கு வடமேற்கு பதினான்கு மைல் தொலைவில் இருக்கிறது திருப்பனந்தாள் தாடகேச்சுரம் திருக்கோயில். பனைமரத்தின அடியில் இறைவன் தோன்றியதால் திருப்பனந்தாள் என்ற பெயர் ஏற்பட்டது. தாடகை என்னும் சிவபக்தைக்காக இறைவன் தன் கோயிலுக்கு தாடகேச்சுரம் என்கிற பெயரை கொண்டார். அந்த சம்பவத்தை அறிந்துக்கொள்வோம். இந்த திருப்பனந்தாள் ஆலயத்திற்கு தினமும் தாடகை என்கிற சிவபக்தை இறைவனுக்கு பூமாலை சாத்துவதை வழிபாடாக வைத்திருந்தாள். ஒருநாள் […]

தன்னுடைய கோயிலுக்கு தானே பெயர் வைத்தான் முருகன்.திருப்போரூர் கந்தசாமிகோயில்

நிரஞ்சனா செங்கல்பட்டு மாவட்டம் சென்னை மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில். ஒருசமயம் விருத்தாசலத்தில் சிதம்பர சுவாமிகள் என்பவர் சமாதி நிலையில் தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரின் தவத்தில் முருகபெருமான் காட்சி தந்தார். திடுக்கிட்டு கண் திறந்து பார்த்த சிதம்பர சுவாமிகள், “இதற்கு என்ன காரணம்.? கனவில் முருகப் பெருமான் வந்தாரே. தூக்கத்தில்தானே கனவு வரும். நாம் தியானம்தானே செய்தோம். அப்படியானால் என் மனம் முருகனை நினைத்து தியானிக்காமல் அமைதியாக உறங்கியதா?.” என்று […]

உடல் நலமும் – உயிர் நலமும் தரும் மயிலை கபாலீஸ்வரர் கோயில்

நிரஞ்சனா மயிலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கு காரணமே கற்பகவல்லி அம்பிகையால்தான். அன்னை மயிலாக உருவெடுத்து சிவபெருமானை நினைத்து தவம் செய்தாள். அதனால் இந்த பகுதிக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. இத்திருக்கோயிலுக்கு  உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால் உடல்நலம் இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்தால் நலம் பெறுவார்கள். நம்முடைய எண்ணங்களை வாய் திறந்து ஈசனிடம் சொல்ல வேண்டியதில்லை. மனதில் நினைத்தாலே நிறைவேறும் என்கிறார் சேக்கிழார். நாம் நம்முடைய வேண்டுதலை மனதில் நினைத்தப்படி இந்த கோயிலுக்குள் நுழைந்தாலே நினைத்தது நிறைவேறும். […]

கல்வி ஞானம் தரும் வடிவுடையம்மன்

நிரஞ்சனா சென்னை மாநகரையொட்டி உள்ள ஊர் திருவொற்றியூர். இங்கு இருக்கும் இறைவனின் பெயர்  தியாகராசர். அன்னையின் பெயர் வடிவுடை அம்மன். ஒரு சமயம் தச்சனின் யாகத்தீயில் விழுந்து உயிரைவிட்டாள் பராசக்தி. அவள் உடல் பாதி கருகியும் பாதி கருகாமலும் இருந்தது. தேவியின் உடலை பார்த்து சினம் கொண்ட சிவன், அன்னையின் உடலை தன் தோலில் போட்டு கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். இதை கண்ட ஸ்ரீமந் நாராயணன் சிவனின் ஆவேச நடனத்தை கண்டு பதறினார். இதனால் தனது சக்கரப் […]

வறுமை வழிந்த வீட்டில் குபேரன் குடிபுகுந்தான்: குங்குலியக்கலய நாயனார் வரலாறு

  அறுபத்து மூவர் வரலாறு  பகுதி 9   நிரஞ்சனா சென்ற பகுதியை படிக்க திருக்கடவூரில் கலயனார் என்பவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த சிவபக்தர். அதனாலேயே தினமும் சிவபெருமான் ஆலயத்தில் நாள் தவறாமல் குங்குலிய தூபம் போடுவதை சிவபணியாக கடைபிடித்து வந்தார். கலயனாராக இருந்தவரை ஊர் மக்கள் குங்குலியக்கலயனார் என்று அழைத்தார்கள். தன்னிடம் அன்பாக இருப்பவரிடம் வம்பாக திருவிளையாடல் புரிந்து பக்தியை சோதிப்பது அய்யன் சிவபெருமானுக்கு பிடித்தமான ஒன்று. இதில் குங்குலியக்கலயனார் மட்டும் விதிவிலக்கா என்ன.? அதனால் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech