Stories written by Niranjana
நிரஞ்சனா அருள்மிகு திருப்பூவணநாதர் சிவகங்கை மாவட்டம். திருப்பூவணம் . குழந்தையின் தேவையை தாய் அறிந்து தருவதுபோல், பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி தருபவர் இறைவன். அதனால்தான் இறைவனை தாயுமானவர் என்று அழைக்கிறோம். நமக்காக இறைவன் இருக்கிறான், இந்த இறைவனுக்காக யார் இருக்கிறார்கள்? நாம்தான் அந்த இறைவனை நம் குழந்தையை போல பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் பொன்னனையாள். தன் நலத்தை விட, தன் ஆசையை விட, இறைவனுக்கு சேவை செய்வதே தன் விருப்பமாகவும் பாக்கியமாகவும் கருத்தினாள் பொன்னனையாள். இவர் […]
Written by Niranjana வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு. குழந்தைக்கு காது குத்துவது, […]
நிரஞ்சனா இறைவன் தன் பக்தனை காக்க எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வருவார். முன்னோர் காலத்தில் ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீநரசிம்மராகவும், ஸ்ரீராமராகவும், ஸ்ரீகிருஷ்ணராகவும் அவதாரம் எடுத்தார். அதுபோல ஒரு அவதாரமே ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் அவதாரம். அது ஏன்? ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்றால் எப்படி இருப்பார்? என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, நாம் பிரகலாதனை பற்றி சுருக்கமாக தெரிந்துக்கொள்வோம். இரண்யனின் மகன் பிரகலாதன். தந்தையே மகனுக்கு வில்லனாக இருந்தார். இந்த வில்லனிடம் இருந்து குழந்தை பிரகலாதனை காக்கும்படி கேட்டுகொண்டார் கருடாழ்வார் ஸ்ரீமந் […]
Written by Niranjana சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்று சிவபெருமானின் முக்கண்கள். ஈசன் தவத்தில் இருந்தபோது அவன் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரே ருத்ராட்ச மரமாக தோன்றியது. சிப்பிக்குள் முத்தாக தோன்றும் மழைதுளியை போல, சிவபெருமானின் முத்து முத்தான கண்ணீரால் தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிபவர்கள் ருத்ரனின் அம்சம். ருத்ராட்சத்தை அணிந்தவர்களின் கண்களில் துன்ப கண்ணீர் வருவதில்லை. ஆபத்துகளில் இருந்து நம்மை தடுத்து காப்பதால் இறைவனை நினைத்து நம் கண்களில் வருவது ஆனந்த கண்ணீர்தான். துன்பம் தூர […]
நிரஞ்சனா நம் இஷ்ட தெய்வத்தை வேண்டி அழைக்கும் முறை எது? இறைவனுக்கு சாஸ்திரமுறைபடி நைவேதியம் தருவது எப்படி? அதுவும் வேத மந்திரங்கள் ஏதும் தெரியாத எளிய பக்தர்கள் எப்படி இறைவனுக்கு நைவேதியம் தருவது? பசியில் உள்ளவர்களுக்கு அன்னதானம் தந்தாலே அது இறைவனுக்கு தந்தது போலதான். இருந்தாலும், உணவு பொருள்களை நமக்காக படைத்த இறைவனுக்கு நம் நன்றியை காணிக்கையாக்கும் விதமாக வசதிக்கேற்ப உணவு தயாரித்து படைத்து, மந்திரங்கள் எதுவும் சொல்ல தெரியாத எளிய பக்தர்களும் இறைவனுக்கு நன்றி சொல்ல […]
நிரஞ்சனா ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி. உலகத்தை உருவாக்கிய இறைவன், தான் படைத்த இந்த பூமியில் தோன்ற விரும்பினார். அதன் காரணம், நம் நலனுக்காகவே. நாம் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள். அதனால்தான் தம்முடைய படைப்பில் உருவான குழந்தைகள் எப்படி இந்த பூமியில் தனியாக வாழும் என்ற எண்ணத்தில் மனிதர்களுடன் ஒருவராக தெய்வங்கள் பூலோகத்தில் தோன்றினார்கள். நமக்கு நடந்த பிரச்னைகளை அனைவரிடமும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் இன்று இல்லை என்றாலும் ஒருநாள் அந்த நபர்கள் […]
நிரஞ்சனா ஒருவருக்கு யார் உதவி இருந்தால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடுவார்கள்.? அரசியல்வாதிகளின் ஆதரவா?அல்லது நோய்களில் இருக்கும் போது மருத்துவர்களின் உதவியா? வழக்கு தொல்லை இருக்கும் போது வழக்கறிஞரின் உதவியா? இவர்களுக்கெல்லாம் மேலே ஒருவர் இருக்கிறார். ஆம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. அந்த தெய்வம் துணை இருந்தால் ஒருவருக்கு எந்த பழி பாவம் வந்தாலும் அவர்களுக்கு தெய்வமே துணை வருவார் பிரச்னையும் விடுப்படும். பாவ-புண்ணியங்களில் நம்பிக்கையில்லாமல் கொடுமை செய்கிற, கொடுமைக்கு துணை போகிறவர்களை எப்போது-எப்படி […]
நிரஞ்சனா அருள்மிகு பாலைவனநாதர் திருக்கோயில், திருப்பாலைத்துறை, பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) உலக வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் வரும். அவை நல்ல திருப்பமாகவும் இருக்கலாம் அல்லது பாதகமாகவும் மாறலாம். வாழ்க்கை என்பது சிறுகதை அல்ல, அது ஒரு பெரிய நாவல் போல. யார் எந்த நேரத்தில் வருவார்கள்? யாரால் பிரச்சனை – திருப்பம் ஏற்படும்? என்று ஆரம்பத்தில் அறிய முடியாது. ஒருவருக்கு நன்மை செய்தாலும் அந்த நன்மைகளை அனுபவித்தவர்கள், நன்மை செய்தவர்களையே சில சமயம் வீழ்த்த நினைப்பார்கள். உட்கார […]
நிரஞ்சனா மனிதர்களின் தேவைகளில் முதலாவதாக விரும்புவது பணம். அதற்கு அடுத்து, நல்ல உடல்நலம். ஆனால் தங்களுக்குகென்று ஏதும் விரும்பாமல் மற்றவர்களின் நலனே தம் நலன் என்று கருதுபவர்கள் யார் என்றால் அவர்கள்தான் மகான்கள். அந்த மகான்கள் விரும்புவது ஒன்றைதான் அதுதான் இறைவழிபாடு. மகிழ்ச்சியாக இருந்தாலும் வருத்தத்தில் இருந்தாலும் இறைவனே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் – வாழ்பவர்கள். இறைவனின் நினைவு மட்டுமே தம் உயிர் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். அப்படிபட்டவர்களுக்கும் சில பிரச்சனைகள் எற்படுகிறது. அதன் காரணம் […]
அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 15 சென்ற பகுதியை படிக்க நிரஞ்சனா வேடனான திண்ணன், தனது வாழ்நாளின் முதல் வேட்டைக்கு புறப்பட தயாரானான். அவனுடன் மற்றவர்களும் வேட்டைக்கு புறப்பட தயாரானார்கள். திண்ணன் வில்லை எடுக்கும் போது, “திண்ணா.. உன்னை வாழ வைக்க போகும் தெய்வம்தான் நீ கையில் எடுக்கும் வில். அதனால் முதலில் செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும். தொழிலுக்கான மரியாதையும் தர வேண்டும். அதனால் வில்லை எடுக்கும் முன்னதாக நம் குலதெய்வத்தையும், […]