Sunday 24th November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Category archives for: ஆன்மிகம்

வேண்டுதலை நிறைவேற்றும் சிங்கீஸ்வரர்

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே அவளூர் என்ற இடத்தில் சிங்கீஸ்வரர் கோவில் அருமைந்துள்ளது. வாலாஜாபாத்தில் இருந்து மினி பஸ், ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. ஒரு முறை சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபொழுது, “சிங்கி” என்று அழைக்கப்பட்ட நந்தி தேவர், அந்த ஆனந்த கூத்தனின் நடனத்திற்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு மிருதங்கத்தை இசைத்துக் கொண்டிருந்த நந்தி தேவர் தொழில்மீது இருந்த பக்தியின் காரணமாக கண்ணை மூடிக்கொண்டு […]

வளம் தரும் கரிவரதராஜப்பெருமாள்

Written by Niranjana கரிவரதராஜப்பெருமாள் கோயில், ஆறகழூர் – சேலம் மாவட்டம். ஒருவருக்கு பண வசதி வந்துவிட்டால் பழைய நிலையை மறந்து புதிய வாழ்க்கைகேற்ப மாறுவார்கள். “நான் உனக்கு நிறைய உதவிகள் செய்தேன்” என்று சிலர் அந்த நபர்களிடம் சொன்னால், “உண்மைதான்” என்று மனம் ஒப்புக்கொண்டாலும் வாய் ஒப்புகொள்ளாது. இந்த மனநிலையில்தான் துரியோதனனும் இருந்தான். “நன்றி மறக்க கூடாது என்று என் மனம் சொன்னாலும், என் செயல்கள் நன்றி மறந்தவனாகவே அமைந்துவிடுகிறது” என்று வருந்தினானாம் துரியோதனன். மனம் […]

செல்வங்களை அள்ளித் தரும் ஸ்ரீசெல்லியம்மன்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், மணலூர் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது வீரமாங்குடி. இங்கே வடக்குப் பார்த்த கோயிலில் எட்டுக் கரங்களுடன், காட்சி தருகிறாள் ஸ்ரீசெல்லியம்மன். தஞ்சகாசுரனின் மகன்களான தண்டகன், தாரகன், தஞ்சையன் ஆகிய மூவரும் தேவர்களைத் துன்புறுத்தினர். இதைப் பொறுக்கமுடியாத தேவர்கள் ஓடி வந்து, கோடியம்மனிடம் முறையிட்டனர். தன்னுடைய ஆறு சகோதரிகளுடன் கடும் உக்கிரத்துடன் புறப்பட்டுச் சென்ற கோடியம்மன், வெண்ணாற்றங்கரையில் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை […]

செவ்வாய், வெள்ளி ராகுகாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஏன்?

Written by NIRANJANA நவகிரகங்களில் பலம் வாய்ந்தது இராகுவும், கேதுவும்.   ஜோதிட கணிப்புக்கு உரிய ஒன்பது கிரகங்களில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் இராசி மண்டலங்களில் சொந்தமான வீடு உண்டு. இதில், இராகு-கேதுக்கு தனியாக வீடு என்பது இல்லை. அதுபோல, கிழமை என்று எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிழமைக்கு உரியதாக இருக்கிறது. இதிலும், இராகு- கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், இராகு-கேதுவின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு நாட்களிலும் […]

அருளும், பொருளும் தரும் ஈச்சனாரி விநாயகர்!

கோவையில் இருந்து பொள்ளாச்சி போகும் சாலையில்- சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில், ஈச்சனாரி என்னும் இடத்தில் இருக்கிறது இந்த ஈச்சனாரி விநாயகர் ஆலயம். இந்த கோயிலின் தலவரலாறு மிகவும் சுவையானது. கோவையில் புகழ்பெற்ற இன்னொரு கோயிலான பேரூர் பட்டீஸ்வரசாமி கோயிலுக்காக செய்யப்பட்ட விக்ரகம் இது. ஆறு அடி உயரம், மூன்று அடி பருமனும் உள்ளது. மதுரையில் இருந்து ஒரு மாட்டு வண்டியில் விக்ரகத்தை ஏற்றி வந்தனர். வண்டியின் அச்சு இப்போது கோயில் இருக்கும் இடத்திற்கு அருகே […]

திருமலை மகத்துவம்

Written by Niranjana ஆகாசராஜன் என்றொரு அரசன். அவர் ஒரு சமயம் நகர்வலம் வரும் போது  தாமரை குளத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று, தாமரை மலரில் படுத்தப்படி அரசரை பார்த்தவுடன் சிரித்தது.  அக்குழந்தையை கண்டு மகிழ்ந்த அரசர், “இது யாருடைய குழந்தை.? தெய்வீகமான முகம். லஷ்மி கடாச்சமாக குழந்தை திகழ்கிறதே“ என்று கூறினார். ஆகாசராஜாவுக்கு தெரியாது அந்த குழந்தை உண்மையிலேயே ஸ்ரீமகாலஷ்மிதான் என்று. காவலர்களை அனுப்பி இந்த குழந்தையை உரிய பெற்றோர் யார் என்று தேடும்படி […]

பெருமாள் திருவல்லிகேணிக்கு வந்த வரலாறு!

Written by Niranjana சென்னைய திருவல்லிக்கேணியில் மெரீனா கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது பார்த்தசாரதி திருக்கோயில். பெருமாள் திருவல்லிகேணிக்கு வந்த வரலாறு துண்டீரன் என்ற நாட்டில் சுமதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். இவ்வரசன் பெருமாளின் தீவிர பக்தன். பெருமாள், பாரதப்போரில் தேரோட்டியாகப் பணியாற்றியபோது இருந்த உருவத்தை பார்க்க வேண்டும் என்று ஆவல் அரசனுக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தை ஆத்ரேய முனிவரிடம் கூறினார். “அரசனே…நீயே சிறந்த விஷ்ணு பக்தன். நீ விரும்பியபடி உனக்கு அவர் […]

கிரகதோஷத்தை நீக்கும் தசாவதார கோவில்

Written by Niranjana  திருச்சி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது அருள்மிகு தசாவதாரக் கோயில். பெரியவர்களின் சொல்லே பெருமாளின் சொல்  “பெரியோர்கள் கூறுவது பெருமாள் கூறுவது போல” என்பார்கள். காரணம் அவர்கள், நல்லது-தீயது என பல அனுபவங்களை பெற்று இருப்பார்கள். வெற்றி, தோல்விகளை சந்தித்து இருப்பார்கள். வெற்றிக்கான காரணம் எது?-தோல்விக்கான காரணம் எது என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் தங்களின் அனுபவத்தை எடுத்துச் சொல்லி மற்றவர்களை சரியான பாதையில் செல்ல வழி சொல்வார்கள். அதனால்தான் “பெரியவர்களின் சொல், […]

மண் சட்டியில் சாப்பிடும் பணக்கார சாமி

Written by Niranjana உலகின் பணக்கார கடவுள் யார் என்றால் எளிதாக சொல்லிவிடலாம் ஸ்ரீமந் நாராயணன் என்று. பெருமாள் கோயில்கள் அனைத்தும் மகிமை வாய்ந்தவை என்றாலும், திருப்பதி பெருமாளுக்கு சைவம்-வைணவம் என்ற பாகுபாடு கிடையாது. அவ்வளவு ஏன் பிற மதத்தினர் பலரும் திருப்பதி பெருமாளுக்கு பக்தர்களாக உள்ளனர். காக்கும் தெய்வமான பெருமாளை வழிபட வழிபட வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும். அத்தகைய நல்ல திருப்பம் தந்த தெய்வத்திற்கு நன்றி கடனாக நாம் பணத்தையோ, தங்க ஆபாரணங்களோதான் தர வேண்டும் […]

கணபதி இருக்க கவலையில்லை! இரட்டை பிள்ளையாரின் சிறப்புகள்!

நிரஞ்சனா இரட்டை பிள்ளையாருக்கு தனி மகத்துவம் என்ன? பிள்ளையாரை வணங்கினாலே நன்மைகள் கிடைக்கும். அத்துடன் இரட்டை பிள்ளையாரை வணங்கினால் காரியதடை நீங்கும் என்கிறது புராணம். இரட்டை பிள்ளையார் உருவான கதையை தெரிந்துக்கொண்டாலே, இரட்டை பிள்ளையாரின் மகிமைகளை அறிய முடியும். அசுரர்கள் என்றாலே தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லைதான். அதன்படியே நடந்தான் ஒரு அசுரன். முனிவர்கள் நாட்டின் நலனுக்காக யாகம் செய்தால், அதை தடுத்து விடுவான். அதனால் அந்த அசுரனை “விக்கினன்” என்று பெயர் அழைத்தார்கள். “விக்கினன்”  என்றால் “தடை […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech